நடிகை "வனிதா” மகன் வெளியிட்ட புகைப்படம்.. "அம்மா” பற்றி ரசிகர் கேட்ட கேள்வி..இப்படி ஒரு ரியாக்ஷனா?
சென்னை: வெள்ளித்திரை, சின்னத்திரை என கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை வனிதா சமூக வலைத்தளத்தில் பலருக்கும் பரீட்சையமானவர்தான்.
இந்த நிலையில் நடிகை வனிதாவின் மகன் ஸ்ரீஹரி சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் சிலவற்றை பகிர்ந்து இருந்தார்.

அதற்கு ரசிகர் ஒருவர் அவரிடம் வனிதாவிடம் பேசும் படி அட்வைஸ் செய்து கமெண்ட் வெளியிட்டு இருக்கிறார். ஆனால் அதற்கு பதில் அளிக்காத ஸ்ரீஹரியின் புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.
நடிகர் விஜயகுமாரின் மகளான நடிகை வனிதா விஜயகுமார் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி பேசப்படும் ஒரு நபராக இருக்கிறார். விஜய் போன்ற முன்னணி கதாநாயகன்களோடு வெள்ளித் திரையில் கதாநாயகியாக நடித்த வனிதா தற்போது சின்ன திரையிலும் வெள்ளி திரையிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருடைய ஆட்டத்தை பார்த்து பல பேர் மிரண்டு போயிருந்தனர். நடிகை வனிதாவின் குடும்ப வாழ்க்கை சமூக வலைதளத்தில் எப்போதும் திறந்த புத்தகமாக தான் இருந்து வருகிறது.. அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருந்தாலும் அதற்கு தைரியமாக பதில் கொடுக்கும் ஒரு துணிச்சலாக பெண்ணாக வனிதா இருந்து வருகிறார்.
நடிகை வனிதா அவருடைய குடும்பத்தினர் உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தனியாக தன்னுடைய இரண்டு மகள்களோடு வசித்து வருகிறார். வனிதாவுக்கு ஏற்கனவே இரண்டு திருமணம் ஆகி இருக்கிறது. இந்த நிலையில் வனிதாவிற்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் மகள்கள் மட்டும்தான் வனிதாவோடு இருக்கின்றனர். மகன் அவருடைய தந்தையோடு தான் இருந்து வருகிறார்.

வனிதாவோடு அவர் பேசாவிட்டாலும் மகன் மீதான பாசத்தை அவ்வப்போது வனிதா தான் வெளிப்படுத்தி வருகிறார். தன் மகன் எப்படியாவது தன்னுடன் இணைந்து விடுவார் என்று காத்திருப்பதாக பல்வேறு பேட்டிகளிலும் தெரிவித்திருக்கிறார். ஆனால் அவரது மகன் வனிதாவுடன் சேரும் மனநிலையில் இல்லை என்றும் வனிதாவின் மகன் நான் அல்ல ஆகாஷின் மகன் என்று வெளிப்படையாகவே சமூக வலைத்தளத்தில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஸ்ரீஹரி தன்னுடைய தந்தையோடு அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் வெளியே செல்லும் இடங்களில் எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இதை அதிகமான ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக அதிகமான ரசிகர்கள் இவர் அவருடைய மாமாவான அருண் விஜய் போலவே இருக்கிறார் என்றும் கூறி வருவார்கள்.

அதுபோல திரைத்துறைக்கு அடுத்த கதாநாயகன் அறிமுகமாகிவிட்டார் என்றெல்லாம் பேசிக் கொண்டிருப்பார்கள். இந்த நிலையில் ஸ்ரீஹரி காயாகிங் என்ற இடத்தில் போட்டிங் போய் இருக்கிறார். அப்போது மாலை வேலையில் எடுத்த மூன்று புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதற்கு ஒரு ரசிகர், உங்க அம்மா கிட்ட பேசுப்பா. அவங்க பாவமில்ல தம்பி. அம்மா தான் லைஃப்ல ரொம்ப முக்கியம் டா. ப்ளீஸ் அம்மா கிட்ட பேசு. ஓகே வா நான் உன்னை என்னோட தம்பியா நெனச்சு சொல்றேன்.

நீ நல்லா திங்க் பண்ணி பாரு பத்து மாசம் சுமந்த தாய் அவங்க. அம்மா மாதிரி உன்னை வேற யாரும் லவ் பண்ண மாட்டாங்க. அவங்க மேல உனக்கு கோபம் இருந்தாலும் நீ பேசுனா அவங்க செம ஹேப்பியா ஆவாங்க. அது உனக்கு செம பிளசிங் டா தம்பி. நீ உங்க அம்மா கூட பேசிடு என்று அறிவுரை கூறியிருக்கிறார் ஆனால் அது குறித்து ஸ்ரீஹரி எந்த பதிலும் கொடுக்கவில்லை.
அதுபோல இன்னொரு புகைப்படத்தில் ஸ்ரீஹரி சட்டை காலரை தூக்கியப்படி கெத்தாக லுக்கு விட்டபடி புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார். அந்த ரியாக்ஷனை பார்த்த ரசிகர்கள் இது அப்படியே அருண் விஜய் போலவே இருக்கிறார் என்று கூறி வருகிறார். இன்னும் ஒரு சிலர் இந்த போட்டோவை பார்க்கும் போது வனிதா அக்காவை பார்த்த மாதிரியே இருக்கு என்று தொடர்ந்து கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.
-
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications