பத்து வயதில் தொடங்கிய பயணம்..13 வயதில் அம்மாவான ஊர்வசி.. பல ரகசியத்தை உடைத்த நடிகை
சென்னை: நடிகை ஊர்வசி சமீபத்தில் தன்னுடைய நடிப்பு வாழ்க்கை பற்றி பல ரகசியங்களை வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
அதில் தான் தமிழ் மொழியில் முதல்முறையாக நடித்த முந்தானை முடிச்சு திரைப்பட அனுபவங்கள் பற்றி நகைச்சுவையாக பேசி இருக்கிறார்.
அதோடு அந்த திரைப்படத்தில் தான் நடிக்கும் போது 13 வயது தான் என்றும் அப்போதே அம்மாவாக மாறிவிட்டேன் என்றும் பல சுவாரஸ்யமான தகவல்களையும் கூறி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் நடிகைகளின் வாழ்க்கை என்பது பெரும் போராட்டமானது தான். முன்னணியில் இருக்கும்போது திருமணம் செய்து கொண்டால் அதற்கு பிறகு அவர்களுக்கு மார்க்கெட் போய் விடுகிறது. கதாநாயகர்கள் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் கதாநாயகிகள் பிறகு அம்மாவாகவும், அக்காவாகவும் நடிக்க தொடங்குகிறார்கள். பலர் சினிமாவை விட்டு விலகியும் விடுகிறார்கள்.

ஆனால் எத்தனை வருடங்கள் ஆனாலும் நான் சினிமாவை விட்டு போக மாட்டேன் என்று உறுதியோடு இருக்கும் நடிகைகள் ஒரு சிலர்தான். அவர்களில் ஒருவர்தான் நடிகை ஊர்வசி. இவர் இதுவரைக்கும் கிட்டத்தட்ட 700க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். 80ஸ் 90ஸ்களின் மனம் கவர்ந்த நடிகையாகவும் இருந்து வருகிறார்.
ஊர்வசி சீரியஸாக வசனங்கள் பேசினா கூட அவர் பேசும் விதத்தைப் பார்த்து பலர் சிரித்த காலங்கள் உண்டு. அப்பவே அப்படி என்றால் இப்போ கேட்கவே வேண்டாம். இவருடைய அல்டிமேட் காமெடி, தனித்துவமான முக எக்ஸ்பிரஷன் பலருக்கும் பிடித்தது தான். அதுவும் சில வருடங்களுக்கு முன்பு வெளியான வீட்டுல விசேஷம் திரைப்படத்தில் இவருடைய நடிப்பு பலரும் பாராட்டியதில் ஒன்று.
அதுமட்டுமல்ல அம்மாவாக இருந்தாலும் பலருடைய மனம் கவர்ந்த குறும்புக்கார அம்மாவாக மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் ஒரு மெச்சூரிட்டி இல்லாத அம்மாவாக இருந்து பலரையும் சிரிக்க வைத்திருந்தார். அந்த வகையில் பல திரைப்படங்களை இவருடைய நடிப்பிற்கு உதாரணமாக கூறிக் கொண்டே போகலாம்.
இந்த அளவிற்கு ஊர்வசி எல்லாருக்கும் பிரபலமாக இருக்கும் நிலையில் இவருடைய நிஜப்பெயர் கவிதா ரஞ்சனி தான். ஆனா அது யாருக்கும் தெரியாது. ஆரம்பத்துல ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய ஊர்வசி குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். அதுவும் 10 வயதில் கதிர் மண்டபம் என்ற மலையாள திரைப்படத்தில் நடிகை ஜெயபாரதியின் மகளாக நடித்திருக்கிறார்.
அப்பவே தொடங்கிய இவருடைய பயணம் இப்ப வரை நீண்டு கொண்டிருக்கும் நிலையில் இவரை முதன்முதலாக தமிழில் அறிமுகமாக்குனது பாக்யராஜ் தான். அவர் இயக்கிய முந்தானை முடிச்சு என்ற படத்திற்காக ஒன்பதாம் வகுப்பு படிச்சிட்டு இருந்த ஊர்வசியிடம் பேசி இருக்கிறார்கள். அப்போ அவர் மூணு படத்துல ஏற்கனவே நடிச்சிட்டு இருந்ததுனால என்னால நடிக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்களாம்.
ஆனாலும் ஒரு வழியா பேசி எடுத்து கே. பாக்யராஜ் முந்தானை முடிச்சு திரைப்படத்தில் ஊர்வசியை ஒப்பந்தம் பண்ணி இருக்காரு. அந்த நேரத்துல இவர் ஏற்கனவே நடிச்சிட்டு இருந்த மூணு திரைப்பட டைரக்டர்களும் இந்த திரைப்படத்தை சீக்கிரமா முடிச்சா தான் நம்ம படம் முடிக்க முடியும்னு பாக்யராஜுக்கு ரொம்பவே ஹெல்ப்ஃபா இருந்தாங்களாம்.
இந்த நிலையில் தான் முந்தானை முடிச்சு திரைப்படத்தின் கதைப்படி ஊரில் சேட்டை செய்து கொண்டு குழந்தைத்தனமாக வலம் வந்து கொண்டிருக்கும் ஊர்வசி பாக்யராஜை பார்த்ததும் அவரை எப்படியாவது கல்யாணம் பண்ணிக்கனும்னு பல திட்டம் போட்டு கடைசியா பொய் சத்தியம் செஞ்சு, அவரை கல்யாணமும் பண்ணிக்குவாங்க. கல்யாணம் பண்ணினாலும் அந்த குழந்தை தன்னுடைய குழந்தை தான் என ஊர்வசி வளர்த்துட்டு இருப்பாங்க.
பாக்யராஜ் தன்னை சந்தேகப்பட்டதனால எனக்கு இனி குழந்தையே பெத்துக்க வேண்டாம் என்று குடும்ப கட்டுப்பாடும் பண்ணிட்டு அந்த குழந்தையே போதும் என்று ஊர்வசி செய்த செயலை பார்த்து பாக்கியராஜ் மனமும் கடைசில மாறிடும். ஆனால் இந்த திரைப்படத்தில் நடிக்கும் போது ஊர்வசியே ஒரு குழந்தை நட்சத்திரமாக தான் இருந்திருக்காங்க.
ஆமாங்க அந்த திரைப்படத்தில் நடிக்கும் போது ஊர்வசிக்கு 13 வயசு தானாம். ஒரு 13 வயசு குழந்தையே ஒரு குழந்தைக்கு அம்மாவாக அந்த படத்துல நடிச்சுச்சு என்று ஜாலியாக சிரித்தபடியே ஊர்வசி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். இந்த திரைப்படத்தில் ஊர்வசி எப்படி நடிச்சாங்க என்பது பலருடைய மனதில் இப்போது ஓடிக்கிட்டு இருக்கும். அதுவும் "கண்ண தொறக்கணும் சாமி" என்கிற பாட்டுக்கு ஊர்வசியின் ஆட்டம் பலருடைய மனதையும் ஆட வைத்தது என்பது படித்து கொண்டிருக்கும் பலருக்கு புரிந்திருக்கும்.
-
"பாரதிராஜாவை போலவே... கடைசி நாட்களில் அமைதியாக வலியை சுமந்த மணிவண்ணன்!" சோக கதை -
வாழ்க்கையை கெடுத்த "வதந்தி”.. இப்போ கஷ்டப்படுறேன்.. கண்ணீருடன் உதவி கேட்ட பாவா லட்சுமணன்! -
"தமிழர்கள் என்றாலே திருடர்களா? ரவுடிகளா? வெடித்த மலையாள சினிமா சர்ச்சை... 'Dridam' படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள் -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
நந்தனாவை சேரில் இருந்து விரட்டி.. உடனே ராதிகா கும்பிட்டு.. பாரதிராஜா இறுதிச் சடங்கில் என்ன நடந்தது -
"கொலை மிரட்டல்... பாலியல் வன்கொடுமை மிரட்டல்... திரையுலகை அதிரவைத்த நடிகை பார்வதி பரபரப்பு பேச்சு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர்












Click it and Unblock the Notifications