பிரபலம் பளீர்.. பிராப்தம் தோல்வி.. அடுத்து ஆபாச படம்.. கடைசியில் கோமா.. ஜெமினியை ஒதுக்கிய சாவித்திரி
சென்னை: ஜெமினி கணேசனுக்கு அன்றைய காலத்தில், திரையுலகில் மார்க்கெட் குறைந்தபோது, அவரை ஒதுக்கி தள்ளியது சாவித்திரிதான் என்று டாக்டர் காந்தராஜ் கூறியிருக்கிறார்.. சாவித்திரியின் நடிப்பையும் அபாரமாக பாராட்டியிருக்கிறார் காந்தராஜ்.
மூத்த அரசியல் விமர்சகர், டாக்டர் காந்தராஜ் ஒரு பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில், ஜெமினி கணேசன் - சாவித்திரி குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதன் சுருக்கம்தான் இது:

"ஜெமினி கணேசன் மனைவி பாப்ஜி, மாதிரி ஒரு பொறுமைசாலியை நீங்கள் பார்க்கவே முடியாது.. கட்டாயத்தின்பேரில்தான் சாவித்திரியுடன் ஜெமினி கணேசன் இருக்க வேண்டியதா போச்சு.. திரையுலகில் இந்த ஜோடிக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக அதிகம்.. பாப்புலாரிட்டி, சூழ்நிலை போன்றவை காரணமாக இவர்கள் ஒன்றாக இருக்க வேண்டியிருந்தது.
ஆனால், ஜெமினி கணேசன் எந்த பெண்ணையும் தேடி போனதில்லை.. அந்த மகாநதி படத்தில் பொய்யாக காட்டப்பட்டுள்ளது, பல சீன்கள் பொய்யான விஷயங்கள்.. சாவித்திரி பீக்கில் இருந்தபோது, ஜெமினியை புறக்கணித்தாங்க.
பட வாய்ப்புகள்: அதாவது, சிவாஜி படங்களில் 2வது ஹீரோவாக நடித்ததால், படவாய்ப்புகள் ஜெமினிக்கு குறைய துவங்கிவிட்டது.. இதனால் ஹீரோ இடத்திலிருந்து கீழே இறங்கினார்.. எஸ்எஸ்ஆர் செய்த தவறையே ஜெமினியும் அப்போது செய்தார். சிவாஜி படங்களில் 2வது ஹீரோவாக நடித்ததால்தான், அவர் இறங்குமுகத்துக்கு சென்றார்.. அப்போது சாவித்திரியின் மார்க்கெட் ஏறுமுகத்தில் இருந்தது.
சாவித்திரி போல ஒரு நடிகை நமக்கு கிடைக்க மாட்டார். கை கொடுக்கும் தெய்வம் படத்தில், அப்பாவி பெண்ணை போல அருமையாக நடித்திருப்பார்.. நவராத்திரி படத்தில் சாவித்திரியால் மட்டுமே நடிக்க முடியும்.. உச்சத்தில் சாவித்திரி இருந்தபோது, ஜெனிமியை ஓரம் கட்டினார். அவரை புறக்கணித்தது சாவித்திரிதான்.
மலையாள படங்கள்: இதற்கு பிறகுதான் "பிராப்தம்" எடுத்து பெரிய நஷ்டம் சாவித்ரிக்கு ஏற்பட்டது.. பெரிய கடனாளி ஆயிட்டாங்க.. இதன் விளைவு, மலையாள படங்களில் மோசமாக நடிக்கும் அளவுக்கு போனாங்க.. அது இத்தனைக்கும் அவரது ரிடையர்மென்ட் வயதாகும்.. பச்சை ஆபாசமாக நடித்தார்.. தமிழில் 'மாமனாரின் இன்ப வெறி' என்று டப்பிங் செய்து வெளியிட்டார்கள்.. ஆனால் அந்த படம் ஓடவேயில்லை.. சாவித்திரியை அப்படி யாருமே பார்க்க விரும்பவுமில்லை.
பிராப்தம் எடுத்து சாவித்திரி தோல்வி அடைந்தது போலவே, "தட்டுக்கள் திறக்கப்படும்" என்ற படத்தை எடுத்தார் சந்திரபாபு.. அவரே டைரக்ஷன் செய்திருந்தார்.. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அந்த படம், ஓடவேயில்லை.. இதுக்கு காரணம், இங்கிலிஷ் ஸ்டைலில் அந்த கிரைம் படத்தை எடுத்திருந்தார்.. அதனால், அந்த மர்ம முடிச்சுகள் மக்களுக்கு புரியவேயில்லை.. இந்த படம் வெளியான நாளில்தான், "ராமு" படமும் வெளியானது. ஆனால், ராமு சூப்பர் ஹிட், தட்டுங்கள் திறக்கப்படும் சூப்பர் ஃபிளாப்.
பொருளாதார அடி: இப்போ சாவித்திரிக்கும் பொருளாதார அடி, சந்திரபாபுவுக்கும் பொருளாதாரத்தில் அடி.. இதுக்கு அப்பறம்தான் கோமாவில் விழுந்தாங்க.. ஆனால், பரிசு, வேட்டைக்காரன் படத்தின்போதே ஜெமினி - சாவித்திரி இருவருக்குமான தொடர்புகள் குறைந்துவிட்டது. ஆனால் சாவித்திரி கோமாவில் இருந்தபோது, ஓடோடி சென்று கவனித்தது ஜெமினி கணேசன்தான் என்றெல்லாம் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications