அந்த நடிகை வாயில கேவலமா நாற்றம் அடிக்கும்.. இரவு பார்ட்டியில் நடிகைகள் அடிக்கும் கூத்து.. ஸ்ரீ ரெட்டி ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா உட்பட சிலர் போதைப்பொருள் பயன்படுத்திய விவாகரத்தில் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் இதுகுறித்து சில நடிகர் நடிகைகள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகை ஸ்ரீ ரெட்டியும் சினிமா துறையில் நடிகை, நடிகர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவது குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.

நடிகை ஸ்ரீ ரெட்டி சில வருடங்களுக்கு முன்பு பேசிய விஷயம் அந்த நேரத்தில் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. அப்போது அவர் பேசும்போது நான் ஒரு நடிகரின் இரவு பார்ட்டிக்கு போயிருந்தேன், அங்கிருந்த இரண்டு நடிகர்கள் என்னுடைய கைகளை பிடித்து வைத்து விட்டனர். ஒரு நடிகர் என்னுடைய உதட்டில் போதை பொருளை தடவி விட்டார். அதற்கு பிறகு எனக்கு இரண்டு நாட்களாக அந்த உதடு மறத்துப்போய் இருந்தது. என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. ஏதோ ஒரு வித்தியாசமான உலகத்தில் நான் இருப்பது போன்று இருந்தேன் என்று பேசி இருந்தார்.

Sri Reddy Srikanth Trisha

ஸ்ரீ ரெட்டி குற்றச்சாட்டு

அதுபோல சில இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள் என்று ஆடைகளை கலைந்து போராட்டம் நடத்தி இருந்தார். இது அந்த நேரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் அதற்குப் பிறகு ஸ்ரீ ரெட்டி பற்றிய விஷயம் அப்படியே அமைதியாக இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் சினிமாத்துறையில் சில நடிகர்கள் போதை பொருள் வழக்கில் கைதானதை தொடர்ந்து ஸ்ரீ ரெட்டி ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.

நடிகை ஸ்ரீ ரெட்டி பேட்டி

ஸ்ரீ ரெட்டி பேசும்போது, இந்த போதைப்பொருள் பாட்டியில் நடிகை நடிகர்கள் என பலர் கலந்து கொள்கிறார்கள். அதுவும் பெரிய நடிகைகளும் கலந்து கொள்கிறார்கள். போதை பொருள் பயன்படுத்தும் முன்பு அவர்களிடம் காதல் தோல்விகள் குறித்து பேசக்கூடாது
என்றும் ஜாலியாக இருக்க வேண்டும் என்றும் அந்த நடிகைகள் சொல்லி விடுவார்கள். போதைப்பொருள் உட்கொண்டாலே சிரிப்பு சிரிப்பாக தான் வரும்.

போதைப்பொருள் பழக்கம்

அதுபோல நடிகைகள் அதிக அளவில் போதைப் பொருள் எடுத்துக் கொள்வதால் மறுநாள் காலையில் கேவலமான நாற்றத்துடன் சூட்டிங்க் போவார்கள். அதனால் சில நடிகைகள் பற்றி சில நடிகர்களே, அவ வாயில கேவலமா நாற்றம் அடிக்கும், நல்லா குடிச்சிட்டு வருவான்னு சொல்லுவாங்க. பொதுவாக நடிகைகள் தோல் பளபளப்பாக இருக்கவும், மூன்று நாட்கள் தொடர்ந்து வேலை செய்தாலும் சோர்வு இருக்காது என்பதற்காகவும் கண்களுக்கு கீழ வரக்கூடிய கருவளையம் வராது என்றெல்லாம் சொல்லித்தான் போதை பொருள் எடுத்துக் கொள்கிறார்கள் என்று பகீர் தகவலை ஸ்ரீ ரெட்டி சொல்லி இருக்கிறார்.

நயன்தாரா, திரிஷா பற்றி ஆதங்கம்

அதோடு நடிகை திரிஷா மற்றும் நயன்தாரா பற்றியும் பேசி இருந்தார். அதில் திரிஷா, நயன்தாரா எல்லாம் போதை பொருள் விவாகாரம் பற்றி எதுவும் பேசாமல் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு பணமும் பிசினஸ் தான் முக்கியம். இதனால் தான் நான் இந்த விவாகரத்தில் தலையிடவில்லை. குறைந்த பட்சம் ரசிகர்களுக்காக கூட அவர்கள் ட்வீட் போட மாட்டார்கள். நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார்னு எல்லாரும் சொல்லுறீங்க ஆனால் மீடு விவாகரத்தின் போது பெண்களுக்கு ஆக ஒரு ட்வீட் போட்டு இருப்பாரா? என்று ஸ்ரீ ரெட்டி அந்த பேட்டியில் கேள்வி எழுப்பி இருக்கிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் அதிகமாக வைரல் ஆகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+