பிரிஞ்சிட்டாரு கணவர்.. எய்ட்ஸ் பாதிப்பு பேச்சு.. கெட்ட கெட்ட கமெண்ட்! கும்மி டான்சர் சங்கீதா குமுறல்
சென்னை: சோஷியல் மீடியாவில் ரீல்ஸ் பதிவிட்டாலே, அடுத்தவர்களை பற்றி தவறாக பேசணுமா? வெறும் ஒரு நிமிட வீடியோவை வைத்துக் கொண்டு, ஒரு பெண்ணை எப்படி தவறாக மதிப்பிடலாம்? ஒருவரை பற்றி எதுவுமே தெரியாமல் எப்படி பேசலாம்? பிறரை பற்றி தவறாக பேசும் உரிமையை இவர்களுக்கு யார் தந்தது? அப்படியானால், கமெண்ட் பதிவிடுபவர்களும், சமூகத்தில் உள்ள மற்றவர்களும் சரியாகத்தான் இருக்கிறார்களா?" என்று இன்ஸ்டா பிரபலம் சங்கீதா கேள்வி எழுப்பியிருக்கிறார்.
2nd Floor Tamil என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்திருந்த கும்மி டான்சர் சங்கீதா, "நீயா நானா நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தபோது, டிரோலிங் செய்வதற்கான கன்டன்ட் என்று சொல்லிதான் அழைத்தார்கள்..

நான் செய்த ரியாக்ஷன்களை வைத்து, வைத்து, என்னை ஏற்கனவே நிறைய பேர் டிரோல் செய்ததால், அதற்கான காரணங்களை அறிய வேண்டும் என்று நினைத்தேன்.. அதேபோல, மீண்டும் என்னை பற்றி வரும் டிரோல்களுக்கும் என்னை தயார்படுத்திக் கொண்டேன். அதனால்தான் நீயா நானா நிகழ்ச்சியிலேயே கலந்து கொண்டேன்.. எதிர்பார்த்தபடியே அங்கு எனக்கு ஒரு பதில் கிடைத்தது.
ஆணாதிக்க மனோபாவம்
அதாவது, "ஒரு பெண் சோஷியல் மீடியாவில் ஏதாவது ரியாக்ஷன் செய்தால் அதை உடனே டிரண்டாக்கிவிடுகிறார்கள், ஆனால், இதையே ஒரு ஆண் ரியாக்ஷன் தந்தால் அதை டிரெண்டாக்குவதில்லை.. அதுபோலத்தான் உங்களுடைய ரியாக்ஷனும் டிரெண்டாக்கப்பட்டது" என்று நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார்.
ஒரு பெண் எப்படி இவ்வளவு தூரம் ரீச் ஆக முடியும்? என்ற பொறாமை ஆண்களுக்கு இருக்கிறது. மோசமான கமெண்ட்களை பதிவிடுவதே பெரும்பாலும் ஆண்களாகவே இருககிறார்கள்.. இதற்கெல்லாம் காரணம் ஆணாதிக்கம்தான்.. பெண் எப்படி இவ்வளவு பிரபலமாகலாம்? என்ற பொறாமையே காரணம். இதெல்லாம் எனக்கு நீயா நானா நிகழ்ச்சிக்கு போனபிறகுதான் தெரிந்துகொண்டேன்.
நீயென்ன அவ்ளோ பெரிய ஆளா
இப்போது மீண்டும் என்ன சிக்கல் வந்துவிட்டதென்றால், மறுபடியும் என்னை டிரோல் செய்கிறார்கள். "உன்னை யாரு நீயா நானா ஷோ-வில் கலந்து கொள்ள சொன்னது? நீயென்ன அவ்ளோ பெரிய ஆளா?" என்று என்னை திட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
பாடிஷேமிங், அசிங்கமான கமெண்ட்கள் இன்னமும் வந்து கொண்டுதானிருக்கு.. இப்படி என்னை விமர்சித்தவர்கள் எல்லாம் அப்படியேதான் இருக்கிறார்கள்.. ஆனால், நான் மட்டும் அடுத்தடுத்த கட்டத்துக்கு வளர்ந்து கொண்டிருக்கிறேன். நிறைய நிகழ்ச்சிகளுக்கு விருந்தினராக தினமும் சென்று கொண்டிருக்கிறேன்..
ஒருவரை பற்றி எப்படி முடிவு செய்கிறீர்கள்
என்னுடைய ஒரு கேள்வி என்னவென்றால், சோஷியல் மீடியாவில் ரீல்ஸ் பதிவிட்டாலே, அடுத்தவர்களை பற்றி பேசணுமா? ரீல்ஸ் பதிவிடுவது வெறும் ஒரு நிமிட வீடியோவாக இருக்கலாம்.. 1 நிமிட வீடியோவை வைத்து, இப்படிப்பட்ட பெண்தான் என்று எப்படி முடிவு செய்யலாம்? ஒருவரை பற்றி எதுவுமே தெரியாமல் எப்படி பேசலாம்? பிறரை பற்றி தவறாக பேசும் உரிமையை இவர்களுக்கு யார் தந்தது? அப்படியானால், கமெண்ட் பதிவிடுபவர்களும், சமூகத்தில் உள்ள மற்றவர்களும் சரியாகத்தான் இருக்கிறார்களா?
திருநங்கை - எய்ட்ஸ்
"உனக்கு எய்ட்ஸ் இருக்கு, நீ போய் நல்ல டாக்டரை பாரு" என்று எனக்கு கமெண்ட் செய்கிறார்கள்.. கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டுவதும் இதுவரை மாறவில்லை.. "நீ பார்க்குறதுக்கு திருநங்கை போலவே இருக்கே?" என்று பதிவிடுகிறார்கள்..
இந்த கமெண்ட்கள் எல்லாம் என்னை அதிகமாகவே காயப்படுத்தியது.. இதுபோன்றவர்களை பிளாக் செய்துவிடுகிறேன்.. ரிப்போர்ட்டும் செய்துவிட்டேன்.. அதனால்தானோ என்னவோ, இப்போதுகூட நான் எந்த ஊருக்கு சென்றாலும் திருநங்கைகள்தான் எனக்கு அதிக ஆதரவு தந்து அன்பு காட்டுகிறார்கள். "எங்களை மாதிரியே நீ இருக்கிறேன்னு சொல்றதை நினைச்சு கவலைப்படாதேம்மா" என்று சப்போர்ட்டாக பேசுகிறார்கள்.
கவுண்டர் சமூகத்து பெண்
நான் அந்த டான்ஸ் ஆடியதாலேயே என்னை பலரும் கவுண்டர் சமூகத்துக்கு பெண் என்று நினைக்கிறார்கள்.. அந்த டான்ஸ் ஆட சென்றதே, என்னுடைய மன அழுத்தத்தை குறைத்து கொள்வதற்காகத்தான். எனக்கு சின்ன வயசிலிருந்தே முருகர் சாமி மிகவும் பிடிக்கும்.. நடனமும் பிடிக்கும். ஒன்றரை வருடம் அந்த நடனத்துக்காக நான் கஷ்டப்பட்டிருக்கிறேன். ஆனால், நாக்கை நீட்டியதை மட்டுமே வைத்து என்னை திட்டி தீர்க்கிறார்கள்.
இதனால் நான் வாழ்க்கையில் நிறைய இழந்துட்டேன்.. மோசமான கமெண்ட்களால் இன்ஸ்டாவில் டிரெண்டாகியதால், என்னுடைய கணவர் என்னை விட்டு விலகி சென்றுவிட்டார்.. விவாகரத்து ஆகவில்லை.. ஆனால் பிரிந்திருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications