பிரபல பாடகர், காமெடியன் கூடவா? கவர்ச்சி நடிகைகள்ன்னா தொக்கா? சோனா ரொம்ப நொந்துட்டாங்க: பிரபலம் நறுக்
சென்னை: அதென்ன கவர்ச்சி நடிகைகள் என்றால் தொக்கா? அவர்களுக்கென்று பின்புலம் இல்லையென்றால் இப்படித்தான் செய்வீர்களா என்று கேட்க தோன்றுகிறது என பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.. அத்துடன் கவர்ச்சி நடிகை சோனா குறித்து பேட்டி தந்துள்ளார். அதில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
AG Modern Media யூடியூப் சேனலில் பேசியுள்ள பயில்வான் ரங்கநாதன், "யாராவது ஒருத்தர் வடிவேலுவை பற்றி நல்லதா சொல்றாங்களா?ன்னு பார்த்தால் இல்லவே இல்லை. வடிவேலுவுடன் ஜோடியாக சேர்ந்து நடித்த அத்தனை நடிகைகளும், அட்ஜஸ்ட்மென்ட் செய்துள்ளார்கள். ரத்த கண்ணீர் வடித்துள்ளார்கள்..

அதேபோல நடிகர்களுக்கும் வடிவேலு நல்லது செய்யவில்லை.. வாய்ப்புக்காக வீட்டில் தவம் கிடப்பவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு தருவார்.. ஆனால், ஒருநாளைக்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே தருவார்.. அதற்கு மேல் தரமாட்டார்.. அதுவும் அவர்களுக்கு 1 சீன்தான் நடிக்க தருவார். அவர் கோடிக் கணக்கில சம்பளம் வாங்கினால், அவருடன் நடித்தவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே தருவார்.
கவர்ச்சி நடிகை சோனா, 2001-ல் பூவெல்லாம் உன் வாசம் படத்தில் அறிமுகமானார்.. நல்ல அழகு, பார்ப்போரை கவரும் கண்களை கொண்டவர்.. பல படங்களில் கவர்ச்சியாக நடித்தார். ஆனாலும், கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு என 300 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார்.
சிகரெட் பிடித்து கொண்டே நலம் விசாரித்தார்
அவர் சமீபத்தில், வாழ்க்கை வரலாற்றை படமாக்குவதாக சொன்னார்.. திரைக்கதை எழுதி இயக்குபவரும் சோனாதான். சமீபத்தில், அவரை டப்பிங் ஸ்டுடியோவில் சந்தித்தேன்.. தொப்பி அணிந்து, சிகரெட் பிடித்துக் கொண்டே என்னிடம் நலம் விசாரித்தார்.
அப்போதுதான், தன்னுடைய சொந்த வாழ்க்கையை படமாக்கபோவதாக சொன்னார். இந்த படத்தை எடுக்க பலர் முன்வந்தாலும், வெளியாட்கள் மீது நம்பிக்கை இல்லாததால் தானே அந்த படத்தை எடுக்க போவதாக கூறினார்.. பாண்டிச்சேரியில் முழு ஷூட்டிங்கை முடித்துவிட்டேன் என்றார்.. தமிழ்நாட்டில் எடுக்காமல் எதுக்காக பாண்டிச்சேரி என்று கேட்டேன்.
வெங்கட் பிரபு, பிரேம்ஜி, சரண்
அதற்கு சோனா, இங்கே தான் படம் எடுக்க இடைஞ்சல் செய்துவிட்டார்களே? கனிமொழி என்ற படத்தை தயாரித்து, சில கோடிகளை இழந்தேன்.. ஜெய் அதில் ஹீரோவாக நடித்தார்.. ஜெய் என்னையும் பயன்படுத்தி கொண்டார்.. பிறகு என்னிடம் பணம் வாங்கி கொண்டு, படம் இயக்குவதாக சொல்லி வெங்கட் பிரபு ஏமாற்றினார்.. வெங்கட்பிரபு, பிரேம்ஜி, சரண், மூன்று பேருமே என்னை ஏமாற்றிவிட்டார்கள்.. கொடுத்த பணத்தை கேட்டாலும் தரவில்லை.. நான் தனி நபராக நின்று அவர்கள் மீது புகார் தந்தேன்.
வடிவேலுவுடன் நடிக்க மாட்டேன்
ஒவ்வொரு முறை படம் எடுக்க முயற்சித்தபோதெல்லாம் தடை எழுந்தது. அதனால்தான் பாண்டிச்சேரியில் இப்போது படம் எடுத்து முடித்துள்ளேன். குசேலன் படத்தில் மட்டும்தான் வடிவேலுவுடன் நடித்தேன். அதற்கு பிறகு வடிவேலு சிபாரிசு செய்து 16 படங்கள் வாய்ப்பு வந்தது.. நான் மறுத்துவிட்டேன். வடிவேலு நடித்தால் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டேன்.
ஒரு கோடி ரூபாய் நடித்தாலும் அவருடன் நடிக்க மாட்டேன். சினிமா வாழ்க்கையில் இப்படிப்பட்ட பல பிரச்சனைகளை சந்தித்தாலும், அனைவருமே வடிவேலுவை கழுவி கழுவிதான் ஊற்றுவார்கள். நான் வெளியில் அதை சொல்ல வேண்டிய அவசியமில்லை. பிச்சை எடுத்தாலும் எடுப்பேன், வடிவேலுவுடன் நடிக்க மாட்டேன் என்றார் சோனா.
விரைவில் பேட்டி
தென்னிந்திய நடிகர் சங்கம், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் சொல்லக்கூடாதா? என்று கேட்டேன்.. அங்கே லெட்டர் தரணும்.. ஏகப்பட்ட விஷயங்களை கேட்பாங்க.. அப்பறம் அந்த புகார் கிணத்துல போட்ட கல் மாதிரி இருக்கும்.. எனக்கு நீதி கிடைக்காது" என்றார் சோனா.
அதென்ன கவர்ச்சி நடிகைகள் என்றால் தொக்கா? அவர்களுக்கென்று பின்புலம் இல்லையென்றால் இப்படித்தான் செய்வீர்களா என்று கேட்க தோன்றுகிறது.. விரைவில் சோனாவை நான் பேட்டி எடுப்பேன்" என்றெல்லாம் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications