அப்பா கண்ணு முன்னாடியே அப்படி.. வயிற்றில் குழந்தை.. கதறி அழுத அம்மா..வனிதா கிருஷ்ணசந்திரன் ஓபன் டாக்
சென்னை: நடிகை வனிதா கிருஷ்ண சந்திரன் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்திருக்கிறார்.
அத்தோடு இவர் கிட்டத்தட்ட 170 திரைப்படங்களுக்கும் மேலே நடித்து பிரபலம் அடைந்திருக்கும் நிலையில் சில சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தான் நடித்த காட்சியை பார்த்த தன்னுடைய அம்மா கதறி அழுதது குறித்து பேசி இருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தற்போதைய சூழலில் போட்டி போட்டுக் கொண்டு நடிப்பு துறையில் நாளுக்கு நாள் அதிகமானோர் அறிமுகம் ஆகி கொண்டிருக்கின்றனர். ஆனால் பல வருடங்களுக்கு முன்பு சினிமா என்பது பெரிய ஒரு விஷயமாக இருக்கும். சாதாரணமாக பெண்கள் சினிமாவில் நடிப்பது லேசு பட்ட காரியம் கிடையாது. அந்த மாதிரி சூழ்நிலையில்தான் நடிகை வனிதா கிருஷ்ணசந்திரன் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார்.
இவருடைய சொந்த ஊர் திருச்சிராப்பள்ளி தானாம். இவருடைய வீட்டில் நான்கு குழந்தைகளில் ஒருவராக இவர் பிறந்திருந்த நிலையில் இவருடைய வீட்டில் இவரை சாய் வனிதா என்று தான் அழைத்து இருக்கிறார்கள். வீட்டில் சின்ன வயதாக இருக்கும் போதே இவர் சினிமா பாடல்களுக்கு தன்னந்தனியாக டான்ஸ் ஆடிக்கொண்டும், அதுபோல சினிமா டயலாக்குகளுக்கு நடித்துக் கொண்டும் இருப்பாராம்.
அதனாலேயே இவர் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது நடிப்பதற்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருந்தாராம். அந்த நேரத்தில் தான் இவருக்கு பாதை மாறினால் என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. முதல் முறையாக இந்த திரைப்படத்தின் மூலமாக இவர் அறிமுகம் ஆகி இருக்கிறார்.
அதை தொடர்ந்து அடுக்குமல்லி, சுஜாதா, காடு, மலர்களே மலருங்கள் என அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் அதிகமாக இவர் தமிழ் திரைப்படங்களில் தான் நடித்திருக்கிறாராம். அது மட்டுமல்லாமல் நடிகர் மம்முட்டி மற்றும் மோகன்லாலுக்கு ஜோடியாக விகடகவி மற்றும் சக்கரவாளம் சிவப்பு என சில படங்களிலும் நடித்திருக்கிறாராம்.
முன்னனி நடிகையாக இருந்த நேரத்தில் மலையாள நடிகர் மற்றும் பாடகரான கிருஷ்ண சந்திரனை 1986 திருமணம் செய்து கொண்டாராம். அதற்கு பிறகு சில வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்த வனிதா மீண்டும் 2001 ஆம் ஆண்டு தமிழில் கே. பாலச்சந்திரனின் சீரியலான காதல் முளைத்த ஆசையில் என்ற சீரியலில் மூலமாக நடிக்க வந்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து அலைகள், கோலங்கள் போன்ற பல சீரியகளிலும் மலையாளத்தில் பல சீரியல்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் நடித்த திரைப்படங்களில் கிடைத்த அனுபவங்கள் பற்றி பேசி இருக்கிறார். அப்போது பாதை மாறினால் திரைப்படத்தில் தான் 13, 16 வயதிற்குள் வரும் காதல் அந்த வயதில் ஒரு பெண் ஒருவனை நம்பி கர்ப்பமாகி பிறகு இறந்து போவது போன்ற ஒரு கேரக்டர் அதில் நான் நடித்து இருந்தேன்.
அந்த கேரக்டரில் என்னுடைய அம்மாவும் அப்பாவும் என்னை பொண்ணு பார்க்க வரும் மாப்பிள்ளையின் அம்மாவும் அப்பாவாக நடித்திருந்தார்கள். அப்போ நான் ஒருவரால் கர்ப்பமாகி பிறகு இறந்து போவது போன்ற காட்சிகளை பார்த்ததும் என்னுடைய அம்மா ஓவென்று அழுதுவிட்டார். பிறகு என்னுடைய அப்பா தான் இது நடிப்பு தானே அதை விடு என்று சமாதானப்படுத்தி இருந்தார். அதை என்னால் மறக்க முடியாது. எத்தனையோ கேரக்டரில் நடித்திருந்தாலும் இந்த கேரக்டர் வித்தியாசமாக இருந்தது என்று அந்த பேட்டியில் நடிகை வனிதா கிருஷ்ணச்சந்திரன் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications