1 கோடி கொடுத்தாலும் அதை நான் பண்ண மாட்டேன்.. நினைச்சாலே பயமாயிருக்கு! ஆனால் என் மகன்! வனிதா எமோஷனல்
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் தன்னுடைய மகன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பது குறித்து கண்கலங்க பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதில் தன்னுடைய மகன் நிஜமான சிங்கத்தோடு நடிப்பதை கேள்விப்பட்டதுமே எனக்கு ரொம்பவும் பயமாக இருக்கிறது. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பது போலத்தான் என்னுடைய மகன் நடிப்பு பார்த்து எனக்கு வியப்பாக இருக்கிறது என்று எமோஷனல் ஆக பேசியிருக்கிறார்.
நடிகை வனிதா விஜயகுமாருக்கு அறிமுகமே தேவையில்லை. ஆரம்பத்தில் சந்திரலேகா திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தாலும் திருமணத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்த வனிதாவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சி தான் பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது. அதோடு வனிதாவின் குடும்ப பிரச்சனையும் செய்தி சேனல்களில் பெரிய அளவில் பேசப்பட்டது.

வனிதா விஜயகுமாரின் இரண்டாவது மனைவியான நடிகை மஞ்சுளாவின் மூத்த மகள்தான். மஞ்சுளாவின் மறைவிற்கு பிறகு அவருடைய குடும்பத்தோடு வனிதாவிற்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு பிரச்சனைகள் போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போனது என பல விஷயங்களும் பெரிய அளவில் செய்திகளில் பேசப்பட்டது. அதுபோல வனிதாவின் திருமண வாழ்க்கையும் திறந்த புத்தகமாக தான் இருக்கிறது.
சமீபத்தில் மீண்டும் தன்னுடைய நடிப்பை மீண்டும் தொடங்கி இருக்கும் வனிதா சினிமா மற்றும் சீரியல்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் நடிகர் பிரசாந்த் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் அந்தகன் திரைப்படத்திலும் வனிதா முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் பிரசாந்தை வனிதா ஒரு நிகழ்ச்சியில் பேட்டி எடுத்திருக்கிறார். அந்த மேடையில் தன்னுடைய மகன் சினிமாவில் அறிமுகமாவது குறித்து கண் கலங்க பேசியிருக்கிறார்.
வனிதாவிற்கு நடிகர் ஆகாஷ் என்பவரோடு கடந்த 2000 ஆண்டில் திருமணம் முடிந்திருந்த நிலையில் அப்போது அவருக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற ஒரு மகன் பிறந்திருக்கிறார். அதற்கு பிறகு ஆகாஷுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை வனிதா விவாகரத்து செய்திருக்கிறார். விஜய் ஸ்ரீஹரி தன்னுடைய தந்தை ஆகாஷ் கவனிப்பிலும் தாத்தா விஜயகுமார் பராமரிப்பிலும் இருந்து வருகிறார். இவர் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் "மாம்போ" என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கிறார்.
அந்த திரைப்படத்தில் நிஜமான சிங்கத்தோடு விஜய் ஸ்ரீஹரி நடித்துக் கொண்டிருக்கிறார். இது குறித்து வனிதா உருக்கமாக பேசி இருக்கிறார். என்னுடைய மகன் கதாநாயகனாக போகிறார் என்ற செய்தி கேட்டு நான் ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறேன். அவர் கதாநாயகனாக சிங்கத்தோடு நடிக்க போகிறாராம் அதுவும் பெரிய சிங்கத்தோடு நிஜமாகவே நடிக்க போகிறாராம். இதை கேட்கும் போதே எனக்கு ரொம்ப பயமா இருக்கிறது.
நான் பூனைக்கே பயப்படுற ஆளு... ஆனால் என் மகன் சிங்கத்தோடு நடிக்கப் போகிறான்.. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பது போல எனக்கு பயமாகவும் அதே நேரத்தில் என் மகனின் வாழ்க்கையை நினைத்து சந்தோஷமாகவும் இருக்கிறது. அவனுக்கு முதல் முதலிலேயே பெரிய பிளாட்பாரம் கிடைத்திருக்கிறது. இயக்குனர் பிரபு சாலமன் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு அவனுக்கு கிடைத்திருக்கிறது. அவன் அவனுடைய கனவை அடைய வேண்டும் என்று மனமார்ந்த நான் விரும்புகிறேன் என்று கண்கலங்க எமோஷனலாக மேடையில் வனிதா பேசியிருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications