10 வருடம் ஆகிவிட்டது.. மறக்க முடியலையே.. கண் கலங்கிய நடிகை "வனிதா”.. எங்கும் நிறைந்திருக்கும் அம்மா
சென்னை: நடிகை வனிதா தன்னுடைய அம்மா நடிகை மஞ்சுளா இறந்து பத்து வருடம் ஆகிவிட்டது என்றும், அவருடைய நினைவுகள் இன்னும் மாறவில்லை என்பது குறித்தும் கண்ணீரோடு instagram பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
ஏற்கனவே தன்னுடைய அம்மா மீது தனக்கு இருக்கும் பாசம் மற்றும் அன்பை அடிக்கடி வனிதா ஒவ்வொரு பேட்டிகளிலும் பேசிக் கொண்டிருப்பார். இந்த நிலையில் தற்போது தன்னுடைய அம்மாவின் பிறந்த நாளில் அவருடைய நினைவுகள் குறித்து உருக்கமாக பகிர்ந்து இருக்கிறார்.

வனிதா தன்னுடைய அம்மாவை பற்றி வெளியிட்ட பதிவிற்கு அதிகமான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அது போல பலர் வனிதாவிற்கு ஆறுதல் கூறியும் வருகிறார்கள்.
வெள்ளி திரையில் கதாநாயகியாக பல முன்னணி நடிகர்களோடு நடித்து இப்போது சின்னத்திரை, வெள்ளித்திரை என்று நடித்துக் கொண்டிருக்கும் நடிகை வனிதா சமூக வலைத்தளத்தில் பலருக்கும் பரீட்சையமானவர்தான். அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருந்தாலும் தன்னுடைய தைரியமான பேச்சால் பலரையும் வாய் அடைக்க வைத்து விடுவது இவருடைய சிறப்பு தான்.
நடிகை வனிதா, நடிகர் விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளாவின் மகள்தான் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் வனிதா பற்றி பல சர்ச்சைகளும் பிரச்சனைகளும் வெளியே தெரிய ஆரம்பித்தது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகுதான். அதுவரைக்கும் இவருடைய குடும்ப பிரச்சனை செய்தி சேனல்களில் தெரிந்திருந்தாலும் அடிதட்டு மக்கள் வரைக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக அனைத்தையும் உடைத்து விட்டார்.
அடிக்கடி நடிகை வனிதா ஏதாவது செய்து சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம் தான். அடுத்தடுத்த திருமணம் மற்றும் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனை, அதைத் தொடர்ந்து சில பிரபலங்களோடு கருத்து மோதல் என்று இவர் எப்போதும் பரபரப்பாக பேசப்படும் ஒரு நபராக இருந்து வருகிறார்.

என்னதான் இருந்தாலும் நடிகை வனிதா அவரிடம் நன்றாக பழகுபவர்களுக்கு இவரும் நல்ல விதமாகத்தான் இருந்து வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய அம்மா மஞ்சுளா குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய பிறந்தநாளில் உருக்கமான சில வார்த்தைகளை பகிர்ந்திருக்கிறார். அதில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா... 10 வருடங்கள் ஆகிவிட்டன.. இன்னும் உன்னை பற்றி நினைப்பை நிறுத்த முடியவில்லை.. நீ எனக்கு கற்றுக் கொடுத்த அனைத்தையும் உன்னை போலவே செய்து கொண்டிருக்கிறேன்.
உன்னைப் போல் தான் நானும் இருக்கிறேன். என்னுடைய ஸ்கிரீன் சேவர், வால்பேப்பர் மற்றும் எனது வீடு என்னை சுற்றிலும் நீங்கள் இருக்கிறீர்கள். நான் உன்னை ஒருநாள் மீண்டும் சந்திக்கிறேன். அதுவரைக்கும் என்னுடைய அன்பு என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதற்கு அதிகமான ரசிகர்கள் நடிகை மஞ்சுளாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிக்கொண்டு, நடிகை வனிதாவிற்கு ஆறுதல் கூறியும் வருகிறார்கள்.
-
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications