அடக்கொடுமையே! மரணத்தை பற்றி முன்பே பதிவிட்ட நடிகை ஸ்ருதியின் கணவர்.. இப்படியெல்லாம் சொல்லி இருக்காரே
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியல் மூலம் பிரபலம் அடைந்த நடிகை ஸ்ருதி சண்முக பிரியாவின் கணவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.
ஸ்ருதி சண்முகப்பிரியாவிற்கும் அவருடைய கணவர் அரவிந்துக்கும் கடந்த வருடம் தான் திருமணம் முடிந்தது.

ஜிம் மாஸ்டராக இருக்கும் அரவிந்த் தான் இறப்பதற்கு சில வாரத்திற்கு முன்பு மரணத்தை பற்றி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு வெளியிட்டு இருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சன் டிவியில் 5 வருடங்களாக ஒளிபரப்பாகி அதிகமான ரசிகர்களால் மறக்க முடியாத சீரியலாக இருக்கும் நாதஸ்வரம் சீரியலில் ராகினி கேரக்டரில் நடித்தவர்தான் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா. இவர் ஸ்கூல் படித்துக் கொண்டிருக்கும் போதே இந்த சீரியலில் ஒரு கேரக்டராக நடித்திருந்தார். இதை தொடர்ந்து இவருக்கு பல சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதைத்தொடர்ந்து பாரதி கண்ணம்மா, வாணி ராணி, கல்யாண பரிசு, பொம்முக்குட்டி அம்மாவுக்கு போன்ற பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில்தான் கடந்த வருடம் இவருக்கு அரவிந்த் சேகர் என்பவரோடு திருமணம் முடிவடைந்தது.

திருமணத்திற்கு பிறகு தொடர்ச்சியாக தன்னுடைய கணவரோடு ரீல்ஸ் வீடியோக்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டு வரும் ஸ்ருதி சண்முகப்பிரியா வேறு எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் ஸ்ருதியின் கணவர் அரவிந்த் ஒரு பாடி பில்டராகவும் தனியாக உடற்பயிற்சி கூடம் ஒன்றையும் நடத்தி வந்தார்.
அதுபோல அவருடைய சிக்ஸ் பேக் உடம்பை கூட வியந்து பார்த்தபடி ஸ்ருதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார். அந்த அளவிற்கு உடல் வலிமையாகவும் இருக்கும் இவர் திடீரென்று மாரடைப்பால் இறந்திருப்பது ரசிகர்களின் மத்தியில் பெருத்த அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருக்கிறது.
அதைத் தொடர்ந்து அதிகமான ரசிகர்களும் பிரபலங்களும் தொடர்ச்சியாக ஸ்ருதிக்கு தங்களுடைய ஆறுதல்களையும் வருத்தங்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அரவிந்த் இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இந்த பதிவினை பார்த்த ரசிகர்கள் இவர் ஏற்கனவே மரணத்தை தெரிந்து கொண்டிருப்பாரோ என்று கலங்கி வருகிறார்கள்.

அந்த வகையில் அந்தப் பதிவில் அரவிந்த்," நல்ல நினைவுகளோடு மரணிக்க வேண்டும். தீராத கனவுகளோடு அல்ல" என்று பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவு உண்மையாகவே ரசிகர்களையும் கலக்கத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இதைக் குறித்து தான் ஸ்ருதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூட எப்போதும் உன்னுடைய நல்ல நினைவுகள் என்னை சுற்றி இருக்கிறது என்று பதிவு வெளியிட்டாரோ என்று கூட ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அது போல ஸ்ருதி சீக்கிரமாக இந்த வருத்தமான நினைவுகளில் இருந்து மீண்டு வர வேண்டும் என்றும் பலரும் கூறி வருகிறார்கள்.
-
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications