முதலமைச்சர் விஜய் செய்ததை ஏத்துக்க முடியல.. எனக்கு இனி எதிரி தான்.. இது கடைசி வீடியோ! நடிகை விஜயலட்சுமி ஆதங்கம்
சென்னை: தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலையில், சி. ஜோசப் விஜய் முதலமைச்சராக பதவியேற்றதும் முன்னாள் முதலமைச்சர் மொக்க ஸ்டாலின் உட்பட சில அரசியல் பிரமுகர்களை சந்தித்து இருக்கிறார். இந்த சந்திப்புகள் அரசியல் ரீதியாக பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளன. இந்த நிலையில் நடிகை விஜயலட்சுமி விஜய் செய்தது தனக்கு வருத்தமாக இருக்கிறது என்று ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், வைகோ, சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றது "நாகரீக அரசியல்" என்று சிலரால் பாராட்டப்பட்டாலும், அதே நேரத்தில் சிலரிடம் அதிருப்தியையும் உருவாக்கியுள்ளது. பிரச்சார மேடைகளில் ஒருவர் மற்றும் ஒருவர் அவ்வளவு குறைகளை சொல்லிக்கொண்டு இப்போ முதலமைச்சர் ஆனதும் விஜய் அவர்களை சந்திக்க சென்றிருக்கிறாரே என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
விஜயலட்சுமி வெளியிட்ட வீடியோ
இந்த நிலையில் நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட வீடியோவில், "வணக்கம் மக்களே... முதலமைச்சர் விஜய் அவர்கள் சில அரசியல் தலைவர்களை சந்தித்திருக்கிறார். அதை பற்றி நிறைய பேர் என்னிடம் கேட்கிறார்கள். 'நீங்கள் விஜய்க்கு சப்போர்ட் தான்... ஆனா உங்கள் எதிரியை சந்திச்சிருக்காரே?' என்று கேட்கிறார்கள்.
முதலில் ஒரு விஷயம் சொல்றேன்.. ஸ்டாலின் சார் மீது எனக்கு மிகப் பெரிய மரியாதை இருக்கிறது. அவர் ஒரு அனுபவம் வாய்ந்த தலைவர். அதே மாதிரி வைகோ சார் மீது கூட எனக்கு மரியாதை இருக்கு. அவர்களை விஜய் சந்தித்தது எனக்கு சந்தோஷம் தான். ஆனா... ஒரு குறிப்பிட்ட அரசியல்வாதி வீட்டுக்கு அவர் போனது எனக்கு ஒத்துக்கொள்ள முடியவில்லை. அது எனக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கு.
முதலமைச்சர் விஜய் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்... அது அவரோட உரிமை... அவரோட முடிவு. அதில் நான் தலையிட முடியாது. ஆனா தேர்தல் நேரத்தில் ஒருவரை கடுமையாக விமர்சனம் பண்ணி, திட்டிட்டு... பிறகு அவர்களையே போய் சந்தித்து கட்டிப்பிடிப்பது... இது மக்களுக்கு ரொம்பவே குழப்பத்தை உருவாக்கும். யாரை நம்பணும் என்று தெரியாமல் போயிடும்.
நான் எத்தனை தடவை வீடியோ போட்டிருக்கேன் தெரியுமா...? 'என்னை காப்பாத்துங்க... என் அக்காவையும் காப்பாத்துங்கனு... தமிழ்நாட்டில் நாங்கள் பாதுகாப்பாக வாழ விடுங்கள்' என்று நான் எத்தனை தடவை கேட்டிருக்கேன்... ஆனா அதுக்கு யாரும் எந்த பதிலும் தரல... யாரும் முன்னாடி வரல...
இப்போ எல்லாரும் அந்த ஒரே அரசியல்வாதியை சந்தித்து, அவரை ஆதரிக்கிற மாதிரி நடந்துக்கிறாங்க. அது எனக்கு ரொம்பவே வேதனை தருது. இதுக்கு மேல என்ன சொல்லுவது என்று எனக்கு தெரியவில்லை.. மக்களுக்கு நான் நன்றி சொல்லிக்கிறேன்... என்னை கொச்சைப்படுத்தினவர்களுக்கு நீங்கள்தான் நல்ல பாடம் கற்றுக் கொடுத்தீர்கள்... இதுதான் என்னோட கடைசி வீடியோ.. இனிமேல் நான் வாழ்வோ சாவோ... கர்நாடகாவில் பார்த்துக்கொள்கிறேன்... என் எதிரியை யாராவது சந்தித்தா... அவர்களும் எனக்கு எதிரிதான்..."

முன்பு பேசிய விஜயலட்சுமி
இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், அதே விஜயலட்சுமி, சி. ஜோசப் விஜய் முதலமைச்சராக பதவியேற்ற போது மிகுந்த மகிழ்ச்சியுடன் வீடியோ வெளியிட்டிருந்தார்.
அப்போது அவர் கூறியது, "என் அண்ணன் ஜெயிச்சுட்டார்".. "நான் சென்னையில் இருந்திருந்தா நேர்ல போய் சந்தித்து வாழ்த்து சொல்லியிருப்பேன். அண்ணே... என்னையும் உங்க கட்சியில் சேர்த்துக்கோங்க என்று கேட்டிருப்பேன் என்று உற்சாகமாக பேசினார். ஆனால் தற்போது, சீமான் சந்திப்பு காரணமாக அவர் எடுத்துள்ள இந்த கடுமையான நிலைப்பாடு, சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications