விஜயகாந்த் ஒரு மாமனிதர் தான்.. இதை எதனால சொல்றேன்னா.. கண்ணீரோடு பகிர்ந்த நடிகை சுகன்யா
சென்னை: நேற்று நடிகர் விஜயகாந்தின் மரண செய்தி ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அதிர செய்திருந்தது.
கண்ணீரோடு அவருடைய நினைவுகளை பல ரசிகர்களும் பிரபலங்களும் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் விஜயகாந்தோடு திரைப்படங்களில் ஒன்றாக நடித்த நடிகை சுகன்யா விஜயகாந்த் பற்றி சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.

அந்த வகையில் நேற்றிலிருந்து ஒட்டு மொத்த தமிழகமும் விஜயகாந்தை பற்றி தான் அதிகமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். விஜயகாந்த் உடல்நிலை சில வருடங்களாகவே சரியில்லாமல் இருந்த நிலையில் அவர் எப்படியும் மீண்டு இதிலிருந்து வந்து பழையபடி தன்னுடைய கம்பீரத்தோடு வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்த நிலையில் அவருடைய மரண செய்தி அனைவருக்கும் இடி என வந்து இறங்கியது..

நடிகர் விஜயகாந்த் நடிகராக மட்டுமல்லாமல் அரசியல் பிரமுகராக இருந்த நிலையிலும் அனைத்து மக்களுக்கும் தன்னால் முடிந்த அளவிற்கு தன்னுடைய சொந்த செலவில் இருந்தே உதவி செய்து பலர் வாழ்வதற்கு வழிவகை செய்து கொடுத்திருக்கிறார். தன்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளிலும் விஜயகாந்த் பலருக்கும் உதவி செய்து இருக்கிறார். வீட்டில் தினமும் சாப்பாடு போட்டு இருக்கிறார் என்ற செய்தி எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

அதிகமான நடிகர் கூட நாங்கள் விஜயகாந்த்தின் சாப்பாடை சாப்பிட்டு இருக்கிறோம் என்று பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் நடிகர் விஜயகாந்த் உடன் சில திரைப்படங்களில் ஜோடியாக நடித்த நடிகை சுகன்யா விஜயகாந்தின் மரண செய்தியை கேட்டு கண்ணீரோடு அவரைப் பற்றிய சில நினைவுகளை பகிர்ந்து இருக்கிறார். அதில் நான் விஜயகாந்தை மறக்கவே முடியாது.

அவருக்கு தான் உண்மையிலே "அந்த வானத்தைப் போல மனம் படைத்த மன்னவரே" என்ற பாடல் நூறு சதம் பொருந்தும். அந்த பாடல் அவருக்காகவே எழுதியது தான்... நாங்கள் ஒன்றாக நடிக்கும் போது அவரை பார்ப்பதற்காக பஸ்ஸில் கூட்டம் கூட்டமாக ஆட்கள் வருவார்கள். அனைவருக்கும் சாப்பாடு போட்டு அனுப்பி வைப்பார். எல்லோரோடும் சேர்ந்து புகைப்படம் எடுப்பார்கள்.

எங்களை பார்க்க வருபவர்கள் விட விஜயகாந்துக்காக வருபவர்கள் தான் அதிகம். அந்த நேரத்தில் ஒரு படம் வெற்றி பெற்றால் அதை கொண்டாடுவார்கள். அப்போது பல சினிமா தியேட்டர்களில் அதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். அந்த நேரத்தில் நாங்களும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக போவோம். எல்லோரும் காரில் வரிசையாக போய்க்கொண்டிருக்கும் போது முதல் காராக விஜயகாந்த் உடைய கார்தான் போகும்.
பங்க்ஷன் நடக்கும் இடத்தைப் பற்றி அவருக்கு முன்னாடியே தெரியப்படுத்தி விடுவார்கள். ஆனால் அங்கு போய்க் கொண்டிருக்கும் போது எதுவும் பிரச்சனையா என்பதை தனி ஆளாக ரோட்டில் இறங்கி நின்னு பார்த்துக் கொண்டிருப்பார். அப்படி எல்லாம் அவர் பார்க்க வேண்டிய அவசியமே கிடையாது. அவருடைய உதவியாளர்களோ, மேனேஜரோ கூட அவர் சொன்னால் செய்வார்கள்.

ஆனால் அதை விஜயகாந்த் செய்ய மாட்டார். தானே ஒவ்வொரு காரில் இருக்கும் நபர்களிடமும் வழியை சொல்லி கூட்டிக்கொண்டு போவார். திரைப்படத்தில் நடிக்கும் போது எனக்கு சில காட்சிகளில் நடிக்க பயமாக இருந்த போது கூட தைரியத்தை கொடுத்தது விஜயகாந்த் சார் தான். யாருக்கு உதவி என்றாலும் முதல் ஆளாக விஜயகாந்த் சார் செய்து விடுவார்.

சூட்டிங் ஸ்பாட்டில் சண்டைக் காட்சிகளில் நடிக்கும் போது டூப் போடாமல் நடிப்பார். அப்போது அவர் அடிக்கும் போது யாருக்கும் அடிபட்டு விட்டால் உடனே அவர்களை ரெஸ்ட் எடுக்க சொல்லிவிடுவார். இப்படி ஒரு நல்ல மனிதர் இன்று இல்லை என்பதை கேட்கும் போதே மனது ரொம்ப வருத்தமாக இருக்கிறது என்று கண் கலங்கிய படி அந்த வீடியோவில் நடிகை சுகன்யா பேசி இருக்கிறார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications