எந்த அம்மாவிற்கும் என் நிலைமை வரக்கூடாது.. எல்லோருக்கும் குறை இருக்கும்.. மகன் பற்றி வனிதா எமோஷனல்
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் பிரஸ் மீட்டிங்கில் தன்னுடைய மகன் குறித்து எமோஷனலாக பேசி இருக்கிறார். அதில் தன்னுடைய முதல் திருமண வாழ்க்கை மற்றும் தன்னுடைய மகன் விஜய் ஸ்ரீஹரி பற்றி சில விஷயங்களை வனிதா பகிர்ந்து இருக்கிறார். அப்போது எந்த அம்மாவிற்கு என்னுடைய நிலைமை வரக்கூடாது என்று வனிதா பீல் பண்ணி பேசியிருக்கிறார். இதற்கு இணையத்தில் பலரும் அவருக்கு கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
நடிகர் விஜயகுமாரின் வீட்டில் அவருடைய மகன், மகள்கள் என்று பலரும் சினிமா துறையில் இருக்கின்றனர். அந்த வகையில் அவருடைய பேரன் அதாவது விஜயகுமாரின் மகள் வனிதாவின் மகன் விஜய் ஸ்ரீஹரியும் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் ஆகி இருக்கிறார். பிரபு சாலமன் இயக்கும் மாம்போ என்ற திரைப்படத்தில் விஜய் ஸ்ரீஹரி கதாநாயகனாக அறிமுகம் ஆகி இருக்கிறார்.

இந்த நிலையில் தன்னுடைய மகன் பற்றி வனிதா சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். வனிதா விஜயகுமார் சந்திரலேகா திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் அந்த நேரத்தில் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தார். அப்போது 2000 ஆண்டில் ஆகாஷ் என்பவரை கல்யாணம் செய்திருந்த நிலையில் ஆகாஷ்க்கும் வனிதாவிற்கும் விஜய் ஸ்ரீஹரி என்ற ஒரு மகன் பிறந்திருந்தார்.
ஆனால் ஆகாஷோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வனிதா அவரை விவாகரத்து செய்து விட்டார். அதற்கு பிறகு இரண்டு திருமணம் செய்து இருந்தாலும் அதுவும் விவகாரத்தில் தான் முடித்து இருந்தது. அதே நேரத்தில் விஜய் ஸ்ரீஹரி தன்னுடைய தந்தையோடு தான் வாழ்ந்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு விஜய் ஸ்ரீ ஹரியின் instagram பக்கத்தில் ரசிகர் ஒருவர் நீங்கள் வனிதாவின் மகன் தானே என்று கேட்ட கேள்விக்கு கூட இல்லை நான் ஆகாஷின் மகன் என்று பதில் கொடுத்திருந்தார்.
வனிதாவோடு விஜய் ஸ்ரீஹரி பேசிக் கொள்வது கிடையாது. இந்த நிலையில் விஜய் ஸ்ரீஹரி திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இது பற்றி வனிதா பேசுகையில் என்னுடைய மகன் இப்போது கதாநாயகனாக மாறி இருக்கிறார். நானும் இப்பவும் ஹீரோயினியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய மகனும் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த பாக்கியம் எல்லாம் என்னுடைய அம்மாவிற்கு கூட கிடைக்கவில்லை.
அதே நேரத்தில் என்னுடைய மனதில் பெரிய குறை இருக்குது. எல்லாருடைய வாழ்க்கையிலும் ஒவ்வொரு விதத்தில் ஒரு குறை இருக்கு. அதுபோல்தான் என்னுடைய வாழ்க்கையிலும் என்னுடைய மகனை நினைத்து எனக்கு வருத்தமாக இருக்கிறது. எனக்கு முதல் திருமணம் 18 வயதிலேயே நடைபெற்று விட்டது. அந்த 18 வயதில் இறுதியில் எனக்கு மகனும் பிறந்து விட்டான். அந்த திருமண வாழ்க்கை நான் மெச்சூரிட்டி இல்லாமல் எடுத்த முடிவாக இருந்தாலும் அதில் பிறந்த என்னுடைய மகன் பற்றி நான் எப்போதும் பெருமையாக தான் சொல்வேன்.
அந்த திருமண வாழ்க்கையில் என்னுடைய மகன் பிறந்ததால் தான் இப்போது அவர் இவ்வளவு பெரிய நடிகராக மாறி இருக்கிறார். நான் தாய்லாந்தில் இருக்கும் போது தான் என்னுடைய மகனின் திரைப்படத்திற்கான சூட்டிங் தாய்லாந்தில் நடந்தது. அப்போது அவர் சிங்கத்துடன் நடிக்கிறார் என்று செய்தி கேட்டு நான் ரொம்பவே பயந்து போனேன். என்னுடைய மகனின் கண்கள் என்னைப் போலவே இருக்கும்.
என்னுடைய மகன் பார்ப்பதற்கு அருண் விஜய் அண்ணாவை போலவும் என்னை போலவும் தான் இருப்பார். அது எனக்கு சந்தோஷம்தான். இப்போதைக்கு நானும் என்னுடைய மகனும் பக்கத்தில் இருந்தும் கூட தூரமாக இருக்கிறோம். இந்த மாதிரி நிலைமை எந்த அம்மாவுக்கும் வரக்கூடாது என்று அந்த பேட்டியில் வனிதா எமோஷனலாக பேசியிருக்கிறார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications