சீதா என்னுடைய அக்கா தான்.. ஆனால் எங்கேயும் அதை சொல்ல மாட்டேன்! தெய்வமகள் சீரியல் நடிகை ஓபன்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் பலருக்கும் பிரபலமான நடிகை சுஹாசினி பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அதில் நடிகை சீதா தன்னுடைய அக்கா தான், ஆனால் நான் வாய்ப்புக்காக அக்கா பெயரை எந்த இடத்திலும் பயன்படுத்தியது கிடையாது என்றும் கூறியிருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் சீரியல்களில் ஒன்று. இந்த சீரியல் கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியலில் நடிகை வாணி போஜன் தான் கதாநாயகியாக சத்யா கேரக்டரில் நடித்து வந்தார்.

அவருக்கு ஜோடியாக நடிகர் கிருஷ்ணா, பிரகாஷ் கேரக்டரில் நடித்து வந்தார். இவர்கள் இருவருடைய ஜோடி பொருத்தம் பெரிய அளவில் பேசப்பட்டது. இருவரும் நிஜத்தில் கணவன் மனைவியா? என்று கூட பலர் கேட்டு வந்தனர். ஆனால் கிருஷ்ணா நடிகை சாயா சிங்கை காதலித்து திருமணம் செய்திருந்தார்.
அதுபோல இந்த சீரியலுக்கு பிறகு தான் வாணி போஜனுக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்தது. அதுபோல இந்த சீரியலில் நடித்த பிரபலங்கள் ஒரு சிலர் இப்போது எந்த சீரியலிலும் காணப்படவில்லை. அதில் ஒருவர் தான் நடிகை சுஹாசினி. இவர் தெய்வமகள் சீரியலில் வினோதினி கேரக்டரில் நடித்திருந்தார். அதாவது கதாநாயகன் பிரகாஷின் அண்ணியின் தங்கையாக சுஹாசினி நடித்திருந்தார்.
இந்த சீரியலில் இவரை பார்த்து ரசிகர்கள் திட்டாமல் இருந்திருக்க மாட்டார்கள். ஆனால் கடைசியில் இவர் மனம் திருந்திய பிறகு இவரை பாராட்டாத ரசிகர்களும் இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு தன்னுடைய அக்கா மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்த வினோதினி கடைசியில் மனமாறி இருப்பார்.

ஆனால் இவர் சமீபத்தில் எந்த சீரியலிலும் காணவில்லை. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அதில் நான் நடிகையாக மட்டுமல்ல எனக்கு பாடுவது ரொம்ப பிடிக்கும் என்று பாடி காட்டி இருக்கிறார். அதோடு நடிகை சீதா தன்னுடைய அக்கா தான் என்று கூறி இருக்கிறார். அக்கா என்றால் தன்னுடைய அப்பாவும் சீதாவின் அப்பாவும் கூட பிறந்த அண்ணன் தம்பி.
என்னுடைய பெரியப்பாவின் மகள் தான் சீதா ஆனால் நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று முயற்சி செய்தபோது என்னுடைய அக்கா பெயரை எந்த இடத்திலும் நான் பயன்படுத்தியது கிடையாது. அக்கா ஆரம்பத்திலேயே சினிமாவில் நடிக்க வந்துட்டாங்க. அவர்களுடைய பெயரை எந்த இடத்திலுமே பயன்படுத்தக் கூடாது என்று நான் முடிவாக இருந்தேன்.
நம்முடைய திறமையால் நான் ஜெயிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதுபோல எனக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்தது. தெய்வமகள் சீரியலில் நான் நடித்துக் கொண்டிருக்கும் போதெல்லாம் தான் வெளியே போகும்போது பலர் என்னை பாராட்டி இருக்கிறார்கள்.

அதுபோல அந்த நேரத்தில் நான் மேடைகளிலும் பாடல் பாடி கொண்டிருப்பேன். அதனால் ரொம்பவும் பிசியாக இருந்தேன் என்றும் சுஹாசினி பேசியிருக்கிறார். இவருடைய காமெடி கலந்த வில்லத்தனத்தை ரசிகர்கள் கண்டிப்பாக மிஸ் பண்ணுவார்கள். சீக்கிரமாக இவர் சீரியலில் வந்தால் நன்றாக இருக்கும் என்பது அவருடைய எதிர்பார்ப்பு. இவர் மீண்டும் சீரியலில் ரீ என்ட்ரி கொடுக்க நம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளலாம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications