உன் பக்கத்துல வந்தாலே மீன் வாடைனு அந்த நடிகர் சொல்லுவாரு! சிவகுமார் கூட இப்படித்தான்! சுலக்ஷனா ஓபன்
சென்னை: நடிகை சுலக்ஷனா தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகள் குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதில் நடிகர் மோகன் நீ என் பக்கத்திலேயே வராத உன் மேல மீன்வாடை அடிக்கிதுன்னு சொல்லுவாரு. அதுபோல சிவக்குமார் என்னை பரட்டைனு கூப்பிடுவாரு என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை சுலக்ஷனா "தூறல் நின்னு போச்சு" என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் தமிழில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் நடிகர் பாக்யராஜ் உடன் இவர் நடித்திருப்பார். அதைத் தொடர்ந்து ரஜினி, கமல் உடன் இணைந்து பல படங்களிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக "உன்னால் முடியும் தம்பி" படத்தில் கமலுக்கு தங்கையாக நடித்திருப்பார். அதேபோல "தம்பிக்கு எந்த ஊரு" திரைப்படத்திலும் முக்கியமான கேரக்டரில் சுலக்ஷனா நடித்திருப்பார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தாலும் 14 வயசிலேயே சுலக்ஷனா கதாநாயகியாக அறிமுகமாகி பிறகு 16 வயதில் பிசியான நடிகையாக மாறி இருக்கிறார். அந்த நேரத்தில் எம்.எஸ்.வியின் மூத்த மகன் மீது இவருக்கு காதல் ஏற்பட்டு இருக்கிறது. அவரும் ஒரு திரைப்பட இயக்குனர் என்பதால் இருவருக்கும் முதலில் மோதலில் தொடங்கி பிறகு காதலில் முடிவடைந்து இருக்கிறது.
18 வயதில் திருமணம் செய்த சுலக்ஷனா 22 வயதில் விவாகரத்தும் செய்திருக்கிறார். இவர்களுக்கு மூன்று மகன்கள் அதில் முதல் மகன் விஷ்ணு கடற்படை அதிகாரியாக இருக்கிறார். இரண்டாவது மகன் லண்டன் விமான நிலையத்தில் அதிகாரியாகவும், மூன்றாவது மகன் படித்துக் கொண்டும் இருக்கிறாராம். மகிழ்ச்சியான குடும்பத்தை பார்த்துக்கொண்டு இருந்த இவர் 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சீரியலில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

2003 ஆம் ஆண்டு ஜெயா டிவியில் ஒளிபரப்பான சஹானா என்னும் சீரியலின் மூலமாக மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். அதற்குப்பிறகு கோகுலத்தில் சீதை,மகாராணி,முந்தானை முடிச்சு,தங்கம்,அழகி,தெய்வம் தந்த வீடு, லட்சுமி வந்தாச்சு, தேவதையை கண்டேன், அரண்மனைக்கிளி, ராசாத்தி போன்ற பல சீரியல்களிலும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் பேட்டி ஒன்று சுலக்ஷனா பேசுகையில் சினிமா துறையில் அதிகமாக எந்த நடிகர்களோடும் கிசுகிசுவில் சிக்கியது கிடையாது. ஆனால் சூட்டிங் ஸ்பாட்டில் மோகன் என்னை பார்த்தாலே நீ என் பக்கத்தில வராத உன் மீது மீன் வாடை அடிக்கிறது. மீன், முட்டை, இறைச்சி எல்லாம் சாப்பிடுற என்று சொல்லுவாரு. ஏன்னா அவர் வெஜிடேரியன் என்பதால் அவர் நான்வெஜ் சாப்பிடறவங்க பக்கத்திலேயே வரமாட்டார்.
நான் பல படங்களில் மோகன் சாருடன் நடித்து இருக்கிறேன். அதனால் அவர் ஏதாவது கலாட்டா செஞ்சுட்டே இருப்பாரு. அதுபோல சிவக்குமார் சாரோடு நடிச்சதும் மறக்க முடியாது. அவர் என்னை எப்போதும் பரட்டனு தான் கூப்பிடுவாரு. ஆனால் நடிக்கும் விஷயத்தில் பல விஷயங்கள் சொல்லி தருவாரு. நான் ஆரம்பத்தில் கிளிசரின் போட்டு நடிப்பேன். ஆனால் அதற்கு சிவக்குமார் கிளிசரின் போடாதே அமிர்தாஞ்சன் கண் பக்கத்தில் வைத்துவிடு அது அழுதது போலவே இருக்கும் என்று சொல்லி தந்தார்.

நான் ஒரு நாள் அமிர்தாஞ்சனை கண்ணில் வைத்ததால் எனக்கு கண்ணில் வலி அதிகம் ஆயிடுச்சு. அதனால் முடியாது என்று அதற்கு பிறகு தான் யோகா கற்று யோகா மூலமாகவே நான் எவ்வளவு எவ்வளவு நேரம் அழ வேண்டும், எந்த இடத்தில் அழகு என்று என்னை நானே பழகிக் கொண்டேன். சிவகுமார் சார் அவருடைய சில படங்களில் அவருடைய கண்கள் ரொம்ப சிவப்பாக இருக்கும். அதற்கு காரணம் அவர் கண்களில் அமிர்தாஞ்சன் வைத்து தேய்த்து விடுவார் என்று அந்த பேட்டியில் சுலக்ஷனா பேசியிருக்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications