மாந்தோப்பில் கல்லை விட்டெறிந்து மாங்காய்களை பறித்த நடிகை சுஜிதா.. அய்யய்யோ ஓனர் பார்த்தா என்னவாகும்?
சென்னை: நடிகை சுஜிதா மாந்தோப்பில் கல்லை வீசி மாம்பழங்களை பறிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
பூவிழி வாசலிலே படத்தில் லாலா லாலா என வாய் பேச முடியாத குழந்தையாக ஆண் வேடத்தில் நடித்தவர் நடிகை சுஜிதா. 41 நாள் குழந்தையாக இருந்த போது கே.ஆர்.விஜயாவின் பேத்தியாக அப்பாஸ் என்ற படத்தில் நடித்திருந்தார்.

அது போல் முந்தானை முடிச்சு படத்தில் பாக்கியராஜின் குழந்தையாக நடித்திருப்பார். 1990 கள் வரை குழந்தை நட்சத்திரமாகவே சுஜிதா நடித்திருந்தார். அவர் 2021 ஆம் ஆண்டு நடித்த படம் ஐந்து உணர்வுகள். அது போல் சுஜிதா டப்பிங் ஆர்டிஸ்ட் ஆவார்.
இவர் மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனனுக்கு வாய்ஸ் கொடுத்திருந்தார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வருகிறார். தனம் கேரக்டர் அத்தனை ஆப்ட்டாக பொருந்தியுள்ளது. மேலும் கதை கேளு கதை கேளு எனும் யூடியூப் சேனலையும் தொடங்கியுள்ளார்.
அதில் சூட்டிங் குறித்த அப்டேட்டுகள், மேக்கப் போடுவது உள்ளிட்டவைகளை ஒளிபரப்புவார். மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீடு எப்படி இருக்கிறது, புதிய வீடு எது என்பதையெல்லாம் தாண்டி அந்த சீரியலுக்காக தான் எங்கு புடவை வாங்குகிறேன் உள்ளிட்டவை குறித்து விவாதிப்பார். அந்த கடைகளுக்கே நேரடியாக சென்று புடவை பிரித்து காட்டுவதுடன் அதன் ரேட்டையும் சொல்லிவிடுவார்.
இதனால் அவருடைய சேனலுக்கு நிறைய பேர் ரசிகர்கள் உள்ளனர். அழகான மாந்தோப்புக்கு சென்று மாங்காய்களை பறிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். சுஜிதா தனது மாந்தோப்புக்கு சென்றார். அங்கு அவருக்கு சொந்தமாக 5 மாமரங்கள் உள்ளன. ரூமானி, கிளி மூக்கு மாங்காய், பங்கனப்பள்ளி மாம்பழம் என சில மரங்களை வளர்த்து வருகிறார்.

சுஜிதாவுக்கு மிகவும் பிடித்த பழம் முக்கனிகளில் ஒன்றான மாம்பழம்தானாம். நிறைய மாம்பழங்களை பறித்துக் கொண்டு சென்னை திரும்பியுள்ளார். ஒவ்வொரு வீடியோவிலும் சுஜிதா ஒரு குட்டி ஸ்டோரியை சொல்லி முடிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த வீடியோவில் பேராசை பெருநஷ்டம் என்ற கதையை சொல்லியுள்ளார். மேலும் தகுதிக்கு மீறி ஆசைப்படக் கூடாது என்றும் அது நமது காலையே வாரி விட்டுவிடும் என்றும் தெரிவித்திருந்தார். 4 அல்லது 5 மரங்கள்தான் இருக்கிறது. இது மாந்தோப்பா என சிலர் நினைக்கலாம். என்னை பொருத்தவரை இதுவும் மாந்தோப்புதான் என்றார்.
அது போல் மாங்காய் சாப்பிட மார்க்கெட்டுக்குதான் போக வேண்டும் என்றில்லை. மாந்தோப்புக்கும் செல்லலாம். இனி எங்கள் வீட்டில் மாங்காய் குழம்பு, மாங்காய் ஊறுகாய், மாங்காய் பச்சடிதான் என்கிறார். கல்லை விட்டு எறிந்து எறிந்து மாங்காய்களை சுஜிதா பறித்தார். விஜயகாந்த் சார் வீட்டு எதிரே இருந்த போது பிரேமலதா மேடம் அவர்கள் வீட்டு தோட்டத்தில் காய்த்த மாம்பழங்களை எனக்கு கொடுப்பார். சாப்பிட ருசியாக இருக்கும் என்ற தகவலையும் சுஜிதா தெரிவித்தார்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications