பொது இடத்துல போயா ஆலியா இப்படிப் பண்ணுவாங்க.. !
சென்னை: எப்பவுமே இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் சீரியலில் நடிக்கும் நடிகைகள் தங்களுடைய புகைப்படங்களை அப்லோட் பண்ணி வருவார்கள்.
அதேபோல சில நேரங்களில் சூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் வேடிக்கைகளும் அப்லோட் பண்ணுவார்கள். தற்போது ஆலியா மானசா வெளியிட்டிருக்கும் வீடியோஸ் வைரலாகி வருகிறது .
அந்த வீடியோவை பார்த்து நீங்கலா இந்த மாதிரி எல்லாம் தெருவில் இறங்கி சண்டை போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று வறுத்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

குத்துவிளக்கே சண்டை போட்டா
சீரியல்களில் குடும்ப குத்து விளக்காக இருக்கும் இவர் இந்த மாதிரி சண்டை போடுவதை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி போய் இருக்கிறார்கள் .அதுவும் எதற்காக இந்த சண்டை என்று தெரியாமல் கேள்வி கேட்டு வருகிறார்கள். ஒரு சீரியலில் பலர் நடிக்கும்போது அனைவரும் ஒற்றுமையாக இருப்பார்கள் என்று கூற முடியாது அப்படி ஏதாவது அமைந்தால் அது அதிசயம்தான். சில நேரங்களில் சில மனிதர்கள் கேரக்டர்கள் எல்லோருக்கும் பிடிக்காமல்தான் போய்விடுகின்றன.

சரியான சண்டைக்காரி
இதை மையப்படுத்திதான் பிக்பாஸ் நிகழ்ச்சி கூட நடைபெற்று வருகிறது. ராஜா-ராணி-சீரியல் இரண்டாவது பாகம் தற்போது தான் ஆரம்பிக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இது தெலுங்கு சீரியலின் தழுவலாக இருந்தாலும் ரசிகர்கள் ரசித்து வருகிறார்களாம். ஆனால் அந்த சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த ஒரு சண்டையை ஆலியா மானசா வெளியிட்டிருப்பது பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். ராஜா ராணி சீரியல் முதல் பகுதியில் குடும்ப குத்துவிளக்காக அமைதியில் சொரூபமாக இருக்கும் ஆலியா மானசா.

காரசார சண்டை
அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தை பிறந்த பிறகு தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருக்கிறார் . இவர் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார் .அவரது அழகான குடும்பம் மற்றும் ஒரு அண்ணன் அண்ணி என நடித்து வருகிறார். அவரது அண்ணனாக நடித்து வருபவரை சீரியலில் மொட்டை மணி என்று அடிக்கடி கலாய்த்து வருகிறார். இந்த சீரியலில் இவருடன் அண்ணன் கேரக்டரில் நடிக்கும் மொட்டை மணி உடன் தான் இவர் காரசாரமாக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார் .

மொட்டை மணி
அதுவும் அவர் யார் சொல்றது தான் நான் கேட்கிறது ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி சொல்லிக்கிட்டு இருங்க. எனக்கு ரெஸ்பெக்ட் கொடுக்க மாட்டீர்கள் என்று கோபத்தோடு பேசிக் கொண்டிருக்கிறார் . அதற்கு நான் உங்ககிட்ட சொன்னனா இல்லையா என்னிடம் இவரு சரியாக பேச மாட்டார் என்று அதற்கு மொட்டை மணி நீங்க சொன்ன விதம் சரியில்லை என்று கூறுகின்றார். அதற்கு ஆலியா மானசா நான் நார்மலா தான் சொன்னேன் என்று கோபத்தோடு கூறுகிறார்.

பார்த்துட்டுப் போகட்டும்
அதைக்கேட்டு நான் சொன்னேன் இப்போ இப்படி கத்தறே என்று மொட்டை மணி கேட்டுக் கொண்டிருக்கிறார். இப்படி இவர்கள் போடும் சண்டை சந்தி சிரித்து கொண்டு இருக்கிறது. இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருக்க அருகில் இருப்பவர்கள் ப்ளீஸ் ரூமுக்குள்ள போய் பேசுவோம் இப்படி பொது இடத்தில் சண்டை போடுவதால் எல்லோரும் நம்மளை தான் பார்க்கின்றார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் ஆலியா மானசா கொஞ்சம் கூட யோசிக்கிற மாதிரி தெரியவில்லை. யாரும் பார்த்தா எனக்கு என்ன பார்த்துட்டு போகட்டும் இப்படித்தான் பேசுவேன் என்று கறாராக பேசிக்கொண்டிருக்கிறார்.

புசு புசு போச்சே
இவர்களின் சண்டை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆலியா மானசா ராஜா ராணி முதல் பாகத்தில் நடிக்கும்போது செம அழகாகவும் க்யூட்டாகவும் இருந்தார். அதன் பிறகு குழந்தை பிறந்ததும் கொஞ்சம் புசுபுசுவென்று மாறிவிட்டார் .ஆனாலும் இந்த சீரியலுக்காக ரொம்பவே கஷ்டப்பட்டு உடம்பை குறைத்து பழைய ஆலியா மானசா வாக களமிறங்கி இருக்கிறார்.

கண்ணுக்கு குளிர்ச்சி
அவருடைய ரசிகர்களின் கண்களுக்கு குளிர்ச்சியாக அடிக்கடி போட்டோஷூட் நடத்திக் கொண்டிருக்கும் இவர் தற்போது இந்த அளவிற்கு படு லோக்கலாக சண்டை வெளியிட்டிருப்பது பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் ஷாக்காகி விட்டனர். சீரியல்களில் மட்டும்தான் படு பவ்வியமாக குழந்தைத்தனமாக இருப்பார்களா ஆனால் உண்மையான முகம் இதுதான் என்று பல நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். அதிலும் சிலர் நீங்க எடுக்கிறதே தெலுங்கு சீரியலில் டப்பிங் தான் ஆனால் அது போலவே இங்கு சண்டையும் போட்டு இருக்கீங்களா என்றும் கேட்டு வருகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications