22 வயதில் திருமணம்.. 13 வருட வாழ்க்கை.. ஆனால் இப்போ..! கணவர் குறித்து உருக்கமாக பதிவிட்ட நடிகை ஸ்ருதிகா
சென்னை: நடிகை ஸ்ருதிகா கதாநாயகியாக சினிமாக்களில் நடித்திருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாகத்தான் அதிகமான ரசிகர்களுக்கு பிரபலம் ஆகி இருந்தார். அவர் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கணவர் குறித்து நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
சமூக வலைதளத்தின் மூலமாக காதலித்து திருமணம் செய்து கொண்ட ஸ்ருதிகா தன்னுடைய கணவர் அர்ஜுன் குறித்து அவர்களுடைய திருமண நாளில் சொல்லியிருக்கும் தகவல்கள் ரசிகர்களின் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

நடிகை ஸ்ருதிகா 2002 ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீ திரைப்படத்தில் நடிகர் சூர்யாவோடு கதாநாயகியாக நடித்து அறிமுகமாக இருந்தார். அதற்கு பிறகு ஆல்பம், நலதமயந்தி, தித்திக்குதே என்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் பிறகு படிக்க வேண்டும் என்பதற்காக சினிமாவிலிருந்து விலகி இருந்தார். அதற்கு பிறகு பல வருடங்களுக்கு பிறகு விஜய் டிவியில் குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு அந்த சீசன் டைட்டிலையும் வெற்றி பெற்று இருந்தார்.
இவருடைய கலகலப்பான பேச்சு அதிகமான ரசிகர்களை கவர்ந்திருந்தது. குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு ஸ்ருதிகா சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதோடு அவர் அவருடைய கணவர் அர்ஜுனை பேஸ்புக்கில் சந்தித்து காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி 13 வருடங்கள் ஆகியிருக்கும் நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ருதிகா நீண்ட பதிவு வெளியிட்டிருக்கிறார்.
அதில் அவர் கூறியதாவது, என்னுடைய சிரிப்பு, சந்தோஷம், மகிழ்ச்சிக்கு பின்னாடி இருக்கக்கூடிய நபர் இவர்தான். கடவுள் எனக்கு கொடுத்த மிக சிறந்த பரிசு.. திருமணமாகி 13 வருடங்களுக்கு பிறகு இந்த விஷயத்தை நான் சொல்கிறேன். ஏனென்றால் இதுதான் உண்மை. எனக்கு 22 வயது இருக்கும் போது நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். நாட்களாக இவரையும் இவரது நகைச்சுவை எனக்கு பிடித்து விட்டது.
என்னுடைய சின்ன சின்ன வெற்றியை வளர்ச்சியையும் பார்த்து இவர் ஆனந்தப்படுவார். ஒரு குழந்தையை பெற்றோர் எப்படி பாராட்டுவார்களோ அதுபோல இவர் என்னை பாராட்டுவார். நான் எந்த அளவிற்கு கடினமாகவும் அன்பாகவும் சிறப்பாகவும் இருக்கிறேன் என்றால் அதற்கு இவரும் ஒரு காரணம். எங்களது குழந்தைக்கு சிறந்த தந்தையாகவும் இவர் இருக்கிறார். என்னுடைய கனவு அனைத்தும் நினைவாவதற்கு இவரும் ஒரு காரணம்.
தூண் போல எனக்கு உறுதுணையாக இருக்கிறார். என்னுடைய ஆசைகளை நிறைவேற்றுவதில் இவரும் உடனே நிற்கிறார். நான் ஜெயிக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பெருமைப்பட்டு அன்போடு இருக்கிறார். ஆனால் என்னுடைய வெற்றிக்கு ஒருபோதும் இவர் உரிமை கொண்டாடியதில்லை. மோசமான தருணங்களில் என் மீது அன்பு செலுத்தி எனக்குள் இருக்கும் குழந்தையை அப்படியே வைத்து அதனை ரசித்து இன்னும் குழந்தையாக்கியவர் இவர்தான்.
திடீரென்று எனக்கு உடம்பு முடியாமல் போனால் நான் தேடும் ஒருவராக இவர் மட்டுமே இருக்கிறார். இவரை விட என்னை யாராலும் சரியாக பார்த்துக்கொள்ள முடியாது. அளவே இல்லாமல் காதலிப்பது எப்படி என்பதை தான் இவரிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன். கடந்த 13 வருடங்களாக ஒவ்வொரு தினத்தையும் கொண்டாட்டமாக இவர் எனக்கு கொடுத்திருக்கிறார். அன்பு செலுத்தி அக்கறை காட்டி எனக்கு மட்டுமல்லாது என்னுடைய பெற்றோரையும் அவருடைய பெற்றோராக நினைத்து இன்று நான் இந்த இடத்தில் இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் அவர்தான்.

அதுபோல நம்மை வளர விட்டு அதன் மூலம் பெருமைப்பட்டு அதனை ரசித்து ஒவ்வொரு விஷயத்துக்கும் ஆறுதல் கூறி நம்மை நமக்கே ஸ்பெஷலாக ஆக்கும் ஒரு ஆண் கிடைப்பது மிக்க மகிழ்ச்சி.... இப்படி ஒரு கணவரை எனக்கு கொடுத்ததற்கு கடவுளுக்கு நன்றி... இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அர்ஜுன்... என ஸ்ருதிகா பதிவிட்டு இருக்கிறார். ஸ்ருதிகாவின் இந்த பதிவு ரசிகர்களின் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த பதிவிற்கு அதிகமான பிரபலங்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
-
நீயா நானாவில் யாமினி சொன்ன காதல் கதை.. கண்கலங்கி நின்ற கோபி நாத்.. கடைசியில் சொன்ன ‘நச்’ அட்வைஸ் -
சித்திரை திருநாளில் கிடைத்த பரிசு.. இரண்டு வருடம் கழித்து பிறந்த குழந்தை.. பிரதீப் ஆண்டனி நெகிழ்ச்சி பதிவு -
திவாகருக்குள் தான் ஜாதி வெறி இருக்கு.. குக் வித் கோமாளியில் நடந்தது இதுதான்! கானா வினோத் ஆதங்கம் -
“குக் வித் கோமாளி” போட்டியாளர் மனைவியிடம் திவாகர் ஆபாசமாக அப்படி பேசினாரு! அதனால் தான் பிரச்சனை! மாகாபா விளக்கம் -
சிறகடிக்க ஆசை: மனோஜ்க்கு நடந்த நிச்சயதார்த்தம்.. விஜயாவை சிக்க வைத்த ஸ்ருதி.. முத்துக்கு தெரிந்த விஷயம் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications