இன்று கோடிகளில் புரளும் ஐஸ்வர்யா ராய்! அன்று மாடலிங்கில் வாங்கிய சம்பளம் என்ன தெரியுமா?
சென்னை: பணக்கார நடிகைகளில் இரண்டாவது இடம் பிடித்துள்ள ஐஸ்வர்யா ராய், அன்று மாடலிங் தொழில் செய்த போது வெறும் ரூ.1500 சம்பளம் வாங்கிய விவகாரம் வைரலாகி வருகிறது.
பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராய் விளம்பரங்களுக்கு மாடலாகியே தனது பணியை தொடங்கினார். 1994 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் இருவர் படத்தில் அறிமுகமானார். இதையடுத்து இவருக்கு இந்தி, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் இருந்து வாய்ப்புகள் வந்தன. அந்த வகையில் தமிழில் ஐஸ்வர்யா ராய் நடித்த படம் பொன்னியின் செல்வன் 2. முதல் பாகத்திலும் இவர் நடித்திருந்தார்.
இன்று உலக அழகி, நடிகை என இருந்தாலும் அப்போது மாடலாக இருந்த ஐஸ்வர்யா ராய் வாங்கிய சம்பளம் குறித்து சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 1992 ஆம் ஆண்டு கிருபா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மாடலாக ஐஸ்வர்யா ராய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதில் ஐஸ்வர்யா ராயின் சம்பளம் ரூ.1500 ஆகும். திரைப்படங்கள் தவிர்த்து அழகு சாதன பொருளான லாரியல் பாரீஸின் விளம்பர தூதராகவும் உள்ளார். ஒரு படத்தில் நடிப்பதற்கு ஐஸ்வர்யா ராய் 10 கோடி முதல் 12 கோடி வரை சம்பளமாக வாங்குகிறாராம்.
அது போல் விளம்பர படங்களில் நடிப்பதற்கு 5 முதல் 6 கோடி ரூபாய் வரை வாங்கிக் கொள்கிறாராம். இந்தியாவில் பணக்கார நடிகைகளில் ஜூகி சாவ்லாவை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் ஐஸ்வர்யா ராய் இருக்கிறார். அவருடைய சொத்து மதிப்பு ரூ 500 கோடிக்கும் மேல் என சொல்லப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை.
இவர் அமிதாப் பச்சன் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அபிஷேக்கை விட ஐஸ்வர்யா வயதில் மூத்தவர். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். இவர் முகேஷ் அம்பானியின் பள்ளியில்தான் படிக்கிறாராம்.
ஐஸ்வர்யாவுக்கும் அபிஷேக்கிற்கும் புரிதல் இல்லை என்றும் அவர்கள் விரைவில் விவாகரத்து செய்ய போகிறார்கள் என்றும் தகவல் வந்தது. ஆனால் அவற்றை பொய்யென அண்மையில் நிரூபித்துவிட்டனர். அதாவது ஐஸ்வர்யாவின் பிறந்தநாளுக்கு அபிஷேக், ஐஸ்வர்யா, ஆராத்யா ஆகிய மூவரும் புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாவில் போட்டிருந்தனர். ஒரு பக்கம் மகளையும் மறு பக்கம் மனைவியையும் அபிஷேக் பிடித்துக் கொண்டிருந்தார்.












Click it and Unblock the Notifications