ஐஸ்வர்யா ராய் பற்றி பெண் கேட்ட கேள்வி.. சட்டென முகம் சிவந்த அமிதாப்பச்சன்! நேரடியாக சொன்ன வார்த்தை
சென்னை: நடிகர் அமிதாபச்சன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஒரு பெண் போட்டியாளர், ஐஸ்வர்யா ராய் அழகை புகழ்ந்து பேசி அவருடைய அழகின் ரகசியம் பற்றி கேட்டதும் அதற்கு அமிதாபச்சன் எதிர்பார்க்காத பதில் கொடுத்திருக்கிறார்.
90's கிட்ஸ்களின் ஃபேவரைட் கதாநாயகிகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்திருந்தார். நடிகையாக மட்டுமல்லாமல் உலக அழகியாகவும் பட்டம் பெற்ற ஐஸ்வர்யா ராய்க்கு இப்போது உள்ள 2k கிட்ஸ்கள் கூட ரசிகர்களாக இருக்கிறார்கள். அதிலும் சிலர் பேச்சு வாக்கில் அடுத்தவர்களிடம் பேசும்போது கூட நீ என்ன பெரிய உலக அழகி ஐஸ்வர்யா ராயா? என்று கேட்பதை கேட்டிருப்போம்.

ஐஸ்வர்யா ராய் உலக அழகி பட்டத்தை 1997 ஆம் ஆண்டு பெற்றிருக்கிறார். அதற்கு பிறகு பலர் உலக அழகி பட்டத்தை பெற்றிருக்கிறார்கள். ஆனாலும் இப்போதும் உலக அழகி என்றதும் டக்கென்று மனதில் ஐஸ்வர்யா ராய் தான் நினைவிற்கு வருகிறார். அவருக்கு இப்போது 51 வயதாகிறது. ஆனாலும் அவருடைய அழகு பலரையும் வியக்க வைத்திருக்கிறது.
இந்த நிலையில் ஐஸ்வர்யாராயின் மாமனாரான அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் போட்டியாளர் ஐஸ்வர்யா பற்றி பேசியது இணையத்தில் விவாதிக்கப்படுகிறது. நடிகர் அமிதாபச்சன் கோன் பனோகாகுரோர்பதி என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அவர் இந்த நிகழ்ச்சியை கடந்த 25 ஆண்டுகளாக நடத்திவரும் நிலையில் தற்போது 25 வது ஆண்டைக் குறிக்கும் வகையில் ஜூனியர் பிரிவு கோன் பனேகா குரோர்பதி என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அதில் பிரனுஷா தாம்பே என்ற இளம் பெண் போட்டியாளராக கலந்து கொண்டார். அவர் அமிதாப்பச்சனிடம் ஐஸ்வர்யா ராய் அழகு குறித்து வியந்து பேசியிருக்கிறார். அமிதாப் பச்சனிடம் சார் ஐஸ்வர்யாராய் மிகவும் அழகாக இருக்கிறார் என்று சொல்கிறார். அதற்கு அமிதாப்பச்சன் ஆமாம் அவர் அழகு என்பது எனக்கு தெரியும் என்று சொல்கிறார்.
விவாகரத்து வதந்திக்கு மத்தியில் துபாயில் நடந்த சம்பவம்.. ஐஸ்வர்யா ராய் பெயர் மாறி இருக்கு!
அதற்கு அந்த பெண் ஐஸ்வர்யா ராய் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை... அவர் மிகவும் அழகு சார். நீங்க அவருடன் தானே வசிக்கிறீர்கள் எனக்கு அழகாய் இருக்க சில ஆலோசனைகளை சொல்லுங்களேன் என்று கேட்கிறார். அதற்கு அமிதாப்பச்சன் நான் ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். உங்கள் முகத்தில் இருக்கும் அழகு சில ஆண்டுகளில் மறைந்து போகும். ஆனால் இருதயத்தில் இருக்கும் அழகுதான் மிகவும் முக்கியம் என்று சொல்லி இருக்கிறார்.

ஐஸ்வர்யா ராய் பற்றி கேட்டதும் அபிஷேக் பச்சன் இப்படி ஒரு பதில் சொன்னதை அந்தப் பெண் எதிர்பார்க்கவில்லை என்பது போல ரியாக்ஷன் கொடுத்திருக்கிறார். நடிகை ஐஸ்வர்யா ராயும் அபிஷேக் பச்சனும் கடந்து 2007 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் 18 வருடங்களாக திருமண வாழ்க்கையில் வாழ்ந்து வரும் நிலையில் அவர்களுடைய கருத்து வேறுபாடுகள் குறித்து எந்த இடத்திலும் பகிர்ந்து கொண்டது கிடையாது.
ஒரே நாளில் ஃபேமஸான பிரவுன் பியூட்டியா இது! ஐஸ்வர்யா ராய் ரேஞ்சுக்கு மாறிட்டாங்களே! இதுதான் விஷயமா?
ஆனால் ஐஸ்வர்யா ராய் அவருடைய கணவரை பிரியப் போகிறார் என்று அடிக்கடி இணையத்தில் செய்திகள் வலம் வருகிறது. அது குறித்து விளக்கத்தையும் இந்த தம்பதி கொடுத்ததில்லை. ஆனால் சில நிகழ்ச்சிகளில் ஜோடியாக வந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார்கள். அதேபோல சில நிகழ்ச்சிகளில் ஐஸ்வர்யா ராய் தனியாக தன்னுடைய மகளோடு கலந்து கொள்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications