நடிகை வனிதாவின் முன்னாள் கணவர் திடீர் மரணம்..! வெளியான அதிர்ச்சி தகவல்கள்
சென்னை: நடிகை வனிதாவின் முன்னாள் கணவரான பீட்டர் பால் திடீரென மரணம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி வருகிறது
பீட்டர் பால் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

நடிகை வனிதா விஜயகுமார் சில வருடங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்திருந்தார். வனிதா விஜயகுமார் மூன்றாவது திருமணம் செய்தது சினிமா வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுய. சமூக வலைத்தளத்தில் வனிதா விஜயகுமார் பற்றி காரசாரமான விவாதமும் நடந்தது.
அது தொடர்பாக அந்த நேரத்தில் வனிதா விஜயகுமார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கும் இடையே சண்டை நடந்தது. இருவருக்கும் கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் போலீசில் கம்ப்ளைன்ட் செய்தனர். அப்போது வனிதா விஜயகுமார் எனக்கு தனக்கு ரூபாய் 1.25 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் என்று லக்ஷ்மி ராமகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார். அதுபோல லட்சுமி ராமகிருஷ்ணன் எனக்கு ரூபாய்1.50 கோடி தர வேண்டும் என்று வனிதா வழக்கு தொடர்ந்தார்.

ஆனால் வனிதா விஜயகுமாரின் திருமண வாழ்க்கை அதிக நாட்கள் நீடிக்க வில்லை. இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பீட்டர் பாலை திடீரென விவாகரத்து செய்துவிட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு பீட்டர் பாலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக அவரை சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர்.
இந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் இப்ப வரைக்கும் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் எந்த ஒரு செய்தியையும் வனிதா விஜயகுமார் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பியும் வருகிறார்கள்.
-
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications