ஐஸ்வர்யா ராய்-அபிஷேக் பச்சன் விவாகரத்து? சல்மான் கான் பற்றி பேசி.. திடீரென சஞ்சய் தத் என்ட்ரி வேற!
சென்னை: கடந்த சில நாட்களாகவே, நடிகை ஐஸ்வர்யா ராய் பற்றிய செய்திகள் தொடர்ந்து சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, அவர் தனது கணவர் அபிஷேக் பச்சனை விவாகரத்து செய்யப்போவதாகவும், வேறு ஒருவரை காதலித்து வருவதாகவும் பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.
2007ஆம் ஆண்டு பிரம்மாண்டமாக நடைபெற்றது இந்த ஜோடியின் திருமணம். இதன் பிறகு, நம்மூர் அஜித் ஷாலினி, சூர்யா ஜோதிகா ஜோடி போல, ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் தம்பதியினர் பாலிவுட் சினிமாவின் மிகவும் பிரபலமான ஜோடியாக திகழ்ந்தனர். இருவரும் ஒன்றாக பல படங்களில் நடித்ததுடன், அவர்களது ஜோடி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால், தற்போது இந்த ஜோடி பிரிந்துவிட்டதாகவும், இருவருக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஐஸ்வர்யா ராய் ஒரு மருத்துவரை காதலித்து வருவதாகவும், அவர்களின் நட்பு காதலாக மாறியதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், ஐஸ்வர்யாவின் நெருங்கிய வட்டாரங்கள் இது வெறும் வதந்தி என்றும், அவர்கள் இருவரும் பழைய நண்பர்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, அபிஷேக் பச்சன் தனது சமீபத்திய படமான 'தஸ்வி'யில் நடித்த நடிகை நிம்ரத் கவுருடன் நெருக்கமாக பழகி வருவதாகவும், இது ஐஸ்வர்யாவுக்கும் அபிஷேக்கும் இடையே பிரச்சினையை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த வதந்திகள் குறித்து ஐஸ்வர்யா ராய் அல்லது அபிஷேக் பச்சன் இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வமான தகவலையும் வெளியிடவில்லை. இருப்பினும், இந்த செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மறுபுறம், ஐஸ்வர்யா ராய் கடந்த காலத்தில் சல்மான் கானுடன் இருந்த உறவு குறித்தும் மீண்டும் இப்போது பேசப்படுகிறது. ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஐஸ்வர்யா, சல்மான் கானுடன் இருந்த உறவு தனது வாழ்க்கையில் மிகவும் மோசமான அனுபவமாக இருந்ததாக கூறியிருந்தார். சல்மான் தன்னை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், நடிகர் சஞ்சய் தத்தும் ஐஸ்வர்யா ராய் குறித்து ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். 1994-ம் ஆண்டு, மிஸ் இந்தியா பட்டத்தை வென்றதும், ஐஸ்வர்யா ராய் முகம் இந்தியா முழுக்க பிரபலமானது. மணிரத்னம் இயக்கிய 'இருவர்' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ஐஸ்வர்யா ராயின் அழகில் பலர் மயங்கினர். அந்தப் பட்டியலில் சஞ்சய் தத்தும் இருந்தாராம். சமீபத்தில் ஒரு பேட்டியில், சஞ்சய் தத் ஐஸ்வர்யாவை முதன்முறையாக ஒரு விளம்பரப் படத்தில் பார்த்ததாகவும், அவரது அழகில் மயங்கிப் போனதாகவும் கூறியிருந்தார். மேலும், அவர் ஐஸ்வர்யாவிடம் திரையுலகில் நுழைய வேண்டாம் என்று கூறியதாகவும் தெரிவித்திருந்தார். திரையுலகின் கடினமான போட்டிகள் அவரது அழகையும் மனதையும் பாதிக்கக்கூடும், அந்த அழகு கெட்டுவிடக் கூடாது என்று எனது மனது துடித்தது என்றும் சஞ்சய் தத் கூறியுள்ளார்.
"நீங்கள் இரண்டு படி மேலே ஏறிச் சென்றாலும், 500 பேர் உங்களை கீழே இழுப்பார்கள்" என்று ஐஸ்வர்யாவிடம் கூறியிருந்தாராம் சஞ்சய் தத். ஆனால், ஐஸ்வர்யா தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. வாழ்க்கை என்பது சவால்களை எதிர்கொள்ளும்போதுதான் வலுவடையும் என்று அவர் நம்பினாராம். இந்நிலையில், சஞ்சய் தத்தின் இந்த பழைய பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் பச்சன் தம்பதியின் திருமண வாழ்க்கை குறித்த வதந்திகள் பரவி வரும் நிலையில், இந்த பேட்டி கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications