Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்லாரும் என் காலையே பார்க்க ஆரம்பிச்சாங்க! நான் எதுக்கு உயிரோடு இருக்கணும்! சுதா சந்திரன் கண்ணீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் எதுக்காக உயிரோடு இருக்க வேண்டும் என என் தந்தையிடம் கேட்டேன். அப்போது அவர் சொன்ன வார்த்தைதான் எனக்கு ஊக்கத்தையும் நம்பிக்கையையும் தந்தது என நடிகை சுதா சந்திரன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

நடிகை , பரதநாட்டிய கலைஞர், சின்னத்திரை நடிகை என பன்முகத்திறமை கொண்டவர் சுதா சந்திரன். இவர் வசந்த ராகம், வைதேகி காத்திருந்தாள், சின்னதம்பி பெரியதம்பி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

television Sudha Chandran

பின்னர் அவர் நாகினி சீரியலில் நடித்தார். இதன் மூலம் மேலும் பிரபலமடைந்த சுதா சந்திரன், தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். தனது மேக்கப், நெற்றி வகுட்டில் குங்குமத்திற்கு கீழ் வைக்கப்படும் டிசைன் பொட்டு, புடவை, அணிகலன்கள் உள்ளிட்டவைகளுக்கு இவருக்கு ரசிகர்கள் ஏராளம் உண்டு.

மும்பையில் வீடு

இவர் மும்பையில் இருக்கிறார். இவர் கலாட்டா தமிழ் சேனலுக்கு ஒரு பேட்டி அளித்திருக்கிறார். அதில் தனது வாழ்க்கை குறித்தும் தனக்கு நேர்ந்த விபத்து குறித்தும், அதிலிருந்து பீனிக்ஸ் போல் பறந்தது எப்படி என்பது குறித்தும் அவர் விவரித்துள்ளார்.

தாய் தைரியசாலி

அவர் கூறுகையில் எனது தாய்தான் தைரியமான பெண், என் தந்தைக்கு அவர் நிறைய தைரியம் சொன்னார். என் தாய் இறந்ததும் அவர் மனமுடைந்துவிட்டார். பிறகு அவருக்கு மெமரி லாஸ் உள்ளிட்ட பிரச்சினைகள் வந்தது.

அடையாளம் தெரியாத தந்தை

ஒரு கட்டத்தில் திடீரென என்னையே யாரு என கேட்ட தருணங்கள் நடந்தன. என் அப்பாவின் தங்கை பெயர் சாந்தார். திடீரென என்னை சாந்தா என்றே அழைப்பார். கடைசி காலத்தில் அவருக்கு நான் மகள் என்ற அடையாளம் தெரியாமல் போனது. அவர் இறந்து கடந்த 3 ஆண்டுகள் ஆகின்றன.

டிவியில் பார்த்தால்

ஆனால் என்னை டிவியில் பார்த்தால், என் கணவரிடம் She is my daughter என சொல்வார். ஆனால் நேரில் அடையாளம் தெரியாது. அந்த அளவுக்கு மெமரி லாஸ் வந்துவிட்டது. நான் தமிழ் பிராமணர் சமூகத்தை சேர்ந்த பெண். கேரளாவில் இருந்ததால் தமிழ் அந்த அளவுக்கு தெரியாது. எனக்கு வசந்த ராகம் படத்தில் நடித்த போது விஜயகாந்த்தான் தமிழ் பேச கற்றுக் கொடுத்தார்.

பிரபு எனக்கு நல்ல பிரண்ட்

அது போல் பிரபுவுடன் இன்றும் டச்சில் இருக்கிறேன். சென்னைக்கு வந்தால் வீட்டுக்கு வா என அழைப்பார். மேலும் அவருடன் நடித்த போது 4 கேரியரில் சாப்பாடு வரும். என்னையும் அழைத்து சாப்பிடச் சொல்வார்.

காய்கறிகள்

என் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை நான்தான் வாங்குவேன். அதில் எனக்கு ஒரு மகிழ்ச்சி. தேவையில்லாமல் செலவு செய்ய மாட்டேன். நான் வாங்கும் மேக்கப் ஐட்டங்கள் எதுவுமே 200 ரூபாய்க்கு மேல் தாண்டாது. லிப்ஸ்டிக் தீர்ந்து விட்டால் அதில் கடைசியாக இருப்பதை கைகளால் நோண்டி நோண்டி ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டு அவை எல்லாம் ஒரு புதிய கலரை கொடுக்கும். பிறகு அதை போட்டால், பார்ப்பவர்கள், "மேம் லிப்ஸ்டிக் என்ன பிராண்ட், எவ்வளவு ரூபாய் , காஸ்ட்லியா" என கேட்பார்கள்.

300 ரூபாய்க்கு புடவை

அது போல் புடவைகளும் 300 ரூபாய் அல்லது 400 ரூபாய் அவ்வளவுதான், அதற்கு மேல் போகாது. என்னிடம் நெட் பேங்கிங், ஜிபே, போன் பே எல்லாம் கிடையாது. எனது அசிஸ்டென்டிடம் இருக்கிறது. நான் சாதாரணமாக செய்யும் மேக்கப்புகள் டிரெண்டாகிறது.

அம்மா ரோல்

அம்மா ரோலுக்கு ஏன் இத்தனை மேக்கப் என கேட்பார்கள். ஆனால் இப்படிப்பட்ட அம்மா வேண்டும் என நிறைய பேர் நினைப்பார்கள். அது கேரக்டருக்கு சூட் ஆவதால் போடுகிறேன் என்பேன். நான் நடித்த படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய நபரை திருமணம் செய்து கொண்டேன்.

8 ஆண்டுகள் நண்பர்கள்

அவர் பஞ்சாபி. நானும் அவரும் 8 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்தோம். திடீரென என் வீட்டில் கல்யாண பேச்சு வந்தது. அப்போது நான் அவரிடம் போய், என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா என கேட்டேன். அவரும் எனக்கு டைம் கொடு என்றார். நானும் செப்டம்பர் 2 ஆம் தேதி சொல்லிவிட்டு செப்டம்பர் 4ஆம் தேதி திருமணம், 2 நாள் டைம் போதும் என்றேன்.

30 ஆண்டுகளாச்சு

அதே போல் நாங்கள் அவசர அவசரமாக 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு அவர் வீட்டிற்கு சென்றார். நான் அன்று மாலை விமானத்தில் சென்னையில் ஒரு நடன நிகழ்ச்சிக்காக வந்துவிட்டேன். என்னுடைய தூணே அவர்தான். என்னை அந்தளவுக்கு பார்த்துக் கொள்கிறார். எனது கரியருக்கு உறுதுணையாக இருக்கிறார். அதிகம் பேச மாட்டார். ஆனால் பேசும் சில வார்த்தைகளும் அர்த்தமுள்ளதாக இருக்கும்.

குழந்தைகள் கிடையாது

எங்களுக்கு குழந்தைகள் கிடையாது. இது குறித்து சிலர் எங்களை பரிதாபமாக பார்ப்பார்கள். என்ன செய்வது விதி என்றால் அனுபவித்துதானே ஆக வேண்டும். குழந்தையை தத்தெடுத்துக் கொள்ள வேண்டும் என எங்கள் இருவருக்குமே தோன்றவில்லை.

16 வயதில் நடந்த விபத்து

எனக்கு 16 வயதில் விபத்து நடந்தது. அதாவது எங்கள் குலதெய்வம் வயலூர் முருகன் கோயில். அந்த கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த போதுதான் விபத்து நடந்தது. அதில் பேருந்து பெரும்பகுதி சேதமடைந்ததால் என் காலை இழக்க வேண்டிய நிலை வந்தது.

திருச்சி மருத்துவமனை

முதலில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு சென்னை விஜயா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டேன். அங்கு எலும்பு சிகிச்சை நிபுணர்கள் என்னை பரிசோதித்தனர். கால் மிகவும் பாதிக்கப்பட்டுவிட்டதால் காலை எடுக்க வேண்டும் என்றார்கள். காலை எடுக்காவிட்டால் உயிர் போகும் என்றார்கள்.

காலை இழந்தேன்

இதனால் என் தந்தை காலை எடுக்க சம்மதித்தார். என் நிலையை என் தாயால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் என்னிடம் என் தந்தை வந்து, "நாளை உனக்கு ஆபரேஷன், காலை எடுக்க போகிறார்கள்" என்ற விஷயத்தை சொன்னார். அப்போது அதிர்ச்சி அடைந்து "நான் எதுக்காக உயிரோடு இருக்கணும், கால் இல்லாமல் எப்படி வாழ்வது" என கேட்டேன்.

தந்தை பக்கபலம்

அதற்கு என் தந்தை "நீ எங்களுக்காக உயிர் வாழ வேண்டும். உனக்கு துணையாக நான் நடப்பேன்" என்றார். நானோ என்னால் உங்களுக்கு தொல்லை என்றேன். ஆனால் அப்பா எனக்கு தைரியத்தை கொடுத்து நம்பிக்கையை கொடுத்தார். பிறகு செயற்கை கால் பொருத்திக் கொண்டு 3 ஆண்டுகள் நான் நடனத்தை பிராக்டீஸ் செய்தேன்.

செயற்கை கால்

செயற்கை காலை பொருத்திக் கொண்டதால் எனக்கு அடிக்கடி சுளுக்கு பிடிக்கும். அப்போது பிசியோதெரபிஸ்ட் பக்கத்தில் இருந்து சரி செய்தார்கள். எனது காலை எடுத்த போது, என் மருத்துவரிடம், "என்னால் நடனம் ஆட முடியுமா" என கேட்டேன். அதற்கு, "Why not, u can!" என்றார். பின்னர் எனது நாட்டிய நிகழ்ச்சிக்காக அவருக்கு அழைப்பு விடுத்தேன். அவரும் மும்பைக்கு வந்தார். முதல் வரிசையில் அமர்ந்து எனது நடனத்தை பார்த்தார்.

நடனமாடினேன்

பிறகு என்னிடம் வந்து "எப்படி உன்னால் முடிந்தது" என கேட்டார். அதற்கு நான், "நீங்கள்தான் நான் கேட்ட போது உன்னால் ஏன் முடியாது என்றீர்கள். இப்போது இப்படி கேட்கிறீர்களே" என்றேன். அதற்கு அவர் இல்லை நீ கேட்கும் போது எனக்கு பரிதாபமாக இருந்தது. நீ அப்பாவி போல் கேட்டாய், உன்னை ஏமாற்றக் கூடாது என்பதற்காக நான் அப்படி சொன்னேன் என்றார். ஆனால் அவர் சொன்னது மேஜிக்கல் வேர்ட்ஸ்! எனக்கு மருந்து மாத்திரைகள் கை கொடுத்தாலும் மருத்துவரின் அந்த வார்த்தைகள்தான் ஊக்கம் தந்து நடனமாட வைத்தது. இவ்வாறு சுதா சந்திரன் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+