நடிகைகள் சமந்தா, மாளவிகா, பியா வரிசையில் வனிதா விஜயகுமார்.. அரிய வகை நோயால் பாதிப்பு!
சென்னை: நடிகை வனிதா விஜயகுமாருக்கு அரிய வகை நோய் இருப்பதாக அவர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரிந்த இந்த ரகசியத்தை பேட்டியில் போட்டு உடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யுடன் சந்திரலேகா, ராஜ்கிரணுடன் மாணிக்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்த வனிதா, தற்போது குக் வித் கோமாளி, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் சினிமாவில் ஒரு கம்பேக் கொடுத்துள்ளார்.

சர்ச்சையையும் வனிதாவையும் பிரிக்க முடியாது என சொல்லும் அளவுக்கு அவருடைய வாழ்வில் பல சம்பவங்கள் நடந்துவிட்டன. பீட்டர் பாலை ஊரறிய திருமணம் செய்து அதுகுறித்த வீடியோ, புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
ஆனாலும் அவரை விட்டு சில மாதங்களிலேயே பிரிந்துவிட்டார். தற்போது பீட்டர் பால் இறந்த நிலையில் வனிதாவின் முன்னாள் கணவர், வனிதாவின் 3ஆவது கணவர் என செய்திகளில் குறிப்பிடுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தானும் பீட்டர் பாலும் சட்டபடி திருமணம் செய்து கொள்ளவில்லை. ஒன்றாக வாழ்ந்தோம். எனவே நான் அவருக்கு மனைவியும் அல்ல, அவர் எனக்கு கணவரும் அல்ல என ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் அவருக்கு ஒரு அரிய வகை நோய் இருப்பதை தெரிவித்துள்ளார். தான் கிளாஸ்ட்ரோபியா எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ள வனிதா, சிறிய கூட்ட நெரிசல் உள்ள இடங்கள், பாத்ரூம், லிப்ட் உள்ளிட்ட இடங்களில் தன்னால் அதிக நேரம் இருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். கிளாஸ்ட்ரோபியா என்பது பிற மனிதர்களின் துணை ஏதுமின்றி தனித்திருப்பதால் ஏற்படும் அச்சமாகும். சினிமா தியேட்டர், குகை, திருமண கூட்டம் போன்ற இடத்திற்கு சென்றால் நாம் ஆபத்தான இடத்தில் மாட்டிக் கொண்டோம் என்ற அச்சம்தான் இந்த நோய்.
உள்ளே மாட்டிக்கொள்வோமோ, மூச்சடைத்து இறந்துவிடுவோமோ என்றெல்லாம் அச்சப்படுவர். இந்த நோய் பாதித்தால் அடிக்கடி வியர்க்கும் அல்லது உடலில் நடுக்கம், நெஞ்சில் கல் போன்ற உணர்வு, வேகமாக துடிக்கும் இதயம், மூச்சுவிடுவதில் சிரமம், உடல் ஜில்லென இருப்பது, வயிற்றில் பிரச்சினை, மயக்கம், மயக்கம் வருவது போன்ற உணர்வு, வறண்ட வாய் உள்ளிட்டவை ஆகும். இந்த நோயால் பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
பாஜக பிரமுகரும் நடிகையுமான மாளவிகா அவினாஷ் தனக்கு ஒற்றை தலைவலி எனும் மைக்ரேன் இருக்கிறது என கூறியிருந்தார். இதனால் அவருடைய முகம் வீங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போட்டோவையும் அவர் வெளியிட்டிருந்தார். ஒற்றை தலைவலி என்பது பொதுவாக எல்லாருக்கும் வரும் பிரச்சினை என்றாலும் மாளவிகா அதுகுறித்து மக்களுக்கு எச்சரிக்கை பதிவை வெளியிட்டிருந்தார்.
நடிகை சமந்தாவுக்கு மயோசிட்டிஸ் எனும் தசை அழற்சி நோய் இருந்தது. அதில் இருந்து அவர் மெதுவாக குணமாகி வருகிறார். சமந்தாவை போல் நடிகை பியாவும் (கோ படத்தில் நடித்தவர்) மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு கால்களில் வீக்கம், உடல் வலி போன்ற பிரச்சினைகளில் அவதிப்பட்டு வந்ததாக தெரிவித்திருந்தார். அது போல் பிரபல நடிகை மம்தா மோகன்தாஸ் புற்றுநோய் பாதிக்கப்பட்டு தற்போது குணமடைந்து வரும் நிலையில் அரிய வகை தோல் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இதனால் தன்னுடைய தோல் நிறம் மாறிவிட்டதாவும் தெரிவித்திருந்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications