கமல்ஹாசன் அப்பவே அப்படி.. பதறி ஓடிப் போய்விட்டேன்.. காப்பாற்றியது அந்த நடிகை தான்..ஊர்வசி ஓப்பன்டாக்
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்த நடிகை ஊர்வசி தற்போதும் முன்னணி கதாநாயகர்கள் படங்களில் குணச்சித்திரம் மற்றும் அம்மா கதாபாத்திரங்களை ஏற்று பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
தான் முன்னணி நடிகையாக இருந்த பொழுது தன் திரை வாழ்க்கையில் நடந்த பல சுவாரசியங்களை பகிர்ந்து கொண்டுள்ள ஊர்வசி,நடிகர் கமலஹாசன் உணவு பழக்கம் குறித்து கூறியுள்ள செய்தி கொஞ்சம் அதிர்ச்சி ரகமாக இருக்கிறது.

முந்தானை முடிச்சு: தமிழ் திரைக்கு பல கதாநாயகிகள் கேரளத்தில் இருந்து தான் அறிமுகமாகி இருக்கிறார்கள். அந்த வரிசையில் மலையாளத்திலிருந்து வந்து முன்னணி கதாநாயகியாக ஒரு ரவுண்டு வந்தவர் ஊர்வசி. நடிகர் பாக்யராஜ் உடன் இணைந்து நடித்த தனது முதல் படமான முந்தானை முடிச்சு படத்திலேயே யாருடா..!?இந்த..!! கதாநாயகி..!! என்று தமிழ் ரசிகர்களை புருவம் உயர்த்த வைத்தார்.
தான் நடிக்க வந்த ஒரு வருடத்திலேயே கமலுடன் இணைந்து 'அந்த ஒரு நிமிடம்'படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அந்த படத்தில் நடிக்கும் பொழுது ஏற்பட்ட அனுபவத்தை பற்றி ஊர்வசி கூறும்பொழுது,அந்த ஒரு நிமிடம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று ஒரு நாள் கமல் என்னிடம் வந்து இன்று மதியம் அனைவரும் ஒன்றாக அமர்ந்து தான் மதிய உணவு உண்ண வேண்டும் என்று கண்டிப்புடன் கூறினார்.
நானும் ஏதோ பாசத்தில் தான் சொல்லுகிறார் போல.. என்று நினைத்துக் கொண்டு மதிய உணவு நேரத்தின் போது ஒன்றாக அமர்ந்து சாப்பிட அனைவரும் தயாரானோம். அப்பொழுது கமல் குறுக்கிட்டு உடனே சாப்பிட வேண்டாம் ஒரு ஸ்பெஷல் ஐட்டம் வந்து கொண்டிருக்கிறது வந்த பின்பு சாப்பிடலாம் என கூறினார்.
கொஞ்ச நேரத்தில் அந்த ஸ்பெஷல் ஐட்டமும் வந்தது. பார்ப்பதற்கு நன்கு பொரித்த கனவாய் மீன் போல வட்ட வட்ட துண்டுகளாக அழகாக இருந்தது.
இயல்பாகவே மீன் உணவுகளை விரும்பி சாப்பிடும் நான் அதை சாப்பிடலாம் என நினைத்த பொழுது உடன் அமர்ந்திருந்த நடிகை அனுராதா மெதுவாக என் காதின் அருகில் வந்து சாப்பிட்டு விடாதே இது பாம்பு கறி என்று என்னை அலர்ட் செய்தார். இதைக் கேட்டவுடன் அதிர்ச்சியில் நான் என்னது பாம்புக்..கறியா...!!??? என்று கொஞ்சம் சத்தமாகவே கத்தி விட்டேன்.

உடனே கமல் பாம்பு கறியா.. யார்? சொன்னது? என்று சுற்றி இருந்தவர்களை பார்த்து கேட்டு விட்டு,நைசாக அவர்களிடம் கண்ணால் சைகை செய்து பாம்பு கறி என்பதை கூற வேண்டாம் என கூறினார்.பாம்புக் கறி இல்லை என்று கமல் கூறினாலும் எனக்கு கொஞ்சம் சந்தேகமாகவே இருந்தது.அந்த நேரத்தில் அங்கு புகைப்பட கலைஞராக இருந்த எங்கள் ஊரைச் சார்ந்த ஒரு பையனிடம் சைகையால் என்ன கறி? என்று கேட்டேன்.அந்த பையனும் சைகையால் கையை உயர்த்தி பாம்பு என்று காட்டினார்.
அதைப் பார்த்தவுடன் நான் அந்த இடத்திலிருந்து ஓடி விட்டேன். இப்பொழுது வேண்டுமானால் சீனா மாதிரியான வெளிநாடுகளில் பாம்பு கறியை சாப்பிடுவது சாதாரணமாகி விட்டாலும் கமல் அந்த சமயத்திலேயே பாம்பு கறியை அசால்டாக சாப்பிட்டதை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன் என ஆச்சரியம் பொங்க விவரித்திருக்கிறார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications