தெலுங்கு படத்திற்கு ரிவ்யூ கொடுங்க! பாலய்யா பத்தி பேசினா பிஞ்சிடும்! ப்ளூசட்டைக்கு ஆதவன் சவால்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினி குறித்து ப்ளூசட்டை மாறன் இத்தனை பேசுறாரே! ஏன் அவரு தெலுங்கு கத்துக்கிட்டு பாலைய்யா (பாலகிருஷ்ணா) படம் குறித்து ரிவ்யூ செய்ய சொல்லுங்களேன். பாலைய்யா பத்தி ரெண்டு வார்த்தை தப்பா பேசினா கூட பிஞ்சிடும் என ஆதவன் சவால் விட்டு பேசியுள்ளார்.

இதுகுறித்து காமெடி நடிகர் ஆதவன் கூறுகையில் ப்ளூசட்டைக்கு நாமெல்லாம் ரொம்ப சாதாரணம்யா, அவர நாமெல்லாம் எதுவும் செய்யறது இல்ல. அவரை தெலுங்கு கத்துக்கிட்டு தெலுங்குல ஒரு விமர்சனம் கொடுக்க சொல்லுங்களேன் பார்க்கலாம். கொடுத்துவிட்டு எப்படி திரும்பு வரார்னு பார்த்துடறேன்.

television rajinikanth

தெலுங்குல கொடுத்தா கும்முனு ஒன்னு கொடுப்பாங்க. பாலைய்யா பத்தி ரெண்டு வார்த்தை தப்பா பேசுனா பிஞ்சிடும். ஏன்னா அவங்கெல்லாம் ஒவ்வொரு சினிமாவையும் மதிப்பாங்க என ஆதவன் சவால் விடுத்துள்ளார்.

கூலி படம்

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி படம் கடந்த 14 ஆம் தேதி வெளியானது. இந்த படம் குறித்து ப்ளூசட்டை மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த படம் குறித்த ரிவ்யூவில் ப்ளூசட்டை மாறன் பேசுகையில், நண்பன் கொலை செய்யப்பட்டதற்கு, பழி வாங்க, ஹீரோ வருவதுதான், இந்தப் படத்தின் கதை.

பான் இந்தியா படம்

பான் இந்தியா படம் என்றால், 'நேட்டிவிட்டியோடு' எடுத்து, அது, நம் ஊரிலும் ஹிட்டாக வேண்டும். இந்திய அளவிலும், உலக அளவிலும், ஹிட்டாக வேண்டும். அதுதான், பான் இந்தியா ஹிட் என்று சொல்லப்படும். ஆனால், ரஜினியோ, மற்ற மொழி நடிகர்களை, தன் படத்தில் சேர்த்துவிட்டு, பான் இந்தியா படம் என, சொல்கிறார்.

துப்பு இல்லாத லோகேஷ்

கதை எழுத துப்பு இல்லாத ஒருவர்தான், இந்தக் கதையை, எழுதியிருப்பார் என்று, தோன்றுகிறது. லோகேஷ் கனகராஜுக்கு, கொலை, கஞ்சா, பவுடர் கடத்துவதைத் தவிர, எதுவும் தெரியாது. அப்படிப்பட்ட லோகேஷ், இந்த மூன்று மணி நேரத்தை, ரசிகர்கள் எப்படி கடத்துவார்கள் என்பதை, யோசித்து, படம் எடுத்திருந்திருக்கலாம்.

உபேந்திரா

உபேந்திராவெல்லாம் எவ்வளவு பெரிய டெக்னீஷியன். அவரை அழைத்து வந்து, நாசம் செய்திருக்கிறார்கள். அவர் யார் என்றே தெரியவில்லை. அமீர் கான் வந்து பீடியின் சுவைகளை பேசுகிறார். இந்த படத்தால் ஜெயிலர் படம் நல்ல படமாகிவிட்டது. பொதுவாக மொக்கை என நினைத்து போய் பார்த்தால் நன்றாக இருக்கும். ஆனால் இந்த படத்தை மொக்கை என நினைத்து பார்த்தாலுமே உங்களுக்கு பிடிக்காது" என ப்ளூசட்டை மாறன் விமர்சித்திருந்தார்.

சினிமா இல்லாட்டி

இதுகுறித்து நடிகர் ஆதவன் தனது பதிலடியில் கூறியிருப்பதாவது: விமர்சனம் செய்யுறதுக்கு ஒரு அளவு இருக்கு. சினிமா இல்லன்னா நம்ப வாழ்க்கை என்ன ஆகும்னு யோசிக்கணும். யூடியூப்ல் யாரை பேட்டி எடுப்பீங்க, யார் வீட்டு கல்யாணத்தை பார்ப்பீங்க.

சினிமாவுல பாட்டு

சினிமாவுல வர பாட்டதான் கச்சேரியில பயன்படுத்துறாங்க. சினிமாவை நம்பி பல பேர் வாழ்க்கை இருக்கு. சினிமான்னா குறை இருக்கத்தான் செய்யும். நீங்கள் எடுத்த படம் என்ன 100 நாள் ஓடுச்சா? என ஆதவன், ப்ளூசட்டை மாறனுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இந்த நிலையில் தற்போது பாலைய்யா படத்திற்கு ரிவ்யூ செய்து பாருங்கள் என சவால் விடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+