பிக் பாஸூக்குள் ஆபாசம்.. இப்படி உடை அணியலாமா? கொந்தளித்த நடிகை வனிதா
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில் அதில் நடிகர் சத்யா அணிந்திருந்த டிரஸ் ஆபாசமாக இருந்தது என்று நடிகை வனிதா பேசி இருக்கும் நிலையில் இதற்கு இணையத்தில் அதிகமான கமெண்ட்கள் குவிந்து வருகிறது.
அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட பிக்பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இதில் விஜய் சேதுபதி முதல் நாளே தன்னுடைய வேலையை சிறப்பாக தொடங்கி இருக்கிறார். இதனால் இந்த நிகழ்ச்சி பற்றி மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்படுகிறது. அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 18 போட்டியாளர்களில் ஒரு போட்டியாளர் 24 மணி நேரத்திற்குள் அதிரடியாக வெளியேற்றப்பட்டது குறித்தும் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பிக் பாஸ் போட்டியாளரும், நடிகையுமான வனிதா வழக்கம் போல இந்த சீசனையும் ரிவ்யூ செய்து வருகிறார். ஏற்கனவே பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்று நிகழ்ச்சியில் பிக்பாஸ் முன்னாள் போட்டியாளராக கலந்து கொண்ட வனிதா இந்த சீசன் இதுவரைக்கும் இல்லாத வகையில் வித்தியாசமாக இருக்கும், கமல்ஹாசன் ஒருவிதமாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார். ஆனால் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை வேறு விதமாக கொண்டு போகப் போகிறார் என்று பேசி இருந்தார்.

இந்த நிலையில் தான் நேற்றைய எபிசோடு பற்றி வனிதா பேசுகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சில ஆண்கள் போடும் உடை பார்ப்பதற்கே கேவலமாக இருக்கிறது. அதிலும் நடிகர் சத்யா நேற்று போட்டிருந்த உடையை பார்க்கும்போது ஏன் இவர்கள் இப்படி பண்ணுறாங்க என்று தான் கேட்க தோணுகிறது. பிக்பாஸ் வீட்டிற்குள் பெண்கள் மட்டும் மாடர்ன் உடை அணிந்தால் இவர்கள் என்ன இப்படி உடை அணிகிறார்கள் என்று திட்டுகிறார்களே அப்போ ஆண்கள் மட்டும் இப்படி அரைகுறை உடை அணியலாமா?

உள்பனியனை மட்டும் போட்டுக் கொண்டு அவர் என்னைப்பார் என உட்கார்ந்து இருக்கிறார். அந்த பிக் பாஸ் வீட்டிற்குள் அத்தனை பெண்கள் இருக்கிறார்கள். அத்தனை பேரும் முன்பு பெட்ரூமில் போடும் உடயை இவர் அசால்டாக போட்டுக்கொண்டு நிற்கிறார். பெண்களுக்கு மட்டும்தான் உடையில் கட்டுப்பாடு உண்டா? ஆண்களுக்கு கிடையாதா? அவர் அணிந்திருந்த ஆடையை பார்க்கும் போது ஆபாசமாக இருக்கிறது.
அந்த வீட்டில் அவரை விட வயது குறைந்த எத்தனை பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு அது சங்கடத்தை ஏற்படுத்தும் என்று ஏன் சத்யா யோசிக்கவில்லை என்று வனிதா கோபமாக பேசி இருக்கிறார். பிக் பாஸ் வீட்டிற்குள் ஆரம்பமாகும் முதல் நாள் தொடங்கி கடைசி நாள் வரைக்கும் பல பெண் போட்டியாளர்கள் விதவிதமாக மாடர்ன் உடையை அணிகிறார்கள், அதுவெல்லாம் வனிதா கண்களுக்கு தெரியவில்லையா? என்று ரசிகர்கள் திட்டுகிறார்கள்.
அதோடு வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது கூட அவருடைய உடை பார்ப்பதற்கும் ஆபாசமாக இருந்தது.. ஆனால் அதுவெல்லாம் அவருக்கு மறந்து விட்டதா? என்றும் ரசிகர்கள் அவருக்கு கமெண்ட் கொடுத்து வருகிறார்கள். ஆடை குறித்து வனிதா விமர்சித்தது இப்போது பேசும் பொருளாக மாறி இருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications