தாமரையை ஏற்றிவிடும் அக்ஷரா...அறிவுரை கூறும் ரசிகர்கள்
சென்னை: அக்ஷரா ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் பின்னாலிருந்து ஏற்றிவிடும் செயலை செய்து வருகிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
தனக்கு பிடிக்காதவர்களை பற்றி புறம் பேசுவதில் அக்ஷராவிற்க்கு ஆனந்தம் அதிகம் என்று ஒரு சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தாமரையிடம் அக்ஷரா பல்பு வாங்கியதை பார்த்து ரசிகர்கள் கலாய்த்து தள்ளி வருகின்றனர்.

வழக்கமானதாக தான் இருக்கிறது
பிக் பாஸ் சீசன் களில் வழக்கமாக ஒவ்வொரு சீசனிலும் நடக்கும் செயல்கள் தான் தற்போதைய சீசனிலும் நடந்து கொண்டு வருகிறது. இதில் எந்த ஒரு மாற்றமும் இல்லாவிட்டாலும், ஆரம்பத்தில் இந்த சீசன் வேற மாதிரி இருக்கப்போகிறது என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். வழக்கத்திறகு மாறாக இந்த சீசனின் அதிகமான பெண் போட்டியாளர்கள் அறிமுகமாகி இருந்தது ஒரு காரணமாக இருந்தாலும், போட்டியாளர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்து வந்தனர். இவர்களைப் பார்த்ததும் இந்த சீசன் செமையாக களைகட்டும் என்று நினைத்தவர்களுக்கு ஒரு சில வாரங்களில் போட்டியாளர்களின் சுயரூபம் தெரிய ஆரம்பித்துவிட்டது.

பல செயல்கள் வைரலாகி இருக்கிறது
என்னதான் பலர் இதற்கு முந்தைய சீசன் களை பார்த்து நன்றாக பிரிப்பர் ஆகி இந்த சீசனுக்கு வந்திருந்தாலும் ஒரு சில இடங்களில் தங்களுடைய உண்மையான முகத்தை காட்டி வாழ்கின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு மாடல் அழகியாக அறிமுகமாகியிருக்கும் அக்ஷராவும் ஆரம்பத்திலிருந்து இப்ப வரைக்கும் பல இடங்களில் தன்னுடைய ரசிகர்களை கவர்வதற்காக இவர் செய்யும் செயல்கள் பல வைரலாகி வருகிறது. இவர் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று உள்ளார். அதே நிலையில் இவருக்கும் நெகட்டிவ் கமெண்ட்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது.

பற்ற வைக்கிறாரா அக்ஷரா
ஆரம்பத்தில் சத்தமாகப் பேசுவது எனக்கு பிடிக்காது என்று கூறிவந்த அக்ஷரா தற்போது ஒரு சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு இவர் பேசியதை பார்த்ததும் ரசிகர்கள் கலாய்த்து வந்தனர். இந்த நிலையில் தற்போது தன்னால் பிரியங்காவிற்கு முன்னாடி பேச முடியாததால் அவர் பிரியங்காவை தைரியமாக எதிர்க்கும் தாமரையிடம் பிரியங்காவை பற்றி சில நேரங்களில் பற்றவைத்து வருகிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஒரு சில நேரங்களில் தாமரையும், அக்ஷரா உசுப்பேற்றியதும் காண்டாகி விடுகிறார் என்றும் பலர் கவனித்து வருகிறார்கள்.

சூழ்ச்சி எடுபடவில்லையோ
ஆனால் ஒரு சில நேரங்களில் யார் சொன்னாலும் தாமரை அதை பற்றி கண்டு கொள்ளாமல் தன்னுடைய கருத்தில் கவனமாக இருந்து வருகிறார். அது நேற்று இரவு கூட நடந்திருக்கிறது. அதில் ஏற்கனவே தாமரை மற்றும் பிரியங்கா இருவரும் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தாமரை பிரியங்காவை கண்ட மேனிக்கு திட்டி தன்னுடைய மனதில் இருப்பதை எல்லாம் கொட்டி விட்டார். ஆனாலும் அடுத்த நிமிடம் அனைவரும் சாப்பிடும்போது தாமரைக்கு பிரியங்கா அழுத்தமாக முத்தம் கொடுத்து சென்றிருந்தார். இதை பார்த்ததும் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அக்ஷராவும் முகம் சுளித்து இருந்தார். அதைப்பற்றி நேற்றைய எபிசோட்டில் தாமரை இடம் அக்ஷரா பற்ற வைத்திருக்கிறார். ஆனால் அதற்கு ஒரே வார்த்தையில் தாமரை நான் செய்த சமையல் நன்றாக இருந்தது என்று தான் அப்படி பண்ணினார். என்று பிரியங்காவிற்கு சப்போர்ட்டாக பேசிவிட்டார். இதனால் அக்ஷரா அப்படியே அமைதியாக மாறிவிட்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications