முதல் முறை ரியாலிட்டி ஷோவில் நடுவராகும் வரலட்சுமி சரத்குமார்.. ஒன்இந்தியா தமிழுக்கு கிடைத்த பிரத்யேக தகவல்
சென்னை: நடிகை வரலட்சுமி சரத்குமார் சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராக வர இருக்கிறார் என்ற தகவல்கள் ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேகமாக கிடைத்திருக்கிறது. எந்த நிகழ்ச்சி எந்த சேனல் என்று இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் வாய்ப்பு குறைந்த பிறகு தான் நடிகைகள் சின்னத்திரை நோக்கி அடி எடுத்து வைப்பார்கள். ஆனால் இப்போது சின்னத்திரையில் அறிமுகம் ஆகும் பல நடிகைகள், நடிகர்கள் வெள்ளித்திரையில் கொடி கட்டி பறக்கிறார்கள். ஆரம்பத்தில் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தாலும் அவர்கள் ரசிகர்களின் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்த பிறகு சினிமாவிலும் புகழின் உச்சத்தை அடைந்து விடுகிறார்கள் அதற்கு உதாரணமாக பலரை சொல்லலாம்.

அதுபோல சில நடிகைகள் சினிமாவில் முன்னணி நடிகைகளாக கலக்கி கொண்டிருக்கும் போது சின்னத்திரையிலும் அடி எடுத்து வைத்து வருகிறார்கள். அந்த வரிசையில் இப்போது நடிகை வரலட்சுமி சரத்குமாரும் இணைந்திருக்கிறார். வரலட்சுமி இப்போது தமிழில் அதிகமான திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் பாலிவுட்டில் கலக்கி கொண்டிருக்கிறார்.
கதாநாயகியாக மட்டுமல்லாமல் வில்லியாகவும் துணிச்சல் மிக்க கேரக்டரிலும் நடித்துக் கொண்டிருக்கும் வரலட்சுமி இப்போது சின்னத்திரையில் நடுவராக களம் இறங்குகிறார். வரலட்சுமி நடிகர் சரத்குமாரின் மகள் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். சமீபத்தில் தான் இவருக்கு நிக்கோல் என்பவரோடு திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நான் சினிமாவில் நடிப்பேன் என்று பல பேட்டிகளிலும் வரலட்சுமி கூறி இருக்கிறார். அதுபோலவே திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். 12 வருடங்களுக்கு முன்பு அவர் விஷாலோடு நடித்த மதகதராஜா திரைப்படம் சமீபத்தில் வெளியானது. அந்த திரைப்படம் பெரிய அளவில் வரலட்சுமிக்கு பெயர் வாங்கி கொடுத்தது.
அதற்கு பிறகு இனி தமிழ் சினிமாவில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிரடியாக சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். அதுவும் வேறு எந்த சேனல் இல்லை ஜீ தமிழில் தான். ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக வரலட்சுமி கலந்து கொள்வதாக தகவல்கள் கிடைத்திருக்கிறது.
பிக் பாஸ் முடிந்ததும் விஜய் டிவியில் தொடங்கிய புது நிகழ்ச்சி..இளைஞர்களின் வளர்ச்சிக்கு புதிய முயற்சி
இதற்கு முன்பு இந்த நிகழ்ச்சியில் பாபா மாஸ்டர், சினேகா மற்றும் சங்கீதா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வந்தனர். இந்த நிலையில் இப்போது சங்கீதா இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக வரலட்சுமி சரத்குமார் நடுவராக அறிமுகமாக இருக்கிறார். சமீபத்தில் தான் ஜீ தமிழில் மகா நடிகை நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. அதை தொடர்ந்து விரைவில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட இருக்கிறது.

இதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆடிஷன் நடந்து முடிந்திருக்கிறது. மகா ஆடிசன் மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் இறுதிப் போட்டியாளர்கள் யார் யார் என்பது விரைவில் தெரியவரும். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி தொடங்கப்படுவதற்கு முன்பே பல அதிரடியான மாற்றங்களும் செய்யப்பட்டிருக்கிறது.
Exclusive: விஜய் டிவியை விட்டு விலகிய மணிமேகலைக்கு கிடைத்த பெரிய நிகழ்ச்சி.. எந்த சேனல் தெரியுமா?
நடுவராக வரலட்சுமி சரத்குமார் புதியதாக அறிமுகமாகிறார். அதேபோல இந்த நிகழ்ச்சியை இதுவரைக்கும் ஆர்.ஜே விஜய் தொகுத்து வழங்கி வந்த நிலையில் விஜே மணிமேகலையும் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக மாறி இருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications