Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ajith: "என் உயிரே போனாலும் பரவாயில்லை!" 'தமிழன்' பட்டத்திற்காக தியாகம்! விஜய்க்கு ஆதரவு; விமர்சித்த அஜித்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தனிப்பட்ட விருப்பங்களால் ரசிகர்கள் மத்தியில் பெரிய இடத்தை வைத்திருப்பவருமான நடிகர் அஜித் குமார், சமீபத்தில் ஒரு ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டி, திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவில் நடிப்பதைத் தாண்டி, கார் ரேஸ், துப்பாக்கிச்சூடு, நீண்ட தூர பைக் பயணம் போன்ற பொழுதுபோக்குகளை மட்டுமே விரும்பும் அஜித், இந்த பேட்டியில் தனதுக் கலை, அரசியல் நிலைப்பாடு, பூர்வீகம் மற்றும் விஜய் மீதான நல்லெண்ணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

Ajith Kumar Vijay

விஜய்க்கு என்றும் நன்மையே

சமீபத்தில் ஒரு சம்பவத்தின் போது, அஜித் பேசிய கருத்துகள் திரித்து சொல்லப்பட்டதால், அவர் விஜய்க்கு எதிராக பேசியதாக ஒரு தோற்றம் ஏற்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சாணக்யா என்கிற ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அஜித் விளக்கமளித்துள்ளார்.

"நான் எப்போதும் விஜய்க்கு நன்மையே நினைக்கிறேன். வாழ்த்தி இருக்கிறேன். நான் பேசியதை அவருக்கு எதிராக திரிப்பவர்கள் அமைதியாக இருக்கவும்" என்று ஆணித்தரமாகக் கூறியுள்ளார். இதற்கு முன்னரும், விஜய் குறித்து அஜித் எப்போதும் மரியாதையுடனே பேசி வந்துள்ளார். தொழில் ரீதியானப் போட்டி இருந்தாலும், தனிப்பட்ட வாழ்வில் இருவரும் ஒருவருக்கொருவர் நன்மையே விரும்பும் நட்புறவை பேணுவதாகக் கூறப்படுகிறது.

நச்சு கலந்த சமூகம்

பொது நிகழ்வுகள் மற்றும் சினிமா விழாக்களில் கலந்துகொள்வதை தவிர்த்து வரும் அஜித், ஊடகங்கள் தன் எண்ணங்களை பிரதிபலிப்பதில் உள்ள சிக்கல் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். "என்னுடைய நல்ல எண்ணங்களை சில ஊடகங்கள் மக்களிடம் சரியாக கொண்டு சேர்க்கவில்லை. நாம் நச்சு கலந்த ஒரு சமூகத்தில் இருக்கிறோம்" என்று அஜித் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தீர்க்கதரிசனமான பேச்சு

மேலும், "எழுதி வைத்து கொள்ளுங்கள். என்னுடைய இந்த ஆங்கில ஊடகத்திற்கான பேட்டி 10, 20 வருடங்கள் கழித்து மிகப்பெரும் பேசுப் பொருளாக மாறும்" என்றும் தனது கருத்துகளின் ஆழத்தை பதிவு செய்துள்ளார். அஜித், அரசியல் மற்றும் சமூகப் போராட்டங்கள் குறித்தும் தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார். "சில சமூகங்கள் சுரண்டப்பட்டு துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறது. அதேபோல, மக்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்க அரசியல் கட்சிகளும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களும் இருக்கிறார்கள்."

போலிகள் பற்றிய எச்சரிக்கை

"ஒருபக்கம், உள்நோக்கத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுப்பது போல சில போலி சமூக ஆர்வலர்களும் இங்கே இருக்கிறார்கள். அது போன்ற போலிகள் செய்யும் மூளைச்சலவையிலிருந்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்" என்று மக்களை எச்சரித்துள்ளார்.

தமிழன் என்ற பட்டத்திற்காக தியாகம்

அஜித்தின் இந்த பேட்டியின் மிக உணர்ச்சிப்பூர்வமான பகுதி, தனது பூர்வீகம் மற்றும் அடையாளம் குறித்து அவர் பேசியதுதான். "உங்கள் குடும்பத்தை முதலில் பாருங்கள். பார்ப்பதற்குத் தகுதியானது என நினைத்தால் என் திரைப்படங்களை பாருங்கள் என்று என் ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் நான் பல ஆண்டுகளாக சொல்லி வருகிறேன். என் படத்தை பாருங்கள் என்று எப்பொழுதும் நான் வற்புறுத்த மாட்டேன். அதேபோல், அரசியலுக்கு வந்து நான் ஓட்டு கேட்டும் வரமாட்டேன். எனக்கு அதில் ஆர்வம் இல்லை*" என்று தன் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

"என்னை பிடிக்காதவர்கள் எப்போதும் நான் ஒரு வேற்று மொழிக்காரன் என தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். என் பூர்வீகம் பற்றி பேசுகிறார்கள். ஒரு நாள் வரும். அதே நபர்கள் ஒருமித்தக் குரலில் என்னை தமிழன் என அழைப்பார்கள்" என்று ஆவேசத்துடன் பேசியுள்ளார். "இந்தக் கார் ரேஸில் சாதித்து, இந்த நாட்டிற்கும், இந்த மாநிலத்திற்கும் பெருமை சேர்ப்பேன் என நம்புகிறேன். அதற்காக என் உடலையும், என் முழு ஆன்மாவையும் அர்ப்பணிக்கிறேன். என் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் இந்த பணியில் என் உயிரே போனாலும் பரவாயில்லை" என்று முடித்துள்ளார்.

அஜித்தின் இந்த பேட்டி, தன்னை வெறுப்பவர்களுக்கும், காழ்புணர்ச்சி கொண்டவர்களுக்கும் அழுத்தமான பதிலடி கொடுத்துள்ளதுடன், தனது கலையில் மட்டுமல்ல, தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவர் கொண்டுள்ள தீவிரம் மற்றும் தியாக மனப்பான்மையை காட்டுகிறது என்று பலர் பாராட்டி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+