“நானும் ஷோபா அத்தையும்” நடிகர் விஜய் அம்மாவோடு வனிதா வெளியிட்ட போஸ்ட்.. இதுதான் காரணமா?
சென்னை : நடிகை வனிதா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் நடிகர் விஜய் அம்மா ஷோபாவோடு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கும் நிலையில் இது அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது.
நடிகை வனிதா நடிகர் விஜய் உடன் சந்திரலேகா திரைப்படத்தின் மூலமாகத்தான் சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தார். அந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி அடைந்தது. அதற்குப் பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்த வனிதா திருமண வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். ஆனால் திருமண வாழ்க்கை வனிதா நினைத்த மாதிரி அமையவில்லை.

வனிதா தன்னுடைய குடும்பத்தினர் பார்த்து வைத்த நடிகர் ஆகாஷை திருமணம் செய்திருந்தார். பிறகு ஆகாஷ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து இருந்தார். அதற்கு பிறகு சில வருடங்கள் கழித்து இன்னொரு நடிகரை திருமணம் செய்திருந்தார். அதுவும் விவாகரத்தில் முடிவடைந்தது அதற்கு பிறகு பீட்டர் பாலை காதலித்து திருமணம் செய்திருந்ததாக திடீரென்று புகைப்படம் வெளியிட்டிருந்தார்.
ஆனால் அதுவும் ஒரு சில நாட்களிலேயே அந்த வாழ்க்கை முடிவுக்கு வந்திருந்தது. வனிதாவிற்கு ஏற்கனவே குடும்ப வாழ்க்கையிலும் பல பிரச்சனைகள் இருக்கு, அவருடைய திருமண வாழ்க்கையிலும் பிரச்சனைகள் இருந்தது. அதனாலேயே இப்போது தனியாக வாழ்ந்து வருகிறார். தன்னுடைய மகள் ஜோவிகா மட்டும் தான் வனிதாவோடு இருக்கிறார். அதேபோல அவருடைய மகன் மற்றும் இன்னொரு மகள் ஜெயா இருவரும் தனித்தனியாக அவர்களுடைய அப்பா உடன் இருக்கின்றனர்.
இப்படியான நிலையில் தன்னுடைய முதல் திரைப்படத்தில் நடித்த நடிகர் விஜய்யின் அம்மாவான ஷோபாவோடு புகைப்படங்களை எடுத்து இருக்கிறார். அது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்," ஷோபா அத்தையும் நானும்.. நீண்ட காலத்திற்கு பிறகு மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறோம்" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
அதோடு நடிகை வனிதாவின் மகளான ஜோவிகா நடிக்கும் "டீன்ஸ்" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் வித்தியாசமாகவும், தனித்துவமாகவும் இருந்தது என்றும் வனிதா குறிப்பிட்டு இருக்கிறார். "டீன்ஸ்" என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தான் நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா கலந்து கொண்டிருக்கிறார். அப்போது வனிதா அவரை சந்தித்து புகைப்படங்களை எடுத்து இருக்கிறார்.
அதே நேரத்தில் வனிதாவின் குடும்பமும் நடிகர் விஜய்யின் விஜயின் குடும்பமும் ஆரம்ப காலத்தில் இருந்தே நட்பாக இருந்த நிலையில் பல வருடங்கள் கழித்து தாங்கள் மீண்டும் சந்தித்துக் கொண்டதாக வனிதா அதில் சந்தோஷமாக பகிர்ந்து இருக்கிறார். இது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications