அப்பாவுக்கு போன் பண்ணி பேசினேன்.. இதைதான் சொன்னாரு! ஆனால் அந்த வீடு..! வனிதா எமோஷனல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜயகுமாரின் பேத்தி திருமணம் கடந்த வாரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது அதற்கு பிறகு அவரைப் பற்றி அதிகமாக இணையத்தில் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் நடிகை வனிதா தன்னுடைய தந்தை குறித்து பேட்டி ஒன்றில் ஷகீலாவுடன் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் தன்னுடைய தந்தையோடு ஏற்பட்ட பிரச்சனைக்கு பிறகு தான் ஒரு முறை தன்னுடைய தந்தைக்கு போன் பண்ணி பேசும்போது என்ன நடந்தது என்பது பற்றி வெளிப்படையாக வனிதா பேசியிருக்கிறார். அதோடு தன்னுடைய அம்மா கட்டிய வீடு குறித்து அந்த பேட்டியில் வனிதா பேசியிருக்கையில் இது இணையத்தில் பரவி வருகிறது.

Actress Vanitha Vijayakumar talked about the house built by her mother

அந்த வகையில் நடிகை வனிதாவிற்கு பெரிய அளவில் அறிமுகம் தேவை இல்லை விஜயகுமாரின் மகளான வனிதா கடந்த 2010 ஆம் ஆண்டு அவருடைய தந்தையோடு ஏற்பட்ட சொத்து பிரச்சனையின் மூலம் பெரிய அளவில் பிரபலமாக பேசப்பட்டார். அதற்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சி, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மீண்டும் பிரபலம் அடைய தொடங்கியதும் இவருக்கு இப்போது சினிமாவில் வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது.

சினிமாவில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கும் வனிதா சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகை ஷகிலாவோடு சேர்ந்து பேசி இருக்கிறார். அப்போது தன்னுடைய அப்பா குறித்து அதில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். அந்த வீடியோ இப்போது மீண்டும் வைரலாகி வருகிறது. அதில் வனிதா பேசுகையில், என்னுடைய அம்மா இறந்த பிறகு ஒரு நாள் நான் எங்க அப்பாவுக்கு போன் பண்ணினேன். அது புது நம்பரில் இருந்து போன் பண்ணினதால் எங்க அப்பா அந்த போன் காலை அட்டென்ட் பண்ணுனார்.

அட்டென்ட் பண்ணும் போது எப்போதுமே அவர் நான் விஜயகுமார் பேசுகிறேன் என்று சொல்லுவார் அப்படித்தான் அன்னைக்கும் சொன்னார். நான் உடனே நான் வனிதா விஜயகுமார் பேசுறேன்னு சொன்னேன். அதற்கு அவர் என்னமா சொல்லு என்று சொன்னார். என் மீது கோபமாய் இருக்கிறவர் டிவி சேனல்களில் வனிதா என்னுடைய மகளே கிடையாது என்று சொல்றவர், நான் தான் பேசுகிறேன் என்று சொன்னால் சொல்லுமானே பாசமா பேசுவார்?

அப்போ வெளியே அவரை அப்படி பேச சொல்லி யாரோ வற்புறுத்துகிறாங்க என்று தானே அர்த்தம். ஆனால் அன்னைக்கு என்னிடம் போனில் ரொம்பவும் பாசமா தான் பேசினார். நான் அப்பா எப்படி இருக்கீங்கன்னு கேட்டேன். அதற்கு அவர் இருக்கேன் கொஞ்சம் உடம்பு சரியில்லன்னு சொன்னார். அதற்கு நான் எனக்கு உங்களை பாக்கணும் போல இருக்கு எனக்கு எந்த சொத்துகளும் வேண்டாம் நான் வாரேன் என்று சொன்னேன்.

அதற்கு அவர் இப்ப வேண்டாம் நான் உடம்பு சரியான பிறகு கூப்பிடுகிறேன் என்று சொன்னார். அப்புறம் பேசிட்டு போனை வைத்து விட்டார் எனக்கு மீண்டும் அவரிடம் பேசணும் போல இருந்து ஒரு விஷயத்தை சொல்லணும்னு திருப்பி கூப்பிட்டேன் போனை எடுக்கவே இல்ல என்று எமோஷனலாக அந்த பேட்டியில் வனிதா பேசிக் கொண்டிருக்கையில் ஷகிலா அவரிடம் இப்ப உன்னுடைய மனநிலை என்ன? அவங்க சொத்தை பற்றி என்னதான் சொல்றாங்க என்று கேட்க,

அதற்கு அதுதான் ஒண்ணுமே இல்லன்னு சொல்லிட்டாங்களே.. அம்மா எவ்வளவு சொத்து வச்சிருந்தாங்க? கடைசியில் எதுவும் இல்லைன்னு சொல்லிட்டாங்க. இப்போ இருக்கிற அந்த ஒரே ஒரு வீடு மட்டும் தான் இருக்குன்னு சொல்றாங்க. அந்த வீடு அம்மா கட்டும்போது எல்லோருக்குமே தெரியும் அம்மா மூன்று பொண்ணுகளும் ஒண்ணா இருக்கணும்னு சொல்லி தான் மூணு மாடியாக கட்டினாங்க.

அப்ப கூட அப்பா தனித்தனியா மூன்று வீடாக கட்டிவிடலாம் என்று சொன்னபோது, இல்ல நான் வாழ்ற வரைக்கும் இந்த பெரிய வீட்டில் வாழணும் என்று சொல்லித்தான் பெரிய வீடா மூன்று பேரும் ஒண்ணா இருக்குற மாதிரி கட்டினாங்க. நான் அப்பவும் சொன்னேன் மூணு பேரு புருஷனும் ஒரே மாதிரி இருப்பாங்கன்னு கிடையாது. அப்படி எல்லாம் வேண்டாம் என்று சொன்னேன்.

ஆனா அம்மா தான் கேட்கல அம்மாவுக்கு இருந்த சொத்து எல்லாம் எதுவுமே இப்போ இல்ல, அது மத்தவங்க பேர்ல இருக்குன்னு அப்பா சொல்றாங்க என்று சொல்லிக் கொண்டிருந்த வனிதா அப்பா ரொம்ப நியாயமான மனுஷன் தான் எனக்கு இப்பவும் அவர் மேல நம்பிக்கை இருக்கு. எனக்குன்னு அவரு எதுவும் செய்ய வேண்டாம். என்னுடைய தங்கச்சிகளுக்காகவும் எல்லாருக்காகவும் பாக்குறது விடவும் அப்பா அவங்களோட பிள்ளைகளுக்காக தான் பார்ப்பாரு.

அதுபோல நான் எங்க அப்பாவுக்கு வேண்டாத பொண்ணாவே இருந்துட்டு போறேன்... ஆனா எனக்கு பிள்ளைகள் இருக்கு அந்த பிள்ளைகளுக்கு சேர வேண்டியதை அவர் செய்வார் என்று நம்புகிறேன் என்று அந்த பேட்டியில் வனிதா பேசியிருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு பேசிய இந்த வீடியோ இப்போது இணையத்தில் பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+