என் அக்கா கல்பனா வாழ்க்கையில் நடந்த விஷயம்.. நான் அதை மறக்கல.. எமோஷனலாக ஊர்வசி சொன்ன வார்த்தை
சென்னை: நடிகை ஊர்வசி தன்னுடைய அக்கா கல்பனா குறித்து சில விஷயங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வரும் நிலையில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வீடியோவில் ஊர்வசி தன்னுடைய அக்கா கல்பனாவிற்க்கு தன்னைவிட அதிகமான திறமை இருந்தும் அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று வேதனைப்பட்டு இருக்கிறார்.
சினிமாவில் ஒரு சில நடிகைகள் ஒரே குடும்பத்தில் இருந்து நடிக்க வந்திருக்கிறார்கள். ஆனால் அதில் ஒருவருக்கு கிடைத்த அங்கீகாரமும் பிரபலமும் இன்னொருவருக்கு கிடைப்பது கிடையாது. அதுபோல நடிகை ராதா -அம்பிகா, நக்மா- ஜோதிகா என்று பல நடிகைகள் அக்கா தங்கச்சியாக இருந்தாலும் சினிமாவில் தொடர்ச்சியாக ஜெயிக்க முடியாமல் இருந்து வருகிறார்கள்.

அதுபோலத்தான் நடிகை ஊர்வசியும் அவருடைய அக்கா கல்பனாவின் வாழ்க்கையும் இருந்து இருக்கிறது. இது குறித்து ஊர்வசி சமீபத்தில் அளித்த பேட்டியில் என்னுடைய அக்கா கல்பனாவிற்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அதில் நான்தான் நடித்தேன். அதற்காக என்னுடைய அக்கா கோபப்பட்டது கிடையாது. என்னுடைய வளர்ச்சியை பார்த்து அவர் ரொம்பவே சந்தோஷம்தான் படுவார்.
என்னுடைய அக்காவிற்கு அதிகமான திறமைகள் இருந்தாலும் மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் மரியாதை கொடுக்கவில்லை. அக்கா தான் என்னைவிட திறமைசாலி. அவருக்கு பல விருதுகள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் கிடைக்கவில்லை அதுபோல அக்காவோடு நான் ஏதாவது நிகழ்ச்சிகளுக்கு சென்று விட்டால் அக்காவை விட எனக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து விடுவார்கள்.
இதனால் நான் பல பட விழாக்களில் கலந்து கொள்ளாமல் இருந்தேன். என்னுடைய அக்காவின் மறைவிற்குப் பிறகு அவருக்கு பல விருதுகள் கொடுத்தார்கள். அதை நான் வாங்கவில்லை என்று அது பேட்டியில் எமோஷனலாக ஊர்வசி பேசி இருந்தார். ஊர்வசிக்கு கல்பனா, கலரஞ்சனி என்ற இரண்டு சகோதரிகள் இருப்பது பலருக்கும் தெரிந்திருக்கும். இவர்கள் இருவருமே சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர்கள்.
அதில் கல்பனா தமிழ், மலையாளம் மொழிகளில் அதிகமான படங்களில் நடித்திருந்தார். ஊர்வசி போலவே காமெடி சென்டிமென்ட் என்று எல்லா விதத்திலும் கல்பனா கலக்கி இருப்பார் ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக இடம் பிடிக்க முடியவில்லை அதுபோல உடல்நிலை சரியில்லாமல் கல்பனா இறந்து விட்டார்.
அதுபோல புகழின் உச்சத்தில் இருந்த ஊர்வசி சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறார். நடிகை ஊர்வசி முதலில் நடிகர் மனோஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில் எட்டு வருடங்களுக்குள் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். பிறகு ஊர்வசி சிவப்பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு மகள் இருக்கிறார்.
முந்தானை முடிச்சு திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான ஊர்வசி இப்ப வரைக்கும் பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஜே பேபி, அப்பத்தா போன்ற படங்கள் இப்போதைய தலைமுறையாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications