2 வயசுதான் ஆகுது.. ஐலா பாவம்.. அழுத ஆல்யா மானசா.. சமாதானம் செய்த சஞ்சீவ்- வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐலா பாப்பாவுக்கு 2 வயசுதான் ஆச்சு, பாவம் பாப்பா என மகளை நினைத்து நடிகை ஆல்யா மானசா கண்ணீர் விட்ட காட்சிகள் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் வெளியான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர்கள் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் கார்த்திக். இவர்கள் அந்த சீரியலில் ரீல் ஜோடியாக நடித்தனர்.

பின்னர் இருவரும் காதல் வயப்பட்டு 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஐலா எனும் பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து ராஜா ராணி 2 வில் நடித்த ஆல்யா மானசா, 2ஆவது முறையாக கருவுற்றார்.

 சீரியலில் இருந்து விலகிய ஆல்யா

சீரியலில் இருந்து விலகிய ஆல்யா

அந்த சீரியலில் தன்னால் முடிந்தவரை நடித்தார். பின்னர் அந்த சீரியலில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக நடிகை ரியா விஸ்வநாதன் சந்தியா கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஆல்யாவுக்கு கடந்த மார்ச் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அர்ஷ் என பெயரிடப்பட்டுள்ளது.

குழந்தைகள் சேட்டைகள்

குழந்தைகள் சேட்டைகள்

இதற்கு முன்னர் குழந்தைகளின் சேட்டைகள், புதிய பொருட்களுக்கான விளம்பரம், கர்ப்பிணி போல் அச்சு தயார் செய்வது, குழந்தையின் கை விரல்களை பதிவு செய்வது போன்றவற்றை தங்களது இன்ஸ்டா பக்கத்தில் காட்டினர். தாய்ப்பாலில் நகை செய்வது போன்ற ஐடியாக்களையும் கொடுத்தனர்.

எமோஷனல் வீடியோ

ஆல்யா மானசாவும் சஞ்சீவும் இணைந்து யூடியூப் சேனலை தொடங்கியுள்ளனர். அதில் தாங்கள் கோத்தகிரிக்கு டூர் போன வீடியோவை வெளியிட்டிருந்தார். தற்போது ஆல்யா மோஷனலான ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். ஐலாவை ஸ்கூல்ல சேத்தியாச்சு என்ற தலைப்பில் போட்டுள்ளார்.

 ஐலா முதல் நாள் பள்ளிக்கு செல்லும் காட்சிகள்

ஐலா முதல் நாள் பள்ளிக்கு செல்லும் காட்சிகள்

ஐலா பேக் எடுத்து கொண்டு ஆப்பிள், மாம்பழத்தை ஸ்னாக்காக எடுத்து கொண்டு பள்ளிக்குச் செல்கிறார். அப்போது அவரது கிளாஸ் ரூமில் விடச் செல்லும்போது ஆல்யாவை விட்டு செல்லாமல் பின்னோக்கி செல்கிறார் ஐலா. பின்னர் ஐலாவை தூக்கிக் கொண்டு ஆல்யா உள்ளே சென்றுவிட்டுவிட்டு வருகிறார். அதை பார்க்கும் ஐலா அழுகிறார். உடனே ஆல்யா சஞ்சீவிடம் பாவம் பாப்பா, அழறா என உருக்கமாக பேசுகிறார். பின்னர் முதல் நாள் என்பதால் ஒரு மணி நேரத்தில் பள்ளி வகுப்பு முடிந்துவிடுகிறது. ஆல்யா போய் ஐலாவை அழைத்து செல்கிறார்கள். என்ஜாய் பண்ணியா என கேட்டதற்கு ஐலா எஸ் என்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+