கவுண்டமணியின் தில்லு இதுதான்.. எந்த நடிகரும் சொல்லாத வார்த்தை அது.. குழந்தை மனசுக்காரர்: பிரபலம் வாவ்
சென்னை: 'கவுண்டமணி யாருக்காகவும் வளைந்து போக மாட்டார்.. பார்க்க மட்டும்தான் கரடுமுரடாக தெரிவார்.. ஆனால், குழந்தை உள்ளம் கொண்டவர்" என்று மூத்த பத்திரிகையாளரும், பிரபல நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பாராட்டி பேசியிருக்கிறார்.
King 24X7 என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில் நடிகர் கவுண்டமணியின் குணநலன்களை பற்றி புகழ்ந்து பேசியிருக்கிறார். அதன் சுருக்கம்தான் இது:

கவுண்டமணி குழந்தை மனசு கொண்டவர்.. இயற்கையிலேயே திறமைசாலி.. ஆனால், அவரால் நான் ஒருமுறை பாதிக்கப்பட்டேன்.. ஆவாரம் பூ படத்தில், நடிகை ஷர்மிலிக்கு நான் கணவராக நடித்தேன். அந்த காட்சியில் அவரை அலேக்காக தூக்கி சுத்துவது போல் நடித்திருந்தேன். இதை டப்பிங்கில் பார்த்துவிட்டு, என்னை கன்னாபின்னாவென்று திட்டினார்..
ஷர்மிலி: "எதுக்காக இப்படி தூக்கி சுத்தினே? நான்கூட இப்படி தூக்கினது இல்லையே" என்று சொன்னதுமே அங்கிருந்த ஷர்மிலி சத்தமாக சிரித்துவிட்டார்.. டைரக்டர் சொல்லிதான் அப்படி நடித்தேன் என்று சொல்லியும், கவுண்டமணி அதை ஏற்கவில்லை..
அந்த நேரத்தில் பெரும்பாலான படங்களில் கவுண்டமணி படங்களில் எல்லாம், ஷர்மிலியும் நடிச்சிட்டு இருந்தாங்க. இந்த சீன் நடிச்சதிலிருந்து என்னை கவுண்டமணி மன்னிக்கவில்லை.. என்னை அவர் அந்த நடிகையுடன் நடிக்க அனுமதிக்கவுமில்லை.. கவுண்டமணியுடனான காம்பினேஷனில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு இல்லாமலேயே போய்விட்டது.

அவரது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பலரும் பலவிதமாக சொல்வார்கள்.. பாடி டிமாண்டு நடிகர்கள் பலருக்கும் இருக்கிறது.. அவர்கள் எல்லாம் மறைமுகமாக உறவு வைத்திருந்தார்கள்.. ஆனால், இவர் வெளிப்படையாக இருந்தார்.. மது குடிப்பார்.. சிகரெட் பிடிப்பார்..
கார் பிரியர்: முதல்முதலாக மாருதி 800 வாங்கியவர் கவுண்டமணிதான்.. அவரே முதல்நாள் ஓட்டி வந்தார்.. கவுண்டமணி ஒரு கார் பிரியர். 8 கார் வீட்டில் நிற்கும்.. இன்னைக்கு எந்த காரில் ஷூட்டிங் போகலாம் என்று வீட்டு மாடியிலிருந்தே பார்ப்பார்... புதுபுது மாடல்களில் கார் வந்துவிட்டால் உடனே வாங்கிடுவார்...

ஆனால், தாராள குணமுடையவர் கிடையாது.. இதுவரை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பைகூட நடத்தியதில்லை.. "காசுக்கு எழுதறீங்க" என்று வெளிப்படையாகவே சொல்லிவிடுவார்.. அதனால் பத்திரிகையாளர்களுடன் நல்ல இணக்கமாக போக மாட்டார்.. அதேபோல, தனக்கு ரசிகர் மன்றம் வேண்டாம் என்று துணிச்சலாக சொன்ன நடிகர் கவுண்டமணி மட்டும்தான்.
ரசிகர் மன்றம்: பலபேர் அவரிடம் ரசிகர் மன்றம் வைப்பதாக சொல்லி வந்தனர். "எனக்கு சான்ஸ் இருக்கிறதாலதானே ரசிகர் மன்றம் வர்றீங்க? 16 வயதினிலே படத்தில் ஏன் எனக்கு ரசிகர் மன்றம் வைக்கல?"ன்னு நேரடியாக கேட்டுருவார்.. ஆனால் அவர் எது பேசினாலும், அதில் ஒரு உண்மை இருக்கும்.

கவுண்டமணிக்கு சாதி கிடையாது. அதனால், கேஎஸ் ரவிக்குமார்தான், அவரது மகளுக்கு மாப்பிள்ளை பார்த்தார்.. கவுண்டமணிக்கும், கேஎஸ் ரவிக்குமாருக்கும் நல்ல நட்பு உண்டு. தன்னுடைய முதலியார் வகுப்பிலேயே மாப்பிள்ளை பார்த்தார்.. அவரே இந்த கல்யாணத்தையும் முன்னின்று நடத்தினார்.. 2 மருமகன்களுமே நல்ல குணம் கொண்டவர்கள்.
குடும்ப உறுப்பினர்கள்: எப்போதுமே மனைவியை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கவுண்டமணி அழைத்து வந்ததில்லை.. தனியாகத்தான் வருவார்.. இதுவரை அவரது குடும்ப உறுப்பினர்களை நானும் பார்த்ததில்லை.. நடிகைகள் யாராவது சரியாக நடிக்காவிட்டாலோ அல்லது வசனம் சரியாக சொல்லாவிட்டாலோ, அங்கேயே திட்டிவிடுவார். இதுக்காகவே ஹீரோயின்களுடன் அவருக்கு காம்பினேஷன் இருக்காது..
இப்போது "ஒத்த ஓட்டு" என்ற அரசியல் கலந்த நையாண்டி படத்தில் நடிக்கிறார்.. 85 வயசிலும் ஹீரோவாக நடிக்கிற ஒரே இந்திய நடிகர் கவுண்டமணிதான்.. இப்பவும் அவருக்கு நல்ல ஞாபகசக்தி இருக்கு.. நல்லா வசனம் பேசுறார். ஆனாலும் படங்களை அவர் ஒத்துக் கொள்வதில்லை.. "ஒத்த ஓட்டு" படத்தின் கதைக்காக மட்டும் அவர் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
மயங்க மாட்டார்: கலைமாமணி, சிறந்த நடிகர் போன்ற விருதுகளை எல்லாம் அவருக்கு தர பார்த்தாங்க.. ஆனால் எதற்குமே அவர் மயங்கவில்லை.. எந்த ஆட்சி வந்தாலும், துணிச்சலாக கிண்டல் செய்வார்.. ஹீரோக்களுடன் அட்ஜஸ்ட் செய்தால்தான் வாய்ப்பு என்பார்கள்.. ஆனால், கவுண்டமணி யாருக்காகவும் வளைந்து போக மாட்டார்..
என் மகளின் கல்யாண பத்திரிகையை தந்து, அவருக்கு அழைப்பு விடுத்திருந்தேன். ஆனால், கழுத்துவலி காரணமாக தன்னால் திருமணத்துக்கு வர முடியவில்லை என்று, எனக்கு போன் செய்து சொன்னார்.. அதேசமயம், பிள்ளைகளுக்கு வாழ்த்துக்களை சொல்லிடுமாறும் என்னிடம் சொன்னார்..
குழந்தை உள்ளம்: இதை என்னிடம் சொல்லாமல்கூட அவர் தவிர்த்திருக்கலாம்.. அல்லது வேறு யாரிடமாவது போனில் சொல்ல சொல்லியிருக்கலாம்.. அவரே நேரடியாக போன் செய்து சொல்லும் அளவுக்கு பண்பானவர்.. கவுண்டமணி பார்க்க மட்டும்தான் கரடுமுரடாக தெரிவார்.. ஆனால், குழந்தை உள்ளம் கொண்டவர்" என்று பெருமைபட பேசியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications