Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனைவிக்காக டி.ராஜேந்தர் எழுதிய வைகைக்கரை காற்றே.. செம உயிருள்ளவரை உஷா! டிஆர் வீட்டில் மலைத்த பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: யாரிடமும் உதவி இயக்குநராக டி.ராஜேந்தர் இருந்ததில்லை. யாரிடமும் முறைப்படி இசை கற்கவில்லை.. எனினும், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, இயக்கம் என்ற டைட்டிலுடன் திரையுலகில் நுழைந்தவர். மூத்த நடிகை பானுமதிக்கு பிறகு அஷ்டாவதானி என்ற பட்டத்தை பெற்றவர். அறிமுக இயக்குநருக்கு பணம் வாங்காமலேயே தன்னுடைய பாடலை பயன்படுத்திக்கொள்ள டி.ராஜேந்தர் அனுமதி அளித்துள்ளது, அவரது ரசிகர்களிடையே நெகிழ்ச்சி, மகிழ்ச்சியை உண்டுபண்ணி வருகிறது. என்ன நடந்தது தெரியுமா?

சினிமா துறையில் ஒழுக்கம், பண்பு, அடக்கம், அன்பு, தயாள குணம் என்று பல பெயர்களையும் பெற்ற சாதனையாளர் டி.ராஜேந்தர்.. இதில், டி.ஆரின் உதவும் குணம் பலரும் அறியாதது..

Television t Rajendar Uyirullavarai Usha

டி.ராஜேந்தரின் பெருந்தன்மை

தன் அம்மாவுக்கு உடம்பு சரியில்லேன்னு யார் சொன்னாலும்சரி, உடனே கலங்கிடுவார்.. பணம் தந்து, உடனே போய் பார்த்துவர சொல்லுவாராம்..

அம்மா மீது நிறைய பிரியம் உண்டு.. ஷூட்டிங், சட்டசபை என எங்கு கிளம்பினாலும், தன்னுடைய அம்மா படத்தை கும்பிட்டு, கீழே விழுந்து 3 முறை சாஷ்டாங்கமாக வணங்கிவிட்டுதான் கிளம்புவார்.. கட்சியை துவங்கி ஏராளமான நலத்திட்டங்களை வழங்கியவர்.

டி.ராஜேந்தர் பாடல்கள் என்றாலே அது ரிக்கார்டு ஹிட்தான்.. சமீபகாலமாகவே, பழைய படங்களின் ஹிட் பாடல்களை புதிய படங்களில் பயன்படுத்துவது தற்போதைய இயக்குநர்களின் டிரெண்ட் ஆகி கொண்டிருக்கிறது.. அந்தவகையில், டி.ஆரின் பாடல் ஒன்றும் தற்போது பேசுபொருளாகி வருகிறது.

வைகைக்கரை காற்றே

சசிகுமார் என்பவர் முதல்முதலாக ஒரு படம் இயக்க போகிறார்.. தன்னுடைய படத்தில் காதல் காட்சி ஒன்றில் பழைய ஹிட் பாடலை பயன்படுத்த முடிவு செய்து, இதற்காக
டி.ராஜேந்தர் எழுதி, இசையமைத்து, இயக்கிய உயிருள்ளவரை உஷா படத்தில் இடம்பெற்ற 'வைகைக்கரை காற்றே நில்லு என்ற பாடலை பயன்படுத்த நினைத்தார்..

இந்த அனுமதியை பெறுவதற்காக டி.ராஜேந்தர் வீட்டுக்குநேரில் சென்றார் சசிகுமார். படத்தின் கதையை சொன்னதுமே, அதைக்கேட்டு நெகிழ்ந்து போய்விட்டாராம் டி.ராஜேந்தர்,.. உடனே பணமே வாங்காமலேயே தன்னுடைய பாடலை பயன்படுத்திக்கொள்ள சசிகுமாருக்கு அனுமதி தந்துள்ளார்.

வாயடைத்து போன சசிகுமார்

அதுமட்டுமல்ல, அந்த அறிமுக இயக்குநரை ஊக்கப்படுத்தும் வகையில் ஒரு செல்போனையும் பரிசாக தந்திருக்கிறார்..

அந்த பாடலின் உரிமத்தை இதுவரை எவருக்கும் விற்காமல் இன்றுவரை தன்னிடம் வைத்திருந்தார் டி.ராஜேந்தர்.. பணம் எதுவும் வாங்காமல் பாடல் அனுமதி தந்ததுடன், செல்போனை பரிசளித்ததால் சசிகுமார் வியப்பில் வாயடைத்து போய் நின்றிருக்கிறார்.. இந்த மகிழ்ச்சி செய்தியை தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்திலும் அந்த டைரக்டரே பதிவிட்டுள்ளார்.

முதல் பிரம்மாண்ட செட்

இதற்கு நடுவில் 1983ல் வெளியான உயிருள்ளவரை உஷா படத்தை, 4கே தரத்தில் மேம்படுத்தி அடுத்த மாதம் ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக டி.ராஜேந்தர் கூறியிருக்கிறார்.. தஞ்சை சினி ஆர்ட்ஸ் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி முதல் முறையாக தயாரித்த படம்தான் உயிருள்ள வரை உஷா..

தன்னுடைய காதலியின் பெயரையே அந்த படத்தின் டைட்டிலாக வைத்து எடுத்தார் டி. ராஜேந்தர்.. தனது காதலியின் நினைவாக எடுக்க நினைத்த படத்தில் வேறு ஹீரோவை நடிக்க வைப்பதற்கு பதிலாக தானே ஹீரோவாக தோன்றி நடித்திருந்தார்..

அதேபோல் பிரமாண்ட செட்களுக்கு பெயர் போன டிஆர், முதன்முதலில் செட்களை அமைத்து ரசிகர்களை ஈர்த்ததும் இந்த படத்தில்தான்.. ரிலீசாவதில் பல சிக்கல்கள் இருந்தாலும், இப்படம் சூப்பர் ஹிட்டானது.. 42 வருடங்கள் கழித்து தற்போது, இப்படத்தை ரீரிலீஸ் செய்ய போவதாக கூறியிருப்பது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை தந்து வருகிறது.

புதுமனைவி உஷாவை பிரிந்து

இந்த படத்தில் வைகை கறை காற்றே நில்லு உட்பட அனைத்து பாடல்களுமே ஹிட்டடித்தது.. திருமணம் முடிந்து புதுமனைவி உஷா வெளிநாடு சென்றிருந்தபோது, அவரை நினைத்து வைகை கறை பாடலை டிஆர் எழுதியிருந்தாராம்.. அப்படிப்பட்ட சென்ட்டிமென்ட் பாடலை அறிமுக இயக்குநருக்கு டி.ராஜேந்தர் பணம் வாங்காமல் தந்து, அவருக்கு பரிசும் தந்திருப்பது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

அதிலும், டிஆரின் ரசிகர்கள், அவர்தான் எங்கள் தலைவர்.. பாட்டுக்கு முன்னாடி நோட்டு முக்கியமில்லை என்று கமெண்ட்களை பதிவிட்டு உச்சிமுகர்ந்து பாராட்டி கொண்டிருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+