ஐயோ கொடுமை.. இப்படி யாருக்கும் ஆககூடாது.. கணவர் இறப்புக்கு பிறகு நடிகை ஸ்ருதியின் உருக்கமான பதிவு
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் சில வாரங்களுக்கு முன்புதான் மரணம் அடைந்திருந்தார்.
திடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்த ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவருடைய இறப்புக்கு பிரபலங்கள் பலரும் வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஸ்ருதி சண்முகப்பிரியா தன்னுடைய கணவர் இறப்பிற்கு பிறகு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதை குறித்து விரிவாக பார்க்கலாம்.
சில நேரங்களில் கடவுள் காதலிப்பவர்களை சேர்த்து வைக்காமல் பிரித்து விடுகிறார். பல நேரங்களில் சிலரை சேர்த்து வைத்திருந்தாலும் அவர்களுக்கான நீண்ட வாழ்க்கையை கொடுப்பதில்லை. அந்த மாதிரி தான் சீரியல் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவின் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது.
நாதஸ்வரம், வாணி ராணி, பாரதிகண்ணம்மா போன்ற பல சீரியல்களில் நடித்த நடிகை புது சண்முகப்பிரியா கடந்த வருடம் தான் அரவிந்த் சேகர் என்பவரை திருமணம் செய்திருந்தார். திருமணத்திற்கு பிறகு நடிந்த சண்முகப்பிரியா சீரியல் நடிப்பதை விட்டு இருந்தார். தன்னுடைய கணவரோடு அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களும் புகைப்படங்களும் வெளியிட்டு வருவார்.
இந்த நிலையில் அரவிந்த் சேகர் திடீரென்று மாரடைப்பால் உயிரிழந்து விட்டார். இது பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஸ்ருதியின் கணவர் இறப்பு குறித்து பல்வேறு வதந்திகளும் பரவி வந்தது. அதாவது நடிகை ஸ்ருதியின் கணவர் பிட்னஸ் பயிற்சியாளராக, ஜிம் வைத்திருக்கிறார் என்றும் அதிகமாக ஸ்ராய்டு பயன்படுத்தியதால் தான் இந்த திடீர் மரணம் வந்திருக்குமோ என்றும் பலர் வதந்தி பரப்பி வந்தனர்.

ஆனால் ஸ்ருதி கணவர் இறந்த சில நாட்களிலேயே வருத்தத்தோடு விளக்கமும் கொடுத்திருந்தார். அதில் என்னுடைய கணவர் ஜிம் டிரைனர் எல்லாம் கிடையாது. அவர் சிவில் இன்ஜினியராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். பிட்னஸ் ஆக இருப்பதில் ஆர்வம் உள்ளவர் அவ்வளவுதான். அதற்காக தேவை இல்லாததை பற்றி எல்லாம் சொல்லி வீட்டில் இருப்பவர்களை கஷ்டப்படுத்தாதீர்கள் என்று வேண்டுகோள் விட்டிருந்தார்.
இந்த நிலையில் ஸ்ருதி சண்முகப்பிரியா இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முறையாக பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். "முதல் முறையாக நீ இல்லாமல் சென்னையில் விட்டு வெளியேறுவது மிகவும் கடினமாக இருக்கிறது. நான் எங்கு சென்றாலும் உன்னையும் நினைவுகளையும் என் இதயத்தில் என்றென்றும் அழைத்து செல்கிறேன். இனிவரும் வாழ்க்கை பயணத்தில் இதையே செய்வேன்" என்று கூறியிருக்கிறார். அதற்கு அதிகமான ரசிகர்கள் தொடர்ச்சியாக சண்முகப்பிரியாவிற்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications