Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எங்க அப்பா, அண்ணா கூட அதை பண்ணலாம்.. ஆனால் நான் பண்ண மாட்டேன்! இப்போ மாறிட்டேன்! வனிதா எமோஷனல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் பேட்டி ஒன்றில் தன்னுடைய பக்கத்தில் தன்னுடைய தந்தையோ அல்லது அருண் விஜய் அண்ணாவையோ நீங்கள் உட்கார வைத்தால் அவர்கள் எழுந்து போய் விடுவார்கள். ஆனால் நான் அப்படியெல்லாம் பண்ண மாட்டேன், ஏனென்றால் நான் இப்போ ரொம்ப புரிந்து கொண்டேன் என்று அந்த பேட்டியில் சில விஷயங்களை பேசி இருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமாருக்கு அவருடைய குடும்பத்தினரோடு ஏற்பட்ட குடும்ப பிரச்சனை பலருக்கும் தெரிந்ததுதான். விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மூத்த மகள்தான் வனிதா விஜயகுமார். மஞ்சுளா உயிரோடு இருக்கும்போது தன்னுடைய அம்மா சொத்துக்களை தன்னுடைய அப்பா ஏமாற்றி வாங்கி விட்டார் என்று வனிதா சில வருடங்களுக்கு முன்பு புகார் கொடுத்தது பெரிய அளவில் பேசப்பட்டது.

prashanth vanitha

அதற்கு பிறகு வனிதா தன்னுடைய குடும்பத்தை பிரிந்து தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார். விஜயகுமாரின் மற்ற மகள்கள் மற்றும் மகன் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கின்றனர். வனிதா அவர்களுடைய குடும்ப பங்க்ஷனில் எதிலும் கலந்து கொள்ளவில்லை. தன்னுடைய மகளோடு தனியாக வாழ்ந்து வந்தாலும் இப்போது பல திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் வனிதா கதாநாயகியாக நடிக்கும் திரைப்படத்திற்கான பூஜை போடப்பட்டிருக்கிறது. அந்த திரைப்படத்திற்கான சூட்டிங் வெளிநாட்டில் நடந்து கொண்டிருப்பதாக வனிதா கூறி இருக்கிறார். அதோடு அவருடைய மூத்த மகன் விஜய் ஸ்ரீஹரியும் கதாநாயகனாக திரைப்படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். அந்த திரைப்படத்திற்கான சூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது.

prashanth vanitha

வனிதாவின் மகன் அவருடைய தாத்தா விஜயகுமாரின் கண்காணிப்பில் அவருடைய அப்பா ஆகாஷ் தான் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகை வனிதா ஒரு திரைப்படத்திற்கான பிரஸ் மீட்டிங்கில் கலந்து கொண்ட போது அவரோடு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனும் அதே மேடையில் அமர்ந்திருந்தார். லட்சுமி ராமகிருஷ்ணன் ஏற்கனவே வனிதா பீட்டர் பாலை திருமணம் செய்த போது அதிகமாக விமர்சித்து இருந்தார்.

அதனால் வனிதா மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு இடையே பெரிய அளவில் சண்டை நடந்தது. இருவரும் லைவில் சண்டை போட்டது பார்ப்பவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. ஆனால் தற்போது திரைப்படத்திற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பக்கத்து பக்கத்தில் இருவரும் அமர்ந்திருந்தது பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து வனிதா ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.

prashanth vanitha

அதில் அவர் பேசுகையில் நான் என்னை வேண்டாம் என்று யார் சொன்னாலும் அவர்களை பற்றி கவலைப்பட போவது கிடையாது. நான் ஒரு இடத்தில் இருக்கிறேன் என்றால் என் பக்கத்தில் என்னுடைய அப்பா விஜயகுமாரோ அல்லது அருண் விஜய் அண்ணாவையோ உட்கார வைத்தால் அவர்கள் வேண்டுமென்றால் என் பக்கத்தில் உட்கார மாட்டேன் என்று எழுந்து போகலாம். என்னுடைய தங்கை, அக்கா கூட அப்படி செய்தால் அதற்கு ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ஆனால் நான் அப்படி செய்ய மாட்டேன். ஏனென்றால் நான் எதார்த்தத்தை புரிந்து கொண்டேன். நான் எப்போதுமே ஒருவர் மீது கோபம் இருந்தால் அது என்னுடைய மனதில் இருந்து அவர் மீது கோபத்தை காட்ட மாட்டேன். அன்னைக்கு அந்த நேரத்தில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே பேசி விடுவேன் அவ்வளவுதான். அதுபோல என்னுடைய அப்பா குடும்பத்தினர் அன்னைக்கு அந்த காலகட்டத்தில் பண்ணுனது தவறு. அதை நான் நேரடியாகவே சொல்லி விட்டேன்.

இன்னைக்கு அவங்களுக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது. இன்னைக்கு அவங்க என் வாழ்க்கைக்கு வந்து எந்த பிரச்சனையும் பண்ணல. அவங்க கிட்ட எனக்கு கேட்க எந்த கேள்வியும் கிடையாது. அதனால அவங்கள பார்த்தால் டிப்ளமேட்டிக்கா தான் நடந்துக்குவேன். அன்னைக்கு ஒரு நாள் அந்த மாதிரி பேசுனியே என்று மனதில் வைத்து நான் எதுவும் நடந்துக்க மாட்டேன்.

ஆனால் ஒரு சில மனுசங்க எதையோ நெனச்சு அந்த சிந்தனையில் இருக்கிறாங்க தெரியுமா...! அவங்களை எல்லாம் நாம் மதிக்கிறது கிடையாது என்று பதிலடி கொடுத்திருக்கிறார். இந்த பேட்டி இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+