பிரபல நடிகை "ஷ்ருதிகா”... நடிகர் கலையரசனோடு இப்படி ஒரு பந்தமா? 15 வருஷமாமே.. வெளிவந்த ரகசியம்
சென்னை: நடிகை ஷ்ருதிகா நடிகர் சூர்யா நடித்த "ஸ்ரீ" படத்தில் நடித்து பிரபலமானவர். ஆனால் அந்த நேரத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று வெள்ளித்திரை விட்டு விலகி இருந்தார்.
இந்த நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் அறிமுகம் ஆகி மீண்டும் தற்போது சின்னத்திரையில் பிரபலமாக மாறி இருக்கிறார்.

இந்த நிலையில் நடிகர் கலையரசனோடு இவர் எடுத்த புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கலையரசன் பற்றியும் இவரைப் பற்றியும் பல தகவல்களை அதில் பகிர்ந்திருக்கிறார். அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
திரைப்படங்களில் கதாநாயகியாக அறிமுகமாகி தான் நடித்த படங்கள் எதுவும் தனக்கு சரியாக வரவில்லை என்றதும் திருமண பந்தத்தில் அடி எடுத்து வைத்து ஒரு குழந்தைக்கு அம்மாவான ஷ்ருதிகா தற்போது மீண்டும் சின்னத்திரையில அடி எடுத்து வைத்திருக்கிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பலருடைய மனதில் தேவதையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஷ்ருதிகா தன்னுடைய மனதில் இருக்கும் ஆசையை வெளியிட்டு பலரையும் ஃபீல் பண்ண வைத்திருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி மூன்றாவது சீசனில் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஷ்ருதிகா சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு போட்டியாளர்களும் ரசிகர்களால் அதிகமாக ரசிக்கப்பட்டு வருகின்றனர்.
சின்னத்திரை சீரியல்களுக்கு மாற்றாக இந்த ரியாலிட்டி ஷோ இருப்பது ரசிகர்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியாக இருந்து வருகிறது. சீரியல்களில் அழுகாச்சி சீன்களை பார்த்து பதறிப் போய் இருந்த ரசிகர்களுக்கு இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி மாற்று மருந்தாக இருந்து வருகிறது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு போட்டியாளர்களும் அதிக அளவில் பிரபலம் அடைந்து விடுகின்றனர்.

அந்த மாதிரி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலமடைந்த ஷ்ருதிகா இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு சாம்பியன் நிகழ்ச்சியிலும் ஒரு நடுவராக கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நடிகர் கலையரசனோடு சமீபத்தில் அவர் எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்ட அவர் கலையரசன் பற்றி சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அதில், இது என்னுடைய கல்லூரி நண்பர்கள்.. நான் ஆரம்பத்தில் பெண்கள் பள்ளியில் படித்த பிறகு புதியதாக ஒரு காலேஜில் சேர்ந்தேன்.
அது எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. ஏனென்றால் அந்த காலேஜ் ஆண்கள் மற்றும் பெண்கள் படிக்கும் காலேஜ் என்பது தான். அது எனக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய சந்தோசங்கள் கிடைப்பதற்கு உதவியது. இந்த இரண்டு தேவதைகளை சந்தித்ததால் என்னுடைய வாழ்க்கையில் பெரிய சந்தோஷங்களை காட்டினார்கள். நாம் குழந்தையாக இருந்தாலும் சிறந்த நண்பர்களாக இருக்க முடியும். பாதுகாப்பாக இருக்க முடியும் என்று எனக்கு காட்டியவர்கள் இவர்கள்தான்.

அந்த நேரத்தில் தான் நான் திடீரென்று காலேஜ் விட்டு வெளியே வர வேண்டிய நிலை ஆயிற்று. அப்போ இவங்க எல்லாம் காலேஜ் முடிகிறதுக்கு ரெண்டு வருஷம் இருந்தது. அப்போ எனக்கு வேதனையாய் இருந்தது. ஆனாலும் எனக்கு நான் ஏமாற்றம் அடையாமல் என்னை பார்த்துக் கொண்டார்கள். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்புவரைக்கும் நாங்க தொடர்பில் இருந்தோம்.
ஆனால் பிறகு எல்லோரும் பிசியாக மாறிவிட்டதால் எங்களால் முன்னாடி மாதிரி பேச முடியவில்லை. ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நேற்று சந்தித்தோம். எங்களுக்குள் அதே நட்பு அப்படியே இருக்கிறது. அந்த பைத்தியக்காரத்தனமும், ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு கேலி செய்வதும் எங்களுக்கு மாறவே இல்லை. 15 வருட நட்பு இன்னும் பல வருடம் தொடரும் என்று கலையரசன் மற்றும் கிரண் என்பவரை குறித்து நடிகை ஷ்ருதிகா மகிழ்ச்சியோடு பதிவு வெளியிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications