Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அது என்னுடைய சொந்த பொண்ணு இல்ல.. பல வருட பிரச்சனை! மகள் பற்றி விளக்கம் கொடுத்த நடிகை சுகன்யா

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை சுகன்யா தன்னை பற்றி பரவி வரும் வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். அதாவது சில வருடங்களுக்கு முன்பு தான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படத்தை பார்த்து அதில் இருப்பது என்னுடைய மகள்தான் என்று இணையத்தில் இப்போதும் செய்தி பரவி வருகிறது. ஆனால் அது என்னுடைய சொந்த மகள் கிடையாது என்று, தன்னுடைய குடும்பத்தை பற்றி சுகன்யா விளக்கம் கொடுத்திருக்கிறார்.

90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நாயகிகளில் ஒருவராக இப்ப வரைக்கும் இருந்து வரும் நடிகை சுகன்யா பரதநாட்டிய கலைஞர் தான். இவர் நடிப்பை விடவும் தனக்கு பரதநாட்டியம் டான்ஸ் தான் ரொம்ப பிடித்தது என்று கூறியிருக்கிறார். தான் நடிக்கவே மாட்டேன் என்று ஆரம்பத்தில் கூறியிருந்த சுகன்யா முதல் முதலாக "புது நெல்லு புது நாத்து" என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் கதாநாயகியாக அறிமுகம் ஆகி இருக்கிறார். அந்த திரைப்படத்திற்காக பல விருதுகளையும் வாங்கி இருக்கிறார்.

Actress Sukanya has explained the rumors about her daughter

இதைத் தொடர்ந்து விஜயகாந்துடன் சின்ன கவுண்டர் திரைப்படத்தில் நடித்து முன்னணி நடிகையாக பிரபலமானார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து கமலுடன் மகாநதி, இந்தியன். விஜயகாந்த் உடன் சின்ன கவுண்டர் சத்யராஜ் உடன் திருமதி பழனிச்சாமி, சரத்குமார் உடன் மகா பிரபு என பல முன்னணி கதாநாயகர்களோடு அந்த நேரத்தில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்த கதாநாயகியாக வலம் வந்தார்.

நடிகையாக மட்டுமல்லாமல் ஒரு டப்பிங் கலைஞராகவும் மணிரத்தினம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் நந்திதா தாஸ்க்கு டப்பிங் குரல் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியலில் கதாநாயகியாக நடித்து சின்னத்திரை ரசிகர்களையும் இவரை புகழ வைத்து விட்டார்.

இவருடைய திறமை முடியவில்லை ஒரு இசை அமைப்பாளராகவும் ஒரு சில ஆல்பம் தொகுப்புகளையும் வெளியிட்டு இருக்கிறார். அந்த அளவிற்கு பிஸியாக இருக்கும் இருந்த நடிகை சுகன்யா சூட்டிங் ஸ்பாட்டில் கிடைக்கும் கொஞ்ச நேரத்திலும் கூட சும்மாவே இருக்க மாட்டாராம். அந்த நேரத்திலும் ஓவியம் வரைவது, மியூசிக் கேட்பது, டான்ஸ் கிளாஸ்சுக்கு செல்வது புதியதாக தன்னுடைய திறமையை எப்படி மெருகேற்றிக் கொள்ளலாம் என்றெல்லாம் யோசித்து தான் ஓடிக்கொண்டே இருப்பாராம்.

ஆனாலும் சில வருடங்களாக இவர் சினிமா மற்றும் சீரியலை விட்டு விலகி இருந்த நிலையில் இப்போது பொதிகை டிவியில் ஒளிபரப்பாகும் "சக்தி ஐபிஎஸ் சீரியல்" மூலமாக சின்னத்திரையில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட சுகன்யா தன்னுடைய குடும்பத்தை பற்றி அதில் பேசியிருக்கிறார். அதில் சில வருடங்களாகவே சுகன்யாவின் மகள் இவர்தான் என்று ஒரு புகைப்படம் பரவி வரும் நிலையில் அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

Actress Sukanya has explained the rumors about her daughter

அதில் அவர் பேசுகையில், அந்த புகைப்படத்தை நானும் பார்த்தேன். அந்த புகைப்படத்தில் இருப்பது என்னுடைய மகள் அல்ல... என்னுடைய அக்காவின் ஒரே மகள். நான் என்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தான் அந்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்தேன். அதில் நான் என்னுடைய அக்கா மற்றும் அவருடைய மகள் என்று எல்லாவற்றையும் குறிப்பிட்டு இருந்தேன். அந்த புகைப்படம் இணையத்தில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நான் ஸ்ரீதர் ராஜகோபால் என்பவரை திருமணம் செய்ததும் பிறகு விவாகரத்திற்கு அப்ளை செய்ததும் எல்லோருக்கும் தெரியும். சில வருடங்களாகவே என்னுடைய விவாகரத்து பிரச்சனை ஓடிக்கொண்டிருந்தது. நான் திருமண வாழ்க்கையில் ஒரு சில மாதங்கள் தான் இருந்தேன். அதற்குப் பிறகு ஒரு வருடத்திற்குள் நான் என்னுடைய முன்னாள் கணவரிடம் இருந்து விவாகரத்திற்கு வேண்டும் என்று கோர்ட்டில் அப்ளை செய்து விட்டேன்.

ஆனால் விவாகரத்து கிடைப்பதற்கு தான் பல வருடங்களாக ஆனது. அது செய்தி சேனல்களில் எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனாலும் இப்போது புகைப்படத்தில் இருப்பது என்னுடைய மகள் என்று செய்திகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இது வேண்டும் என்றே சுகன்யா பற்றி ஏதாவது செய்திகளை பரப்ப வேண்டும் என்பதற்காக செய்து கொண்டிருப்பதாக தான் எனக்கு தெரிகிறது.

Actress Sukanya has explained the rumors about her daughter

நானும் இந்த செய்திகளை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். என்னுடைய அக்காவின் மகள் கூட இந்த செய்திகளை பார்த்து சித்தியால் நானும் இப்போ பிரபலமாகி விட்டேன் என்று ஜாலியா சொல்லிக்கிட்டு இருக்கிறா.. நாங்களே இவங்க இப்படித்தான் என்று ஒரு முடிவுக்கு வந்து விட்டோம். நான் ஆரம்பத்தில் ஒரு பத்திரிக்கை மீது கேஸ் போட்டு இருந்தேன்.

அது பல வருடங்களாக நடந்து கொண்டு இருந்தது. அது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனாலும் இப்போது ஒரு சிலர் என்னன்னே தெரியாமல் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள் என்று அந்த பேட்டியில் நடிகை சுகன்யா பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+