நல்லா கல்யாணம் பண்ணிக்கங்க.. யார் வேணாம்னா.. அதை மட்டும் கொஞ்சம் காட்டலாம்ல!
சென்னை: கல்யாண வீடு சீரியல் நடிகை ஸ்பூர்தி கவுடாவுக்கு கல்யாணம்.. எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ஆனால் வருங்கால கணவரின் முகத்தை கூட காட்டாமல் சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார் ஸ்பூர்தி கவுடா.
இதைப் பார்த்த ரசிகர்கள், நல்லா தாராளமா கல்யாணம் பண்ணிக்கங்க.. ஆனால் வருங்கால கணவர் முகத்தை ஏன் இப்படி மறைச்சு வச்சிருக்கீங்க.. கொஞ்சம் காட்டலாம்ல என்று செல்லமா கேட்டு வருகின்றனர்.
சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாண வீடு சீரியல் சூர்யா கேரக்டரில் நடித்து கொண்டு இருந்தவர் ஸ்பூர்தி கவுடா. தற்போது இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார் . தனக்கு திருமணம் அதனால் இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டேன் என்று கூறியிருந்தார்.

ஸ்பூர்தி கவுடா
இந்த நிலையில் ஸ்பூர்திக்கு இப்போது நிச்சயதார்த்தம் முடிந்து இருக்கிறது. அந்த போட்டோக்களை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார் .அதைப் பார்த்ததும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை கூறி வருகிறார்கள். ஆனால் அவருடைய நிச்சயதார்த்த போட்டோக்களில் தனது வருங்கால கணவரின் முகத்தை காட்டாமல் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.

ஸ்பூர்தியால் ஏமாந்த ரசிகர்கள்
இது ரசிகர்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது. அந்த திருமுகத்தை இந்தப் பக்கமாக கொஞ்சம் காட்டுனா என்னவாம்? ஜோடி பொருத்தம் எப்படி இருக்கு என்று பார்ப்போம்ல என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள் . ஆனால் அவர் விதவிதமான போட்டோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். எதிலுமே அவருடைய வருங்கால கணவரின் முகம் நன்றாக தெரியவில்லை.

ஏன் காட்ட மாட்டேங்குறார்
ஒவ்வொரு பெண்ணிற்கும் திருமணம் என்பது மறக்க முடியாத நிகழ்வு தான் அது போல தான் திருமணத்திற்கு முன்பு நிச்சயதார்த்தமும். அதில் பலரும் புகைப்படங்களை எடுத்து வைத்திருப்பார்கள். தங்களுடைய பிந்தைய நாட்களிலும் தங்களின் சந்ததியினரும் இந்த புகைப்படங்களை பார்த்து ஆச்சரியப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசையாக தான் இருக்கும். ஆனால் இவர் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படம் என்னடா இப்படி பண்ணி இருக்கிறது என்று கூறும் அளவிற்கு இருக்கிறதாம்.

ரெட் தேவதை
சிவப்பு நிற உடையில் தேவதை போல அலங்காரத்துடன் இவர் இருக்க கருப்பு நிற கோட் சூட்டில் ஜிம் பாய் போன்று இவருடன் இவரது வருங்கால கணவர் முதுகைக் காட்டிக் கொண்டு இருக்கிறார் . அதிலும் ஸ்பூர்தி கவுடா தனது வாயில் ஒற்றை விரலை வைத்து உஷ் என்று சொல்வது போல போஸ் கொடுத்திருக்கிறார். இது என்ன அர்த்தம் என்று ரசிகர்களுக்கு தெரியவில்லையாம். எதனால் இப்படி தன்னுடைய வருங்கால கணவரை பொத்தி பொத்தி வைத்து இருக்கிறார் என்று பல ரசிகர்களும் கேட்டு வருகிறார்கள்.

மாடலிங் தேவதை
காதலிக்கும் போதே பலர் கன்னாபின்னாவென்று போட்டோவை எடுத்து குவிக்கும் நிலையில் இப்படி நிச்சயதார்த்தத்தில் கூட போட்டோவில் மாப்பிள்ளையை ரசிகர்களிடம் காட்டாமல் வைத்திருக்கிறீர்களே என்றும் சில ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள் .இவர் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்துள்ளார் .இவருக்கு மீடியாவில் பணிபுரிய ரொம்பவும் ஆசையாம். அதனால் மாடலிங்களில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

கூட்டி வந்த திருமுருகன்
இவரது முதல் சீரியல் கலர்ஸ் சூப்பர் டிவியில் ஒளிபரப்பான துளசிதாஸ் என்னும் கன்னட சீரியல் தானாம். இந்த சீரியலில் ஸ்ரீவித்யா எனும் கேரக்டரில் சீரியலின் கதாநாயகியாக நடித்திருந்தார். அதன் பிறகு உதயா டிவியில் ஒளிபரப்பான சூப்பர் கபடி. கலர்ஸ் சூப்பர் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கு பெற்றிருக்கிறார் . இவரின் கன்னட சீரியலை பார்த்த திருமுருகன் தன்னுடைய கல்யாண வீடு சீரியலில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்திருக்கிறார் .அதன் மூலமாக தான் இவர் தமிழில் அறிமுகமாகியிருக்கிறார்.

தமிழ் வராட்டியும் பரவாயில்ல!
தமிழில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. காரணம் இவருக்கு தமிழ் சரியாகப் பேச வராமல் தத்தித் தத்தி பேசியதால்! சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் பொதுவாகவே நெடுந்தொடர்கள் ஆகவே இருக்கும். அதிலும் திருமுருகன் இயக்கும் சீரியல்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அதில் நடிக்கும் நடிகர்கள் தொடர்ந்து நடித்துக் கொண்டே இருக்கலாம். அந்த அளவிற்கு அவர் இயக்கும் சீரியல்கள் எல்லாமே நெடுந்தொடர்கள் தான் .

கோலாகல கல்யாண வீடு
அந்த வகையில் கல்யாண வீடு சீரியலும் நெடுந்தொடராக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் இவர் சூர்யா கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்ததால் தமிழ் ரசிகர்கள் மனதிலும் நல்ல ஒரு இடத்தைப் பெற்றுவிட்டார் . இந்த சீரியல் நன்றாக போய் கொண்டிருந்த நேரத்தில்தான் இந்த லாக்டோன் வந்து சீரியலை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது . அந்த சமயத்தில் இவர் திடீரென்று இந்த சீரியலில் தொடர்ந்து இனி நடிக்கப் போவதில்லை என்று செய்தியை வெளியிட்டு இருந்தார்.

மிஸ் பண்றோமுங்க
இந்த செய்தியை கேட்டதும் இவருடைய ரசிகர்கள் இவரை ரொம்பவே மிஸ் பண்ணி இருக்கிறார்கள். அப்போதுதான் தான் விலகியதற்கான காரணத்தையும் கூறியிருந்தார். இவர் இந்த சீரியலில் இருந்து திடீரென்று விழகியதும் பல வதந்திகள் பரவ தொடங்கியது. அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக தான் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் மூலமாக ரசிகர்களுக்கு தான் சீரியல் தொடராதற்கான காரணத்தை கூறி இருந்தார். தனக்கு விரைவில் திருமணம் நடக்கப் போவதாகவும் அதற்காக இந்த சீரியலில் இருந்து விலகி உள்ளதாகவும் கூறி இருந்தார். அதுபோல இப்போது அவருக்கு நிச்சயதார்த்தமும் முடிந்து விட்டது .இனி விரைவில் திருமணம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications