ஆலியா மானசா கூட பிரேக்கப் ஆகிடுச்சு.. சீரியலில் நடிக்க கூடாதுன்னு சொல்லிட்டாங்க! நடிகர் சஞ்சீவ் ஓபன்
சென்னை: சின்னத்திரை தம்பதிகளாக இருக்கும் நடிகை ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இருவருக்கும் இடையே காதலிக்கும் போது ஏற்பட்ட பிரச்சனை மற்றும் பிரேக்கப் குறித்து சஞ்சீவ் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
சீரியலில் நடிக்கும் போதும், சினிமாவில் நடிக்கும் போதும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் ஒரு சிலர்தான் பல வருடங்களாக தங்களுடைய திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக பயணிக்கிறார்கள். அந்த வகையில் ரசிகர்கள் பலருக்கும் பரிச்சயமான தம்பதிகளாக ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் தம்பதி இருக்கின்றனர். இவர்கள் இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து ரியல் ஜோடியாக மாறிவிட்டனர்.

ஆல்யா மானசா ராஜா ராணி சீரியலுக்கு முன்பு விஜய் டிவியில் டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அப்போதே அவருக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகி விட்டனர். அதற்குப் பிறகு ராஜா ராணி சீரியலில் செம்பா கேரக்டரில் இளைஞர்களின் மனதில் கனவு கன்னியாக வலம் வந்தார். அதுபோல சஞ்சீவ் ஏற்கனவே சில திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருந்தார்.
அவருக்கு ராஜா ராணி சீரியல் பெரிய திருப்பத்தை கொடுத்தது. அந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது இவர்கள் இருவரும் காதலித்து பிறகு திருமணம் செய்து கொண்ட விஷயம் எல்லோருக்கும் தெரியும். இந்த தம்பதிக்கு இப்போது ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றனர்.
சஞ்சீவ் சன் டிவியில் கயல் சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்க, ஆலியா மானசா நடித்த இனியா சீரியல் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது தங்களுடைய வாழ்க்கையில் நடந்த பிரச்சனைகள் குறித்து பேசி இருக்கிறார்கள்.
அதில் எங்கள் இருவருக்கும் ராஜா ராணி சீரியலில் நடிக்கும் போது ஒரு பிரச்சனை வந்தது அதனால் பிரேக்கப் ஆயிடுச்சு. அந்த நேரத்தில் சஞ்சீவ் நடித்தால் நான் அந்த சீரியலில் நடிக்க மாட்டேன் என்று ஆலியா சொல்லிட்டாங்க. அதுபோல சூட்டிங் ஸ்பாட்டில் ஆலியா அழுதுட்டே இருந்தாங்க. அவங்க ரொம்ப அழுததால அவங்களுக்கு வீசிங் பிரச்சனை வந்துடுச்சி.
அவங்க ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருந்தாங்க. அதனால் எனக்கு பதிலாக சீரியலில் வேற ஒரு நடிகரை நடிக்க வைப்பதற்காக ஆடிஷன் நடந்தது. என் கண்ணு முன்னாடியே என் கேரக்டரில் இன்னொருத்தங்க ஆடிஷனுக்கு வந்துட்டு போனதை நான் பார்த்தேன் எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது.

அதற்கு பிறகு ஆலியா மானசா என்னுடைய சூழ்நிலையை புரிந்து கொண்டு சரி இவரே நடிக்கட்டும் என்று சொல்லிட்டாங்க. அந்த நேரத்தில் ஆலியாவின் குடும்பத்தில் இருந்து சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து பிரச்சனை எல்லாம் செஞ்சாங்க. அதற்கு பிறகு சில நாட்கள் நாங்கள் இருவருமே பேசிக்கவே இல்லை. ஷூட் முடிந்ததும் தனித்தனியாக எங்களுடைய அறைக்கு போய்விடுவோம்.
அதற்கு பிறகு என்னுடைய நண்பரிடம் ஆலியா தான் தூது அனுப்பி என்னிடம் பேச வேண்டும் என்று சொன்னாங்க. அதற்கு பிறகு தான் பேசினோம். ஒரு வாரம் எங்களுக்குள் பிரேக்கப் ஆகிடுச்சு என்று தங்களுடைய காதல் கதையை அந்த பேட்டியில் சஞ்சீவ் பேசி இருக்கிறார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications