Barathi Kannamma Serial: ஒண்ணுமில்லாததை ஊதி ராட்சச பலூன் ஆக்கிட்டாய்ங்களே...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் கதை இருக்கே.. கதைக்கு என்றாலும் சகிச்சுக்க முடியலைங்க.

கண்ணம்மா தாயாக முடியாதுன்னு கத்துக்குட்டி டாக்டர் பொய்யான ஒரு ரிப்போர்ட் கொடுக்க அது, அவளது மாமியார் வீட்டை விட்டு துரத்தும் வரை கொண்டு போய் விடுவது சிறு பிள்ளைத் தனமா இருக்குது.

சீரியல் பார்க்கறவங்க சிறு பிள்ளைங்கன்னு நினைச்சு கதையை எழுதறாங்களா ஒண்ணும் புரியலை.

பாரதி வெண்பா

பாரதி வெண்பா

வெண்பாவும் பாரதியும் டாக்டருக்கு படிக்கும்போதே ஃப்ரண்ட்ஸ். வெண்பா பாரதியை காதலிக்கறா.. பாரதி வேறு ஒரு பெண்ணை காதலிக்கிறான். வெண்பாவுக்கு இது பிடிக்காமல் விபத்துக்கு ஏற்பாடு செய்கிறாள். அந்த விபத்தில் எதிர்பாராத விதமாக பாரதியும் மாட்டிக் கொள்கிறான்.

குழந்தை பாரதி

குழந்தை பாரதி

பாரதி விபத்தில் எந்த சேதாரமும் இல்லாமல் தப்பித்துக் கொண்டாலும் பாரதியை தான் தக்க வச்சுக்கணும் என்று பாரதிக்கு விபத்தில் குழந்தை பிறக்கும் பாக்கியம் போய்விட்டது என்று பொய்யான சர்ட்டிஃபிகேட் கொடுத்து விடுகிறாள்.

தோழியை நம்பி

தோழியை நம்பி

பாரதியும் தோழியை நம்பி வேறு ஒரு டாக்டரிடம் கன்சல்ட் செய்யாமல் இருந்து விடுகிறான். கருப்பு கண்ணம்மாவை பின்னர் காதலிச்சு கல்யாணமும் செய்துக்கறான். இப்போதும் பழி வாங்க துடிக்கும் வெண்பா, பாரதிக்கு தெரியாமல் கண்ணம்மாவுக்கு ஏதோ மாத்திரை கொடுத்து சாப்பிட சொல்கிறாள். கர்ப்பத்தை தடுத்து நிறுத்த.

பொய் சான்றிதழ்

பொய் சான்றிதழ்

பின்னர் பாரதிக்கு தெரியாமல் கண்ணம்மாவை மருத்துவ பரிசோதனை செய்கிறேன் கண்ணம்மா வா.. உன் பாரதிக்கு தெரிய வேண்டாம்.. உன் பாரதிக்கு நீ அழகான குழந்தை சீக்கிரம் பெத்து தர வேண்டாமா என்று ஆசை காண்பித்து அழைத்து சென்று.. உனக்கு குழந்தை பெற்று தரும் வாய்ப்புக்கள் கம்மி என்று சான்றிதழ் தருகிறாள்.

பொய்தான் மொத்தத்தில்

பொய்தான் மொத்தத்தில்

மொத்தத்தில் பாரதிக்கு குழந்தை பிறக்காது என்று வெண்பா சொன்னதும் பொய்.. கண்ணம்மாவுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்புக்கள் கம்மி என்று சான்றிதழ் கொடுத்ததும் பொய். எல்லாத்துக்கும் கரணம் வெண்பா பாரதியின் மீது வைத்துள்ள ஆசைதான் கரணம். கல்யாணம் ஆன ஒருவன் மீது டாக்டருக்கு படிச்ச ஓரு பெண் இப்படியா கண்மூடித்தனமாக ஆசை வைத்து இருப்பாள்?

பிறந்த ந்த வீட்டுக்கு

பிறந்த ந்த வீட்டுக்கு

இந்த பொய் சான்றிதழ் கண்ணம்மாவை, அவளது மாமியார் பிறந்த வீட்டுக்கு அனுப்பும் அளவுக்கு கொண்டு போய் விட்டு விடுகிறது.மாமியாருக்கு ஏற்கனவே கருப்பு ஆகாது. கண்ணம்மா வயிற்றில் குழந்தை பிறந்தால் கூட எடுத்து கொஞ்ச மாட்டேன் என்று கூறி வந்தவர்கள், இந்த மருத்துவ சான்றிதழ் கையில் கிடைத்ததும், குழந்தை பெத்துக் குடுக்க தகுதி இல்லாத பெண் இந்த வீட்டு மருமகளா என்று வீட்டை விட்டு துரத்தி விட்டுடறாங்க.

என்னத்தை சொல்றது? கதை கதையா இல்லை... சிறு பிள்ளைத் தனமா இல்ல இருக்குது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+