ஆட்டம் ஆரம்பம்.. ரேவந்த் ரெட்டி Vs அல்லு அர்ஜுன்.. திணறும் புஷ்பா 2.. பெரிய நடிகர் CMஐ சந்திக்கிறாரா

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சிரஞ்சீவி தலைமையில் ஒரு குழு அமைத்து, முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்து, சமரச பேச்சுவார்த்தை நடத்தலாமா? என்று முடிவு செய்திருக்கிறார்களாம். இதுகுறித்து கூடுதல் விவரங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு.

cheyyaru balu யூடியூப் சேனலில் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு வீடியோ வெளியிட்டு பேசியிருக்கிறார்.. அதில், "அல்லு அர்ஜூன் - ரேவந்த் ரெட்டி விவகாரம் பெரிதாகி கொண்டிருக்கிறது. ஒருபக்கம் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாகவும், மறுபக்கம் ரேவந்த் ரெட்டிக்கு பெரும் ஆதரவான விஷயமாகவும் மாறிட்டு இருக்கு.

television pushpa 2 allu arjun

"சாமான்யனுக்கு இங்கே ஒரே சட்டம்தான்.. ஒரு உயிரே இங்கு போயிருக்கிறது.. குழந்தை மூளைச்சாவு அடைந்துள்ளது.. நீங்க அசால்ட்டா கடந்து போவீங்க, நாங்க இதை வேடிக்கை பார்க்கணுமா? யார் என்ன அழுத்தம் தந்தாலும் சட்டம் தன்னுடைய கடமையை செய்யும்" என்று உறுதியாக சொல்கிறார் ரேவந்த் ரெட்டி

இழப்பீடு: இதனிடையே, புஷ்பா படக்குழுவினர் அனைவருமே பணத்தை போட்டு, 1 கோடி ரூபாய் அந்த பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தந்துள்ளார்கள்.. அல்லு அர்ஜூன் ஏற்கனவே 25 லட்சம் ரூபாய் இழப்பீடு தந்துள்ளார்.. மைத்ரி மூவி மேக்கர்ஸ் 50 லட்சம், படத்தின் டைரக்டர் 50 லட்சம் தந்துள்ளார். ஆனால், ரேவந்த் ரெட்டி மட்டும் இந்த விவகாரத்தில் இதில் தலையிடவில்லையானால், வெறும் 25 லட்சத்துடன் இழப்பீடு முடிந்து போயிருக்கும் என்று சோஷியல் மீடியாவில் பலரும் பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.

இது அல்லு அர்ஜூனுக்கு மட்டுமல்ல, எப்பேர்ப்பட்ட ஹீரோக்களும் இது பாடமாக இருக்கும். நீங்கள் எல்லாம் கடவுள் கிடையாது என்ற விஷயத்தைதான் ரேவந்த் ரெட்டி மிகச்சரியாக வைத்து வருகிறார்.

மோசமான வில்லன்: புஷ்பா 2 படத்தில் முதல்வரை அல்லு அர்ஜூன் சந்திக்க செல்வது போல காட்சி ஒன்று இடம்பெறும். ஆடுகளம் நரேன்தான், இதில் முதல்வராக நடித்திருப்பார்.

மிக மோசமான வில்லனாக முதல்வரை சித்தரித்திருப்பார்கள். இந்த காட்சியை பார்த்துதான் ரேவந்த் ரெட்டி கோபமாயிட்டாரு. அவரது கடுப்புக்கு இதுதான் காரணம் என்று அல்லு அர்ஜூனின் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் பதிவிடவும், உடனே அல்லு அர்ஜூன் ஓடிச்சென்று இதனை தடுத்துள்ளார்.. "என்மீது அக்கறையுள்ளவர்கள், தேவையில்லாத கருத்துக்களை பதிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏனென்றால் 15 நாள் இடைக்கால ஜாமீன் தரப்பட்டுள்ளது, அந்த ஜாமீன் இன்னும் ரத்து செய்யப்படவில்லை.. கோர்ட் ஆர்டரும் நிலுவையில் உள்ளது. அப்படியிருக்கும்போது, எப்படி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி தரலாம் என்று இன்னொரு சர்ச்சை கிளம்பியிருக்கிறது. அதனால்தான், ரசிகர்களை இப்படி பதிவிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

பவுன்சர் கைது: நேற்றுகூட 2 மணி நேரம் அல்லு அர்ஜுனிடம் விசாரணை நடந்துள்ளது. மொத்தம் 20 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.. அல்லு அர்ஜூனின் பவுன்சர் ஒருவரையும் கைது செய்துள்ளனர். காரணம், தியேட்டரில் அன்று நடந்த தள்ளுமுள்ளுவுக்கு காரணமாக இருந்தவர்தான் பவுன்சர்கள்.. அந்த பவுன்சரின் லீடரைதான் இப்போது கைது செய்துள்ளனர்.

தெலுங்கு சினிமாவுக்கு பெரிய உறுதுணையாக இருந்தது தெலுங்கானா அரசு.. ஆனால், இப்போது சினிமா துறைக்கு மானியம் கிடையாது, டிக்கெட் விலை குறைக்க முடியாது, எந்த கோரிக்கையும் செய்துதரமுடியாது. தேசிய விருதுக்கு சமமாக ஆந்திராவில் கருதப்படும் நந்தி அவார்டை ரத்து செய்யலாமா? என்ற அளவுக்குகூட ரேவந்த் ரெட்டி நினைக்கிறாராம். அந்த அளவுக்கு இந்த விவகாரத்தில் கோபமாக இருக்கிறாராம். அதனால்தான், சிரஞ்சீவி தலைமையில் ஒரு குழு அமைத்து, முதல்வரை சந்தித்து, சமரச பேச்சுவார்த்தை நடத்தலாமா? என்று முடிவு செய்திருக்கிறார்களாம். .

முதல்வர் சபதம்: அல்லு அர்ஜூன் - ரேவந்த் ரெட்டி விவகாரம் எந்த அளவுக்கு செல்லும் என்றால், இதில் தண்டனை வாங்கி தராமல் தூங்க மாட்டேன். என்று தெலுங்கானா முதல்வர் சபதம் செய்திருப்பதாக தகவல் வருகிறது" என்றெல்லாம் செய்யாறு பாலு அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+