100 மடங்கு பிரமிப்பு அஜித்.. இந்த வெய்யில்ல கோட் சூட்.. ஆமா, அஜித் குமாருடன் டெல்லி சென்றது இவரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜித்திடம் சமீபகாலமாகவே மாற்றம் தென்படுகிறது.. பொதுஇடங்களுக்கு இப்போது வரத்துவங்கியிருப்பதுபோல், பல வெளிநாடுகள் உட்பட பல்வேறு இடங்களுக்கு சென்று, ரசிகர்களுக்கு தரிசனம் தந்தால், இன்னும் கொண்டாட்டங்கள் 100 மடங்கு அதிகமாகும் என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கருத்து தெரிவித்துள்ளார். அத்துடன் அஜித்தின் கடினமான உழைப்பு, வெற்றிகள் குறித்தும் பேட்டி ஒன்றில் விரிவாகவே பேசியிருக்கிறார்.

நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Television Ajith Kumar ajith

குவியும் வாழ்த்துக்கள்

அஜித்குமார் உள்ளிட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டது. இவருக்கு தற்பொழுது, பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்களது வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், Media Circle என்ற யூடியூப் பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார்.. விஜய்யை வலுவாக எதிர்க்க வேண்டும் என்பதற்காக அஜித்துக்கு, பாஜக இந்த விருதை வழங்கியிருப்பதாக விமர்சனம் கிளம்பியிருக்கிறது.. ஆனால், அது தவறான கணிப்பு..

ஏனென்றால், கடந்த 93, 94ம் ஆண்டு காலகட்டங்களிலிருந்தே, பல சிக்கல்களை, பல தடங்கல்களை, பல பிரச்சனைகளை, பல உடல்நல கோளாறுகளை எதிர்கொண்டவர் அஜித்.. இனிமேல் அஜித் எந்திரிச்சு வரமாட்டார் என்ற விமர்சனங்களை எல்லாம் அடித்து நொறுக்கிவிட்டு மேலே வந்தவர் அஜித்.

அஜித் Vs விஜய்

அதேபோல அஜித் Vs விஜய் என்ற போட்டியை இன்னமும் தக்கவைத்து வருகிறார்.. அதுமட்டுமல்ல, விஜய்தான் கலெக்‌ஷன் கிங், அஜீத்துக்கு மாஸ் ஆடியன்ஸ் கிடையாது, தமிழ்நாட்டை விட்டால் அஜித்துக்கு ரசிகர்களே கிடையாது என்ற விமர்சனங்களை உடைத்துள்ளார்.. குறிப்பாக குட் பேட் அக்லியில் மிகப்பெரிய வசூலை அள்ளியதுடன், தென்மாநிலங்கள் உட்பட உலக நாடுகளில் அஜித்துக்கு வரவேற்பு கிடைக்க செய்துள்ளது. இந்த கொண்டாட்டத்தை, உற்சாகத்தை அஜித் இப்போதுதான் உணர தொடங்கியிருக்கிறார்.

நேற்று ஏர்போர்ட்டில் அஜித், ஷாலினி, 2 குழந்தைகளுடன் கிளம்பி சென்றது, இன்னும் டிரெண்டாக போய்க்கொண்டிருக்கிறது. அஜித் இப்போது என்ன செய்தாலும் அதை கொண்டாடுகிறார்கள்.. கரீஷ்மா அஜித்துக்கு நிறையவே இருக்கிறது.. பத்மபூஷன் விருதை, அதன் முறைப்படிதான் வாங்கணும்.. வேட்டி கட்டியும் அந்த விருது வாங்கலாம். ஆனால், அஜித் ராயல் லுக்கில்தான் எப்போதும் இருப்பார்.

சூப்பரான டிரெஸ் கோடு

சென்னையில் ஐபிஎல் மேட்ச் பார்க்க வந்தபோதுகூட, கோட்-சூட்டில்தான் வந்தார். இந்த வெயில் வேக்காட்டில் கோட்-சூட் எப்படித்தான் போட்டிருந்தாரோ தெரியல.. ஆனால் டிரஸ் கோட் என்பதை மிகச்சரியாக கடைப்பிடித்து வருகிறார். பார்ப்பதற்கு ஹாலிவுட் நடிகர் போலவே இருக்கிறார் அஜித்.
சினிமாவையும் தாண்டி, விளையாட்டில் பங்கேற்று இந்தியாவுக்காக பெருமை சேர்ப்பவர் அஜித்.. வேறு எந்த நடிகராவது, சினிமாவை தாண்டி அவார்டுகளை வாங்கியிருக்கிறார்களா? வேற ஒரு பெருமையை நாட்டுக்காக பெற்று தந்திருக்கிறார்களா?

100 மடங்கு கொண்டாட்டம்

அஜித்திடம் சமீபகாலமாகவே மாற்றம் தென்படுகிறது.. பொதுஇடங்களுக்கு இப்போது வரத்துவங்கியிருப்பதுபோல், பல இடங்களுக்கு போய் தரிசனம் தந்தால், இன்னும் கொண்டாட்டங்கள் 100 மடங்கு அதிகமாகும்.

அதேபோல, பட புரமோஷன்களுக்கு அஜித் சென்று வந்தால், பல கோடிகளை படம் வசூலாகும்.. சில நடிகர்கள் புரமோஷன்களில் நேரடியாக பங்கேற்றும்கூட, சில கோடிகளை மட்டுமே தாண்ட முடிகிறது. ஆனால், அஜித் புரமோஷனுக்கு சென்றால், அந்த கலெக்‌ஷனே வேற மாதிரி வந்துவிடும். விரைவில் ரசிகர்களையும் சந்திக்கக்கூட வாய்ப்புள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

பேஷன் - ரிஸ்க்

அதேபோல, AramNaadu என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "Discipline life மட்டுமே இன்றுவரை அஜித்தை உயர்த்தியிருக்கிறது. இவ்வளவு பெரிய உச்சத்தில் இருக்கும் நடிகர், பைக் ரேஸ், கார் ரேஸ் என்று தன்னடைய பேஷனை நோக்கி செல்கிறார்..

"அஜித் இன்று விபத்தில் சிக்கினார், அஜித் மீண்டும் விபத்தில் சிக்கினார்" என்ற எத்தனை செய்திகள் வந்தாலும், தைரியமாக அனைத்தையும் எதிர்நோக்கி சென்று கொண்டிருக்கிறார் அஜித்.. தன்னுடைய பேஷனுக்காக ரிஸ்க் எடுக்கக்கூடிய நபராக அஜித் உள்ளார்..

ஒரு நடிகர் சினிமாவில் உச்சம் பெற்றதால் அரசியலுக்கு வருவதாக சொல்கிறார். அதாவது, அந்த நடிகரின் குறிக்கோள் முதலமைச்சர் நாற்காலி. ஆனால், இலக்கை நோக்கி வருபவர் அஜித்.. கோப்பையை வெல்வதே தன்னுடைய இலக்காக வைத்துள்ளார். அந்த கோப்பையின் விலை வெறும் 100 ரூபாய் தான் என்றாலும், தன்னுடைய பேஷனை அதிகமாக நேசிக்கிறார்.

மனைவி - குழந்தைகள் - குடும்பம்

சமீபத்தில்தான், 25ம் ஆண்டு திருமண நாளை ஷாலினியுடன் கேக் வெட்டி கொண்டாடினார். இந்த 25 வருட வாழ்க்கையில், தனது எல்லா வேதனைகள், இழப்புகள், கஷ்ட, நஷ்டத்தில் பங்கேற்ற மனைவி ஷாலினுக்கு நன்றி என்று கூறியிருந்தார். இப்படி எத்தனை நடிகர்கள் தங்களின் மனைவிக்கு நன்றி சொல்லி கொண்டிருக்கிறார்கள்? மனைவி, குடும்பம் என்ற விஷயத்திலும் அஜித் சிறந்து விளங்குகிறார்.

நண்பர் மேனேஜர்

மேனேஜர் சுரேஷ் சந்திராவை நேற்று தன்னுடன் அழைத்து சென்றுள்ளார் அஜித்.. சுரேஷ் சந்திராவை மேனேஜராக மட்டுமே அஜித் பார்க்கவில்லை.. ஆரம்பத்தில் அஜித் கஷ்டப்பட்டபோது, அவரை தன்னுடன் அழைத்து சென்று பல கம்பெனிகளுக்கு அறிமுகப்படுத்தியவர் சுரேஷ் சந்திராதான்.. அந்தவகையில் மேனேஜர் என்பதையும் தாண்டி சிறந்த நண்பராகவும் பாவித்து, நட்புக்கு முக்கியத்துவம் தந்து வருகிறார்.

நேற்று ஏர்போர்ட்டில் போய் இறங்கியதுமே, தலைநகரில் தல என்று ஹேஷ்டேக் போடுகிறார்கள். தன்னுடைய ரசிகர் மன்றத்தை கலைத்தும், தன்னை கொண்டாட வேண்டாம் என்று சொல்லியும்கூட, ரசிகர்கள் அஜித்தை கொண்டாடி கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏதோ ஒன்று அஜித்திடம் பிடித்திருக்கிறது.. Pride Ajith Kumar, TN Ajith Kumar எனறெல்லாம் ஹேஷ்டேக் போடுகிறார்கள்.

அப்பாவின் நினைவு

அதேபோல, ஒரு மகன் பெரிய வெற்றியடைந்தால், தாய், தந்தையருக்கே முதல் மகிழ்ச்சி கிடைக்கும். ஆனால், அஜித்தின் அப்பா சமீபத்தில் இறந்துவிட்டார். தற்போது, இந்தியாவின் உயரிய விருதான பத்மபூஷன் விருதை வாங்கும்போது, தன்னுடைய அப்பா இல்லையே என்று மகனாக வருத்தப்படுகிறார் அஜித்..

மனைவி, மகள், தாய், பேஷன், நட்பு, சினிமா துறை என ஒவ்வொன்றிற்கும் தனித்தனி முக்கியத்துவத்தை தந்து வருபவர் அஜித்.. ஆனால், அப்பா இன்று இல்லையே என்று வருத்தப்படுகிறார். இதைத்தான் தன்னுடைய அறிக்கையிலும் அஜித் பதிவு செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+