ரெட்ட தல ஒரே இடத்தில்.. அஜித் குமார் கிட்ட அதை கவனிச்சீங்களா? நயன்தாராவுக்கு இது தேவையா: பிரபலம் நச்
சென்னை: அஜித் தன்னுடைய குடும்பத்துடன், சேப்பாக்கத்தில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டியை கண்டுகளித்தார்.. அவருடன் நடிகர் சிவகார்த்திகேயனும் போட்டியை கண்டு ரசித்தார்.. அஜித்தை சேப்பாக்கத்தில் பார்த்ததும் ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். இந்நிலையில், அஜித்தின் இந்த திடீர் வருகை குறித்து, பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் கிரிக்கெட் போட்டியை காண சேப்பாக் மைதானத்துக்கு வந்திருந்தார்.. பழைய தலைமுறை டொயோட்டா இன்னோவா காரில் வந்திறங்கினார் அஜித். நடிகை ஷாலினி இயல்பிலேயே சிஎஸ்கே ஃபேன் ஆவார்.. கடந்த முறை சிஎஸ்கே விளையாடும்போதும் கிரவுண்டுக்கு வந்திருந்தார் ஷாலினி.. இப்போது, அஜித் குமாருடன், மகன் ஆத்விக், மகள் - அனுஷ்காவுடன் வந்தார்..

தல தோனி - தல அஜித்
சேப்பாக் மைதானத்தில் "தல தோனி, தல அஜித்" என்று ரசிகர்கள் மாறி மாறி ஆரவாரம் செய்தனர்.. இதற்கு நடுவில் சிவகார்த்திகேயனும் அஜித் பக்கத்தில் உட்கார்ந்து விளையாட்டை கண்டு களித்தது, ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தியிருந்தது.. இது தொடர்பாக வீடியோக்கள், போட்டோக்களும் இணையத்தில் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு BBT Cinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், "அஜித்தும் ஒரு சாதாரண மனிதர்தான்.. அஜித் ஒரு நடிகர், 150 கோடி சம்பளம் வாங்குகிறார்.. அவ்வளவுதான்.. கிரிக்கெட் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காக குடும்பத்துடன் வந்து சென்றிருக்கிறார்.
சினிமா + பேஷன்
இயல்பாகவே கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டவர்.. பைக், கார் ரேஸ்களில் ஆர்வம் கொண்டவர். ஒரு நடிகராக தனக்கான உயரத்தை பல வருடங்களுக்கு முன்பே அடைந்துவிட்டார்.. இப்போது தனக்கு பிடித்தபடி வாழ ஆரம்பித்துள்ளார். ஒருபக்கம் சினிமா, மறுபக்கம் பேஷன் என கவனம் செலுத்தி வருகிறார்.
இவ்வளவு பெரிய சம்பளம் வாங்க கூடிய நடிகர், இன்னொரு படத்திலும் சம்பளத்துக்காக நடித்துவிட்டு போகலாம். ஆனால் கார் ரேஸ் செல்வதற்கு காரணம் அவருடைய பேஷன்தான்.. குடும்பத்துடன் நேரம் செலவிடவும் அஜித் நினைக்கிறார்.. அந்தவகையில்தான், குடும்பத்துடன் கிரிக்கெட் பார்க்க சேப்பாக்கம் வந்திருக்கிறார்.
மனம் மாறிய அஜித்குமார்
அதுமட்டுமல்ல, இத்தனை காலமும் கூட்டத்திலிருந்து ஒதுங்கியிருந்த அஜீத் சமீபகாலமாகவே பொதுமக்களிடம் நெருங்க துவங்கியிருக்கிறார்.. குறிப்பாக குட் பேட் அக்லி படத்தின் வெற்றிக்குப் பிறகு அவரது மனம் மாற துவங்கியிருக்கிறது. சமீபத்தில் கார் ரேஸில் அஜித் ஜெயித்தபோதுகூட, மைதானத்தில் கூடியிருந்த மக்கள், "தல தல தல" என்று ஆர்ப்பரித்தார்கள். அப்போதுதான் ரசிகர்களின் அன்பை நேரடியாக பார்த்து அசந்துபோய்விட்டார் அஜித்.. அதற்கு பிறகுதான் அவரிடம் இப்படியொரு மாற்றம் தென்பட்டுள்ளது.
அதேபோல, அஜித்துக்கென்று ஒரு பாலிசி உள்ளது.. தன்னுடைய படத்துக்கு அக்ரிமென்ட் போடும்போது, தன்னுடைய பட புரமோஷன், ஆடியோ லான்ச், என எதிலும் கலந்து கொள்ள முடியாது என்று கிளியராக சொல்லிவிடுவார்.
தன்னுடைய தொழில் நடிப்பது மட்டுமே என்பதில் உறுதியாக இருக்கும் அஜித், முன்கூட்டியே கண்டிஷனை சொல்லி, அதற்கு தயாரிப்பாளர்களிடம் ஒப்புதல் பெற்றுவிடுவார். எனவே, அதை நாம் குறை சொல்ல முடியாது.
அஜித்திடம் இது சரியில்லை
ஆனால், அஜித் செய்வது சரியா? தவறா? என்று கேட்டால், ஒரு தயாரிப்பாளராக அதை தவறு என்றுதான் நான் சொல்வேன். காரணம், படத்தின் ஹீரோவே வராவிட்டால் படம் எப்படி ஓடும்? ஹீரோ உட்பட அனைவரும் சேர்ந்துதான் ஒரு படத்துக்கு சப்போர்ட் செய்ய வேண்டும்.. கடந்த வாரம் சூர்யாவின் ரெட்ரோ பட விழாவுக்கு 10 ஆயிரம் பேர் வந்திருந்து சிறப்பித்திருந்தார்கள். அப்படித்தான் இருக்கணும்.
அஜித்தின் இதே பாணியைதான் நயன்தாராவும் கடைப்பிடிக்கிறார். ஆனால், நயன்தாராவுக்கும், அஜித்துக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. அஜித் தன்னுடைய எந்த படமாக இருந்தாலும் புரமோஷன்களுக்கு வரவே மாட்டார். ஆனால் நயன்தாரா, தன்னுடைய சொந்த படமாக இருந்தால் மட்டுமே, அந்த புரமோஷன்களுக்கு விக்னேஷ் சிவனுடன் வந்துவிடுவார். இது தவறானது" என்று தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications