கண் முன்னே சுனாமியின் கோரத்தாண்டவம்.. நொடிப்பொழுதில் நடந்த இழப்பு! உயிர் தப்பிய விஜி உருக்கம்
சென்னை: பிரபல நடிகை விஜி சந்திரசேகர் கடந்த 2004 ஆம் ஆண்டில் நடந்த சுனாமி பேரழிவில் தான் சந்தித்த துயரங்கள் மற்றும் உயிர் தப்பிய தித்திக் நிமிடங்கள் பற்றி பகிர்ந்து இருக்கிறார்.
சின்னத்திரை வெள்ளித்திரை என முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை விஜி சந்திரசேகர் நொடி பொழுதில் சுனாமியில் இருந்து தன்னுடைய குடும்பத்தோடு தப்பித்து இருக்கிறார்.

ஆழிப்பேரலை

இயற்கை பேரழிவு எப்ப வருகிறது, எப்படி வருகிறது என்று யாருக்கும் தெரியாது. அப்படி வந்து நொடி பொழுதில் பலருடைய உயிரை அள்ளி சென்ற 2004 ஆம் ஆண்டு சுனாமியை யாராலும் மறக்க முடியாது. அந்த நேரத்தில் எப்போதும் போல காலை வேளை மகிழ்ச்சியோடு தொடங்கிய பலருடைய வாழ்க்கை நொடி பொழுதில் சின்னாபின்னமாக மாறிவிட்டது. இப்ப வரைக்கும் பலரும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தான் இருந்து வருகின்றனர். அந்த வகையில் சுனாமி பேரழிவை தன் கண் முன்னே குடும்பத்தோடு பார்த்து உயிர் தப்பிய நடிகை விஜி பல தகவல்களை சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
முதலில் நடந்த அதிர்வு:

அந்த வீடியோவில், நடிகை விஜி தன்னுடைய குடும்பத்தோடு வீட்டில் இருந்தாராம். காலை வேளையில் எப்போதும் போல இவர் மட்டும் ஆரம்பத்தில் முழித்து இருந்தாராம். அப்போது அவருடைய முன்பு இருந்த கண்ணாடி ஆட்டம் கொடுத்திருக்கிறது. அதே நேரத்தில் வீட்டில் கட்டிலுக்கு அடியில் ஒரு அதிர்வு ஏற்பட்டதை தொடர்ந்து இவருடைய குழந்தைகள் பயந்து ஓடி வந்திருக்கின்றனர். அப்போது இவருடைய கணவர் பைலட்டாக இருப்பதால் அவரும் முழித்துப் பார்த்து இது நிலத்தில் ஏற்படும் அதிர்வு அல்ல கடலுக்குள் அடியில் ஏற்படும் நிலநடுக்கம் என்று கூறிக் கொண்டிருந்தாராம்.
வீட்டிற்குள் வந்த தண்ணி
பிறகு அங்கே டப டப் என்ற சத்தம் வேகமாக கேட்க தொடங்கி இருக்கிறது. அப்போது ஏதோ விபரீதமாக இருக்கிறது என்று தெரிந்து கொண்ட விஜி, முதல் உதவி பொருட்களையும் குழந்தைகளுக்கு தேவையான பொருட்களையும் ஒரு பேக்கில் அவசர அவசரமாக எடுத்துக் கொண்டிருந்தாராம். அந்த நேரத்தில் அவருடைய குழந்தைகள் அம்மா தண்ணி வருகிறது என்று கத்தியபடி வந்து இருக்கின்றனர். அப்போது வீட்டிற்குள் தண்ணீர் வர தொடங்கி விட்டதாம்.
கீழே விழுந்த பில்டிங்

அப்போது ஜன்னல் கதவுகள் எல்லாம் அவசர அவசரமாக விஜி லாக் செய்து, அவருடைய கணவர் அனைவரையும் மாடிக்கு அழைத்து விட்டாராம். இவரும் அங்கே ஓடி இருக்கிறார். மேலே போய் பார்க்கும் போது அங்கிருந்த அனைத்து பில்டிங்கும் ஒரு பிரட் துண்டு போல மளமள என்று விழுந்து கொண்டிருக்கிறதாம். அதைப் பார்த்து இவர்கள் திகைத்துப் போய் அதிர்ச்சியில் இருந்திருக்கின்றனர். அப்போது இவர்களுடைய வீட்டிற்குள் பாதி அளவிற்கு தண்ணீர் வந்து விட்டதாம். வீட்டிலிருந்த நாய்கள் எல்லாம் தண்ணீரில் நீச்சல் அடித்துக் கொண்டிருந்திருக்கிறது.
கணவரின் வேண்டுதல்
கண் முன்னே படகுகள் தெர்மாகோல் போல அலையில் அடித்து தூக்கி வீசப்பட்டு கொண்டிருக்கிறதாம். உயர்ந்த கோபுரங்களும் விழுந்து கொண்டிருப்பதை இவர்கள் வீட்டின் மேலே நின்று கொண்டு பயத்தில் பார்த்துக் கொண்டுதான் இருந்தாராம். பெரிய பிரளயம் வந்துவிட்டது. உலகமே இப்போது அழிந்து விடப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருந்தார்களாம். அப்போது அவருடைய கணவர் கடவுளிடம் மக்களை காப்பாற்றும் படி வேண்டிக் கொண்டு இருந்தாராம்.
குடும்பமே தப்பியது

இவரும் மக்களுக்கு எந்த ஆபத்தும் வந்து விடக்கூடாது என்று வேண்டிக் கொண்டு இருந்தாராம். நல்ல வேலையாக இவருடைய வீட்டில் யாருக்கும் எதுவும் ஆகவில்லையாம். ஊரெல்லாம் ஒரே ஓவென்ற அலறல் சத்தம் கேட்டுக் கொண்டிருந்ததாம். கீழே இறங்க முடியாத நிலையில் இவர்கள் தவித்து கொண்டிருந்தாலும், சில மணி நேரம் கழித்து தண்ணீர் வற்றியதும் இவர்கள் கீழே வந்திருக்கிறார்கள். இப்போது நினைத்தாலும் அந்த நிமிடங்களை எங்களால் மறக்க முடியாது என்று உருக்கமாக விஜி பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications