வெளியே சென்ற அக்ஷரா, தாமரைக்காக அனுப்பிய அன்பு பரிசு... வேற லெவல் தான்!!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய அக்ஷரா தாமரைக்கு சில பரிசுகளை வழங்கியுள்ளார்.
அக்ஷராவின் அன்பைப் பார்த்து தாமரைக் கண் கலங்கி போய் உள்ளார்.
வெளியே வந்தாலும் பாசம் விட்டு போகவில்லையே என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

ரியாலிட்டி ஷோவில் ஏற்படும் நட்பு
பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு ரியாலிட்டி ஷோ வாக இருந்தாலும் இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் பலர் நண்பர்களாக மாறி விடுகிறார்கள். ஒரு சிலர் பிக்பாஸ் வீட்டிற்குள் சண்டை போட்டுக்கொண்டு இருந்தாலும் வெளியே வந்தபிறகு நண்பர்களாகத்தான் நடந்து கொள்கிறார்கள். அது பல சீசன்களில் தொடர்ந்து கொண்டிருப்பது போல இந்த சீசனிலும் ஒரு உணர்ச்சிகரமான தருணம் நடைபெற்றுள்ளது.

ஆரம்பத்தில் புரிதல் இல்லை
இந்த ஐந்தாவது சீசனில் இதுவரைக்கும் இல்லாதவகையில் பெண் போட்டியாளர்கள் அதிகமாக அறிமுகமாகி இருந்தனர். அதனால் ஆரம்பத்திலேயே பெண் போட்டியாளர்களுக்குள் பிரச்சினைகள் ஏற்படும் என்று ரசிகர்கள் கூறிவந்தனர். ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு படி ஒரு சில நேரங்களில் நடந்தாலும் அடுத்த நிமிடமே போட்டியாளர்கள் ஒன்று சேர்ந்து விடுகிறார்கள். அதுவும் ஆரம்பத்தில் தாமரைச் செல்வியின் நடவடிக்கை பிடிக்கவில்லை என்று அக்ஷரா, தாமரை முகத்துக்கு நேராகவே கூறியிருந்தார். ஆனால் நாட்கள் செல்லச்செல்ல இவர்களுக்குள் ஏற்பட்ட புரிதல் பலருக்கும் வியப்பை கொடுத்திருந்தது.

கருத்து வேறுபாடு
தாமரை கிராமத்து பின்னணியில் இருந்து வந்ததால் எந்த விஷயமும் புரியவில்லை என்று பல நேரங்களில் கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் அக்ஷரா உயர்தர குடும்பத்தை சேர்ந்தவராக இருப்பதால் தாமரையின் நடவடிக்கையை எனக்கு புரியவில்லை என்று அவர் ஒரு பக்கமாக கூறியுள்ளார். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விலகியே இருந்தனர். சின்ன பொண்ணு இருந்தவரைக்கும் அக்ஷரா அவரிடம் தான் அதிகமாக நெருக்கமாக இருந்தார். ஆனால் அவருடைய வெளியேற்றத்திற்கு பிறகு தாமரையின் பக்கம் அக்ஷராவின் பாசம் பாயத் தொடங்கியது.
Recommended Video

அன்பு பரிசால் மிரண்டுபோன தாமரை
நெருங்கிய தோழிகளாக தங்களுக்குள் கருத்து ஒன்று சேர்ந்து விட்டது என்று பல இடங்களில் அக்ஷரா மற்றும் தாமரை நிரூபித்து கொண்டிருந்தனர். இந்த நேரத்தில்தான் அக்ஷராவின் வெளியேற்றம் தாமரைக்கு அதிக வருத்தத்தை கொடுத்திருந்தது. அக்ஷராவின் வெளியேற்றத்தின் போது தாமரை கதறி அழுததை பார்க்க முடிந்தது. வெளியே சென்ற பிறகு அக்ஷரா, தாமரைக்கு தேவையான உடைகள், காலணிகளையும் வாங்கி கொடுத்திருக்கிறார். அதை பார்த்து தாமரை கண் கலங்கி போய் உள்ளார். நேற்றைய எபிசோடில் தாமரைச்செல்வி ,அக்ஷரா கொடுத்த உடைகளை உடுத்தி உள்ளார். உடை மட்டும் இல்லாமல் அதற்கு மேட்சாக காலணிகளையும் வாங்கிக் குவித்து அனுப்பியுள்ளார். இதை பார்த்ததும் ரசிகர்கள் வெளியே சென்றாலும் நட்பு மாறவில்லையே என்று கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications