அப்பனா இருந்தாலும் தப்பு தான்.. ஜெயிலர் பார்த்ததும் கோபத்தில் நடிகை வனிதா.. காரணம் இதுதானா?
சென்னை: வெள்ளித்திரை சின்னத்திரை என பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை வனிதா நேற்று வெளியான ஜெயிலர் திரைப்படத்தை பார்த்துவிட்டு தன்னுடைய தந்தையை திட்டும் வகையில் பேசிய வார்த்தைகள் குறித்து தற்போது சமூக வலைத்தளத்தில் பல விவாதங்கள் நடைபெறுகிறது.
ஜெயலர் திரைப்படம் வெளியானதை தொடர்ந்து பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் நடிகை வனிதா ஜெய்லர் திரைப்பட கதையோடு தன்னுடைய குடும்ப வாழ்க்கையை இணைத்து பேசி இருக்கிறார்.

அப்படி என்னதான் நடந்தது. எதனால் வனிதா இவ்வளவு கோபம் ஆனார் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
நடிகை வனிதா என்று சொன்னால் சமூக வலைத்தளத்தில் தெரியாதவர்கள் இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். ஒரு நடிகையாகவும் சர்ச்சைக்குரிய பிரபலமாகவும் அடிக்கடி இணையதளத்தில் பேசப்படும் ஒரு நபராக நடிகை வனிதா இருந்து வருகிறார்.
வனிதாவின் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை திறந்த புத்தகமாக தான் இருந்து வருகிறது. பலருக்கும் இவருடைய வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து தெரிந்திருந்தாலும், தன்னைப் பற்றி விமர்சிப்பவர்களுக்கு தைரியமாக பதிலடி கொடுக்கும் ஒரு பிரபலமாக தான் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் ஜெயலர் திரைப்படம் வெளியானது. ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே இந்த திரைப்படம் அதிகமான வரவேற்பு பெற்றுக் கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் இந்த திரைப்படத்திற்கான அதிகமான எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு இப்போது விருந்து கிடைத்திருக்கிறது.
இந்த நிலையில் ஜெயலர் திரைப்படத்தை பார்த்துவிட்டு பல பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் நடிகை வனிதா தன்னுடைய மகளோடு ஜெயிலர் படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்ததும் தன்னுடைய கருத்தை பகிர்ந்து இருக்கிறார். அதில் ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினி மிக ஸ்டைலாக இருந்தார். படமும் ரொம்பவே அருமையாக இருந்தது.
நான் ரொம்ப அதிகமாக எதிர்பார்த்து வந்தேன் என் எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்து விட்டது. நெல்சன் இந்த படத்திற்காக அதிகமாக உழைத்திருக்கிறார். ரஜினிக்கு தாறுமாறாக பல காட்சிகள் இருந்தது. படம் முழுவதுமே நன்றாக இருந்தது. அதனால் நானும் ரசித்துப் பார்த்தேன். மேலும் இந்த படத்தில் இருந்து என் வாழ்க்கையோடு ஒப்பிடும் ஒரு மெசேஜும் இருக்கிறது.
அதாவது ஜெயிலர் படத்தில்," யார் செய்தாலும் தப்பு தப்பு தான்" என்று கூறப்படுகிறது. அது போல தான், என் வாழ்க்கையிலும் கொஞ்சம் வித்தியாசமாக "அப்பனாவே இருந்தாலும் தப்பு தப்பு தான்" என்று தன்னுடைய அப்பா விஜயகுமாரை சுட்டிக்காட்டி பேசுவது போன்று வனிதா பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications