நடிகை ஷோபாவை அழித்த பாலு மகேந்திரா! மூடுபனி ஷூட்டிங்கில் நடந்தது என்ன? சீரியல் நடிகை பேட்டி
சென்னை: நடிகை ஷோபாவின் இறப்பு குறித்து பிரபல சீரியல் நடிகை சாந்தி வில்லியம்ஸ் பல விஷயங்களை தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஷோபா தற்கொலை செய்து கொண்ட செய்தி அறிந்ததும் எனக்கு உயிரே போய்விட்டது என்றும் சாந்தி வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

சீரியல்களில் நடித்து வருபவர் சாந்தி வில்லியம்ஸ். இவர் தனது 12 ஆவது வயதில் வியத்நாம் வீடு என்ற திரைப்படத்தின் மூலம் நடிக்க வந்தார். இதைத் தொடர்ந்து மெட்டி ஒலி சீரியலில் சரோவின் மாமியாராக நடித்திருந்தார்.
அவரை அத்தனை பாடுபடுத்தும் கேரக்டரில் நடித்தார். அது போல் தென்றல் படத்திலும் தமிழின் அம்மாவாக நடித்திருந்தார். இவர் தமிழ், மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஒளிப்பதிவாளர் வில்லியம்ஸை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 குழந்தைகள். வில்லியம்ஸ் பார்ப்பதற்கு கரடு முரடாக இருப்பார்.
எனினும் சாந்தியை தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டியே திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் வில்லியம்ஸிற்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் சாந்தி பல பேட்டிகளில் தெரிவித்திருந்தார். கடைசியில் 2005 ஆம் ஆண்டு அவர் இறந்ததாகவும் தெரிவித்தார். மேலும் தான் சேர்த்து வைத்த சொத்துகளை அழித்தார். இதனால் குழந்தைகளுடன் நடுத்தெருவுக்கு வந்து பின்னர் மீண்டு வந்தேன் என்றும் கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இவர் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பல விஷயங்களை பேசியுள்ளார். அப்போது நடிகை ஷோபா தற்கொலை குறித்தும், பாலு மகேந்திரா குறித்தும் சாந்தி பல்வேறு கருத்துகளை பேசியுள்ளார். அவர் கூறுகையில் நானும் ஷோபாவும் தோழிகள். இருவரும் சிறு வயதில் நடிக்கும் போது ஷூட்டிங் முடிந்ததும் விளையாடுவோம்.
என் கணவர் வில்லியம்ஸுக்கு ஷோபாவின் குடும்பத்தினர் என்றால் மிகவும் பிடிக்கும். நானும் அவர்களுக்கு ஒரு மகளாகவே பார்க்கப்பட்டேன். இந்த நிலையில் ஒரு நாள் மூடுபனி படத்தின் ஷூட்டிங்கிற்கு சோபா வந்திருந்தார். அப்போது அவர் மிகவும் சோர்வாக இருந்தார். சோகமாகவும் இருந்தார். நான் ஏன் இப்படி இருக்கிறாய் என கேட்டதற்கு, அதெல்லாம் ஒன்றும் இல்லை என கூறிவிட்டார்.
பிறகு மூடுபனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டார். இதை கேள்விப்பட்டதும் எனக்கு உயிரே போய்விட்டது. என் கணவர்தான் கதவை உடைத்து ஆட்களை மேலே ஏற்றி தூக்கு போட்ட சேலையிலிருந்து அவரது சடலத்தை இறக்கினார். பாலு மகேந்திராதான் ஷோபாவின் வாழ்க்கையை அழித்துவிட்டார். அவரை கண்டாலே எனக்கு பிடிக்காது, நான் முகத்தை திருப்பிக் கொண்டுதான் செல்வேன். இவ்வாறு சாந்தி வில்லயம்ஸ் தெரிவித்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications